நாவல்கள் - Welcome to Sramakrishnan


‘நாவல்கள்’

பல்கலைக்கழகத்தில்

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் எனக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதை துணைவேந்தர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வினைச்  சிறப்பாக வடிவமைத்து ஏற்பாடு செய்தவர் சிறந்த கல்வியாளரும் எழுத்தாளருமான முனைவர் அ.ராமசாமி. ஒரிசாவின் முன்னாள் கவர்னர் எம்.எம். ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர் தி.சு. நடராஜன், எழுத்தாளர் ரவிக்குமார். எழுத்தாளர் இமயம், எழுத்தாளர் சோ.தர்மர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மதிய அமர்வில் விமர்சகர் முருகேச பாண்டியன். விமர்சகர் நவீனா, மற்றும் [...]

நன்றிகள்

சாகித்ய அகாதமி விருது பெறுவதற்காக டெல்லி சென்று இன்றிரவு  சென்னை திரும்பினேன். டெல்லியில் நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்பு செய்த ஊடகங்களுக்கும் செய்தி வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி. இணையத்தில் நிறைய நண்பர்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கும் நன்றி. சிற்பி பாலசுப்ரமணியம், மாலன், பாரதிபாலன். புதுவை முருகன், தமிழவன், உள்ளிட்ட  சாகித்ய அகாதமி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டெல்லியில் ஐந்து நாட்களும் உடனிருந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். [...]

புத்தக வெளியிட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில்  இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய நூல்கள் சிவப்பு மச்சம் – சிறுகதை தொகுப்பு ரயில் நிலையங்களின் தோழமை – பயணக்கட்டுரைகள் கதைகள் செல்லும் பாதை – உலகச் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள் பறந்து திரியும் ஆடு – சிறார் நாவல் பெயரற்ற நட்சத்திரங்கள் – உலக சினிமா கட்டுரைகள் புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க [...]

அமேஸானில் கவிஞர் பிரமிள்

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முயற்சியால் கவிஞர் பிரமிளின் நூல்கள் தற்போது அமேஸானில் ஈபுக்காக விற்பனைக்கு கிடைக்கின்றன. ••• பிரமிள் (1939-1997), நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தருமு சிவராம் என்றும் அறியப்பட்டவர். காலாதீதத்திலும் இக்கணத்திலும் அலையும் அவருடைய கவிதையும் ஆய்வுக்கூர்மை, தீவிரம், பன் முகத்தன்மை நிறைந்த அவருடைய விமர்சனமும் அவரது இருபெரும் சிகரங்கள். மேலும் புனைகதை, நாடகம், ஓவியம், சிற்பம், ஆன்மீகம், மறை முக ஞானம் ஆகியவற்றிலும் அவரது ஆற்றலும் வெளிப்பாடும் உயரிய நிலையைப் பெற்றுள்ளன. [...]

எலியின் பாஸ்வேர்டு

தேசாந்திரி பதிப்பக வெளியீடு – 6 சிறார்களுக்காக எழுதியுள்ள கதை. பாம்புகளிடமிருந்து தங்களை பாதுகாக்க கொள்ள எலிகள் ஒன்று கூடி தங்கள் வளையை டிஜிட்டல் கதவு ஒன்றைக் கொண்டு மூடிவிட திட்டமிட்ட கதை. அட்டை வடிவமைப்பு ஹரி பிரசாத் ••

போர்ஹெஸ்

போர்ஹெஸ் சிறுகதைகள், கட்டுரைகள் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பினை யாவரும் பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்துள்ளது. போர்ஹெஸை தமிழுக்கு அறிமுகம் செய்து அவரது கதைகள் கவிதைகளை  தொடர்ந்து மொழியாக்கம் செய்தவர் கவிஞர் பிரம்மராஜன். அவரது மீட்சி சிறுபத்திரிக்கை உலகில் மிகவும் தனித்துவமான இதழாகும். உலக இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்தததில் மீட்சி பெரும்பங்கு வகித்திருக்கிறது. ஆங்கிலப் பேராசிரியரான பிரம்மராஜன் சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், குற்றாலம் கவிதை பட்டறையை கலாப்ரியாவோடு இணைந்து நடத்தியவர். பிரம்மராஜன் தொகுத்த போர்ஹெஸ் சிறுகதைகள் முன்னதாக ஸ்நேகா [...]

கோணங்கி

எனது தாவரங்களின் உரையாடல் சிறுகதை தொகுப்பு குறித்து 1998ல் கோணங்கி எழுதிய விமர்சனம் ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்தேன். இது காலக்குறி இதழில் வெளியானது என நினைக்கிறேன். தாவரங்களின் உரையாடல் என்னை அடையாளப்படுத்திய சிறுகதை தொகுதி. அதன் புதியபதிப்பு தேசாந்திரி பதிப்பகம் மூலம் வெளியாக உள்ளது. அந்த மகிழ்வில் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் •••• தாவரங்களின் மொழிவலையில் விரியும் கதைப்பரப்பு – கோணங்கி எஸ். ராமகிருஷ்ணனின் மூன்றாவது கட்டக்கதைகள் பதினெட்டில் ஊடுருவியபோது பனிரெண்டு கதைகளுக்குள் சந்தடியற்ற காலடிகளோடு நெருங்கும் [...]

இடக்கை– நூல் விமர்சனம்

- கணேஷ் பாபு  சிங்கப்பூர் வரலாற்றின் நீண்ட பயணத்தில், மனிதன் அதிகமும் நம்பிக்கைவைத்திருந்தது நீதியின் மீதுதான். சமூகமாக மனிதன் வாழத் துவங்கியதிலிருந்து அவன் தனது வாழ்வின் காப்பாக நீதியைத்தான் நம்பிவந்திருக்கிறான். அதே சமயம் அவன் அச்சம் கொண்டது, நீதியை கையாள்பவர்களிடமும், நீதியை தீர்மானிப்பவர்களிடமும்தான். இந்தப் புள்ளியில்தான் அதிகாரம் என்ற மாபெரும் சக்தியை மனிதன் எதிர்கொள்ள நேர்கிறது. தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நீதியை செலுத்தக்கூடிய கரங்கள் அதிகாரம் என்ற பீடத்தில்தான் நிலைகொண்டுள்ளது என்று அறியநேர்கையில் மனித மனதில் [...]

மதுரையில்

மதுரையில் நடைபெற்ற கவிஞர் கலாப்ரியா நிகழ்வு குறித்த பதிவுகள்

கடவுளின் நாக்கு

தி இந்து நாளிதழில் செவ்வாய்கிழமை தோறும் நான் எழுதிவரும் கடவுளின் நாக்கு என்ற பத்தி ஒராண்டினைக் கடந்து செல்கிறது. இதைச் சாத்தியமாக்கிய தி இந்து ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், மானா பாஸ்கர் ஆகியோருக்கு அன்பும் நன்றியும். கல்வி நிலையங்களில் இந்தப் பத்தியை மாணவர்கள் கூடி வாசிக்கிறார்கள். ஆசிரியர்கள் பலரும் வகுப்பறையில் பகிர்ந்து கொள்கிறார்கள். நீதியரசர் துவங்கி சலூன்காரர் வரை பல்தரப்பட்டவர்கள் இதை வாசித்துப் பாராட்டுகளைத் தெரிவித்து வருவது சந்தோஷம் அளிக்கிறது. பத்தி குறித்து ஒவ்வொரு [...]

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: