நாவல்கள் - Welcome to Sramakrishnan


‘நாவல்கள்’

எச்சரிக்கை

எனது ஈமெயில் ஐடியை இன்று மாலை ஐந்துமணிக்கு மும்பையைச் சேர்ந்த ஒரு ஐபி முகவரியிலிருந்து ஹேக் செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குப் போலியான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். Pay attention to this news or Read this article என மருத்துவத் தகவல் மற்றும் நலம் விசாரிப்பு சார்ந்த செய்தி கொண்ட ஆங்கில மின்னஞ்சல் எனது மெயில்ஐடியிலிருந்து வந்திருந்தால் அதை உடனே நீக்கிவிடவும். அது ஒரு வைரஸ். தற்போது எனது மின்னஞ்சலை மீட்டுவிட்டேன் ***

இலக்கிய இதழ்

புகழ் பெற்ற கலை இலக்கிய இதழான Journal of Arts and Ideas யின் பழைய இதழ்கள் ஆன்லைனில் வாசிக்க கிடைக்கின்றன. http://dsal.uchicago.edu/books/artsandideas/ 1983ம் ஆண்டு Journal of Arts and Ideas வெளியிட்ட மார்க்வெஸ் சிறப்பிதழ் அற்புதமானது. அதில் Writers’ Kitchen: An Interview with Marquez என்ற விரிவான நேர்காணல் உள்ளது. அது தான் நான் வாசித்த மார்க்வெஸின் முதல்நேர்காணல். முக்கியமான நேர்காணல்களில் இதுவும் ஒன்று. http://dsal.uchicago.edu/books/artsandideas/toc.html?issue=2

யாமம் பிரெஞ்சில்

எனது யாமம் நாவலை பிரெஞ்சில் வெளியிடுவதற்கு அங்குள்ள மிக முக்கிய பதிப்பகம் ஒன்று உரிமை கேட்டுள்ளது. பத்து இந்திய எழுத்தாளர்களின் நாவல்கள் பிரெஞ்சில் வெளிவர உள்ளன, அதில் ஒன்றாக யாமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்குள் அதன் மொழியாக்க பணிகள் நடைபெற்று 2015 இறுதியில் பிரெஞ்சில் வெளியாகயுள்ளது •••

முகாம் புகைப்படங்கள்

ஜுன் 14 மற்றும் 15 தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நாவல் இலக்கிய முகாம் புகைப்படங்கள்

எழுத்தாளர் ஷாஜகான்

எழுத்தாளர் ஷாஜகான் எனது விருப்பத்திற்குரிய நண்பர், அவரைக் காண்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தேன், திருமங்கலத்தில் வசிக்கும் அவரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன், ஷாஜகான் சிறந்த சிறுகதை எழுத்தாளர்,காட்டாறு என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார், வம்சி பதிப்பக வெளியீடு, நல்ல பேச்சாளர், தீவிர இலக்கிய வாசகர், மாற்றுக் கல்வி குறித்த நூல்களை மொழியாக்கம் செய்து வருபவர்.பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார், ஷாஜகானும் எழுத்தாளர் கந்தர்வனும் ஜோடிகள், இருவரும் பேச ஆரம்பித்தால் சிரித்து உருள வேண்டியிருக்கும், கேலியும் கிண்டலுமாக பேசிக் [...]

மண்புழு

சூழலியல் சார்ந்த கருத்துகளை முதன்மைப்படுத்தி மண்புழு என்றொரு அழகிய சிற்றிதழை திருவண்ணாமலையில் செயல்படும் குக்கூ அமைப்பு துவக்கியுள்ளது குக்கூ, குழந்தைகளின் படைப்பாளுமையை உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரிய அமைப்பாகும். மசானபு புகோகோவின் இயற்கைக்குத் திரும்பும் பாதை என்ற நூலை டாக்டர் வெ.ஜீவானந்தம் அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார், அந்த நூலை தமிழ்நாடு பசுமை இயக்கத்துடன் இணைந்து குக்கூ விநியோகம் செய்கிறார்கள் இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் குழந்தைகளின் படைப்புலகம் சார்ந்த  இதழாக மண்புழு உருவாக்கபட்டுள்ளதாக  குக்கூ தெரிவிக்கிறது, முதல் [...]

நன்றி

எனக்கு இயல் விருது கிடைத்துள்ளதற்காக உயிர்மை நடத்திய பாராட்டுவிழா காமராஜர் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து , பேராசிரியர் ஞானசம்பந்தம், இறையன்பு ஐஏஎஸ், விஜயசங்கர்(எடிட்டர் பிரண்ட்லைன்) செம்மலர் ஆசிரியர் எஸ்ஏபெருமாள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள் சூப்பர் ஸ்டாரின் உணர்ச்சிபூர்வமான உரை நிகழ்வின் தலையான விஷயமாக இருந்தது, எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியம் மீதான அவரது ஈடுபாடும் அக்கறையும் முன்னோடியான செயல்பாடு என்றே சொல்வேன் வைரமுத்து அவர்கள் எனது புத்தனாவது [...]

புத்தகக் கண்காட்சி

ஜனவரி 5ம் முதல் 17 வரை சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது, இதில்  6 தேதி முதல் 11ம் தேதி வரை தினமும் மாலை 4. 30 மணிக்கு உயிர்மை அரங்கிற்கு வருகை தருவேன், சந்திக்க விருப்பம் உள்ள  வாசகர்கள் அவசியம் வரலாம் ••• இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை பபாசி ஏற்பாடு செய்துள்ளது. விமர்சகர் க.நா.சு நூற்றாண்டையொட்டி அவர் பெயரிடப்பட்டுள்ள F 35 அரங்கில் இந்த [...]

இலக்கியச் சொற்பொழிவு

நவம்பர் 21 முதல் 27 வரை சென்னை ருஷ்யக் கலாச்சார மையத்தில் ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து தொடர் சொற்பொழிவு நடத்த இருக்கிறேன், தினமும் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக.

திருத்தம்

உடற்கூறு வண்ணம் பாடலை எழுதியது அருணகிரி நாதர் இல்லை பட்டினத்தார் என்று நண்பர் கார்த்திகை பாண்டியன் சுட்டிக்காட்டி உள்ளார், என்னிடம் உள்ள பாவலர் சரித்திர தீபகம் அதை அருணகிரி நாதர் என்று அடையாளப்படுத்தியிருந்ததால் உருவான தவறு அது, மன்னிக்கவும் அருணகிரி நாதர் பற்றிய எனது அவதானிப்பு இந்த ஒருபாடலின் வழியாக மட்டும் உருவானதில்லை,  அவரது திருப்புகழ் பற்றிய உயர்வெண்ணம் அப்படியே தானிருக்கிறது அது  போலவே பட்டினத்தாரின்  உடற்கூறு வண்ணம் மீதான வியப்பும் தீராமலேயிருக்கிறது இதன் ஆங்கில மொழியாக்கம் [...]

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: