ஓவியங்கள் - Welcome to Sramakrishnan


‘ஓவியங்கள்’

மதுரைக்காட்சிகள்

தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் வரைந்த மதுரைக்காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன, கோட்டையுள்ள மதுரையைக் காண்பது வசீகரமாகயிருக்கிறது. 200 வருஷங்களில் காலம் எவ்வளவு மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது டேனியலின் ஒவியத்தில் காணப்படும் மதுரை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது, செடி முளைத்துப் போய்ப் பராமரிக்கபடாத நாயக்கர் காலத்துக் கோட்டை, வேலைப்பாடு மிக்க நுழைவாயில், கிணற்றில் தண்ணீர் இறைப்பவர்கள், சாவகாசமாக உட்கார்ந்திருக்கும் இருவர், கோட்டை மதிலின் உறுதி, வாழை மரம். பொதிமாடு, நாட்டு ஒடு கொண்ட வீடு, வெளிறிய மேகம், ஒவியத்தில் பலரும் தலைப்பாகை [...]

களக்காடு

நிலக்காட்சிகளை வரைவதில் தேர்ச்சி பெற்ற தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் என்ற இரண்டு பிரிட்டிஷ் ஒவியர்கள் 1792ல் கன்னியாகுமரி பகுதியில் பயணம் செய்த போது களக்காடு கோவிலை ஒவியமாக வரைந்திருக்கிறார்கள் 222 வருஷங்களுக்கு முந்தைய தமிழகத்தின் அரிய ஒவியக்காட்சியது, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ளது களக்காடு. இங்குள்ள  சத்யவாகீஸ்வரர் கோவில் அழகிய ஒவியங்களும் இசைத் தூண்களும் சிற்பங்களும் கொண்டது,  கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. சுற்றிலும் பசுமையான வயல்களையும், [...]

நிலவும் நாணயங்களும்

நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞனுக்குக் காலடியில் கிடக்கும் நாணயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள் உலகெங்கும் கலைஞர்கள் தனது கற்பனையுலகோடு, தனது படைப்பாற்றலின் முழுவீச்சோடு இயங்கவே ஆசைப்பட்டிருக்கிறார்கள் தன் விருப்பபடி வாழ்வதற்கு உலகம் அனுமதிக்காது என்பதை உணர்ந்து கொண்டு, அதை மீறிச் செயல்பட்டிருக்கிறார்கள்,  பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரது வாழ்வும் நாடோடிகளின் வாழ்க்கைமுறையைக் கொண்டதே வாழ்க்கையை அதன் தீவிரத்தோடு எதிர்கொண்டு தன்னைப் பலிக் கொடுத்த ஒவியர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், நாவலாசிரியர்கள் என நிறையப் பேர் என் நினைவில் வந்து [...]

மில்லேயின் ஒவியங்கள்

பிரெஞ்சு ஒவியர் பிரான்ஸுவா மில்லே (Jean-François Millet) ஒவியங்களை நியூயார்க்கில் பார்த்திருக்கிறேன், அவரை எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கியக் காரணம் “no teacher other than nature” என்ற அவரது ஒரு வாசகம், அந்த வரியை எனது நாட்குறிப்பின் முதல்பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறேன், மில்லே விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர், பாரீஸில் தங்கி ஒவியம் கற்றுக் கொண்டிருக்கிறார், இவரது ஒவியங்களை ஹென்றி ரூசோ மிகவும் பாராட்டியிருக்கிறார், கிராமப்புற விவசாய வாழ்க்கையை ஒவியமாக வரைந்தவர்களில் மில்லே முக்கியமானவர், இவரது ஒவியங்களில் வான்கோவின் பாதிப்புகளைக் [...]

மார்க் ஷகாலின் ஆடு

மார்க் ஷகாலின் (Marc Chagall)  I and the Village  என்ற ஒவியத்தினை நியூ யார்க் ம்யூசியம் ஆப் மார்டன் ஆர்டில் பார்த்தபோது ஆஹா என்னவொரு அற்புதமான ஒவியம் என வியப்பு மேலோங்கியது, ஷகாலின் இந்த ஒவியத்தின் நகல்பிரதியை முன்பே கண்டிருக்கிறேன், ஆனால் அதற்கும், ஒரிஜினல் ஒவியத்தை நேரில் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை அன்று  என்னால் துல்லியமாக உணர முடிந்தது, பார்ப்பவர் எவரும் அந்த ஒவியத்திலிருந்த தலையை திருப்பமுடியாத, மாயக்கவர்ச்சியொன்று அவ்வோவியத்திலிருந்தது, அதன் முன்பாக நின்றபடியே [...]

தேர்தல் ஒவியங்கள்

பிரிட்டீஷ் ஒவியரான வில்லியம் ஹோகார்த் (William Hogarth) மிக முக்கியமான ஒவியர், கேலிச்சித்திரக்காரர், காமிக்ஸ் புத்தகங்களின் முன்னோடி, சமூகவிமர்சகர், அரசியல் கேலிச்சித்திரங்களை வரைவதில் சிறப்பானவர், 1720ல் லத்தீன் ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் ஹோகார்த், செதுக்கோவியங்களில் தீவிரப்பயிற்சி பெற்று தேர்ந்த செதுக்கோவியக் கலைஞராக திகழ்ந்தார், சூதாட்டம், கள்ளச்சந்தை, மிருகங்களை சித்ரவதை செய்வது, அரசியலில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி வெளிப்படையான கண்டனத்துடன் ஒவியங்களை வரைந்திருக்கிறார் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரில் நடைபெற்ற தேர்தல் குறித்து கேலியான நான்கு செதுக்கோவியங்களை ஹோகார்த் வரைந்திருக்கிறார், 1755ல் [...]

லாட்ரெக்கின் இரவுக்காட்சிகள்

மோலின் ரோஜ் எனப்படும் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஆஸ்கார் பரிசு வென்றது, அந்தப் படத்தில் ஒவியர் டாலெஸ் லாட்ரெக் ஒரு முக்கிய கதாபாத்திரமாகச் சித்தரிக்கபட்டிருப்பார், லாட்ரெக் கேபரே நடனமாடும் பெண்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர், வேசைகள், நடனக்காரிகள், சூதாட்டவிடுதிப்பெண்கள் இவர்களே அவரது உலகம், பாரீஸ் நகரின் இரவு வாழ்க்கையை ஒவியமாக வரைந்தவர் லாட்ரெக், , அவரது ஒவியங்களை பாஸ்டன் ம்யூசியத்திலும் நியூயார்க் ம்யூசியத்திலும் பார்த்திருக்கிறேன், லாட்ரெக், டீகாஸ் இவரும் நடனப்பெண்களை அதிகம் வரைந்திருக்கிறார்கள், இதில் லாட்ரெக் [...]

ஜிப்சியும் சிங்கமும்

ஹென்றி ரூசோவின் The Sleeping Gypsy ஒவியத்தை நியூயார்க் மார்டன் ஆர்ட் ம்யூசியத்தில் பார்த்தேன், கண்களை அகற்றவே முடியவில்லை, மயக்கமூட்டும் வசீகர ஒவியமது, பாலைவனத்தில் உறங்கும் ஜிப்சியும், அவளை உற்றுநோக்கியபடி அருகில் நிற்கும் சிங்கமும், நிலவொளிரும் இரவுமான அவ்வோவியத்தினை ரூசோ பற்றிய புத்தகங்களில் பார்த்திருக்கிறேன், ஆனால் நேரில் அதன் முன்பு நின்றபோது சந்தோஷத்தில் சிலிர்த்துப் போனேன் ரூசோவின் ஒவியங்கள் சிலவற்றை டெட்ராய்ட் ம்யூசியத்தில் முன்னதாகப் பார்த்திருக்கிறேன், ஆனால் ஜிப்சி ஒவியத்தை அப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன், நியூயார்க்கில் [...]

கிளிம்டின் முத்தம்

கஸ்டவ் கிளிம்ட் (Gustav Klimt) எனது விருப்பமான ஒவியர்களில் ஒருவர், இவரது முக்கிய ஒவியங்கள் பலவற்றை நேரில் கண்டிருக்கிறேன், வியன்னாவைச் சேர்ந்த கிளிம்ட்டின் ஒவியங்கள் தனித்துவமிக்கவை, அவரது காலத்தில் இவ்வோவியங்கள் ஆபாசமானவை என்று கண்டிக்கபட்டதுடன் ஒவியங்களின் முன்னால் திரைச்சீலை அணிவிக்கபட்டு பதின்வயதினர் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது, கிளிம்ட் பாலின்பத்தை வெளிப்படையாக, ஆபாசமாக வரைகிறார், ஆகவே அவரை முக்கிய ஒவியராக அங்கீகரிக்ககூடாது என்று கலைவிமர்சகர் பலர் கூக்குரலிட்டார்கள், கிளிம்ட் அவற்றைக் கண்டுகொள்ளவேயில்லை, காலம் அந்த எதிர்ப்புகுரல்கள் யாவைற்றையும் இன்று [...]

ரிவேரா வளாகம்.

கனடா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் அதிகம் நான் பார்வையிட்டது  அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களையே, குறிப்பாக பிகாசோவின் நூற்றுக்கும் மேற்பட்ட ஒவியங்கள், ரெம்பிராண்ட், வான்கோ,  டாலி,  கோயா, பிரைடா காலோ, மடீசி,  வெர்மர், ரெனார், பால்காகின், ரூசோ, பிளேக், எட்கர் டீகாஸ், புரூகேல், வில்லியம் பிளேக், மிரோ, காடீன்ஸ்கி, முன்ச், கிளிம்ட், எட்வர்ட் ஹாபர், மார்சல் டச்ஹாம், பால் செசான், மார்க் செகால், மோடில்யானி, கமிலோ பிசாரோ, டூரர் போன்ற ஒவியமேதைகளின் படைப்புகளைக் கண்டது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம், [...]

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: