பயணங்கள் - Welcome to Sramakrishnan


‘பயணங்கள்’

ஷார்ஜா – 3

அபுதாபி நண்பர்களுடன் ஷேக் சையத் மசூதிக்குள் நுழைந்த போது கனவுலகிற்குள் நுழைந்தது போலவே இருந்தது. சலவைக்கல்லால் உருவாக்கபட்ட பெருங்கனவாகக் கலைநுட்பத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தது மசூதி. நவீனகாலத்திலும் மரபின் தொடர்ச்சியாகக் கட்டிடக்கலையை வளர்த்தெடுக்கமுடியும் என்பதற்கான சாட்சியாக நின்று கொண்டிருந்தது இம் மசூதி. கவிழ்த்திவைக்கபட்ட வெண்ணிற கும்பா போன்ற பிரம்மாண்டமான குவிமாடங்கள். இருபுறமும் மிதமான நீலவெளிச்சம், நான்கு பக்கமும் வான்நோக்கி உயர்ந்திருக்கும் மினார்கள். செம்பினால் செய்யப்பட்டுப் பொன்பூச்சுப் பூசப்பட்ட வேலைப்பாடுகளுடன் தூண்கள், சுவர்களில் பூவேலைப்பாடுகள். நடைபாதையெங்கும் மஞ்சளும் சிவப்பும் கலந்த [...]

ஷார்ஜா பயணம் – 2

எந்த வெளிநாட்டிற்குப் போனாலும் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களை நான் காண்பதில்லை. ஒருவேளை அந்த இடம் மிகவும் முக்கியமானது எனக்கருதினால் ஊருக்குக் கிளம்பும் கடைசி நாளில் அதைக் காண்பேன். ம்யூசியம், ஆர்ட் கேலரி, பழமையான கோட்டைகள். நினைவகங்கள், இசைக்கூடங்கள், நூலகங்கள், புத்தக கடைகள், அறிவியல் கண்காட்சிகள், இயற்கை எழில் நிரம்பிய இடங்கள்  இவற்றைத் தான் விருப்பமாகத் தேடிச் சென்று காண்பேன். இசைநிகழ்ச்சிகள். நாடகங்கள். கலைநிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்ப்பேன். ஆகவே துபாய், ஷார்ஜா பயணத்திலும் ம்யூசியம் ஆர்ட் [...]

ஷார்ஜா பயணம்

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி உலகின் மூன்றாவது மிகப்பெரிய கண்காட்சியாகும். இதில் 64 நாடுகள் பங்கேற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் இந்தப் புத்தகத் திருவிழா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்றது. பதினைந்து லட்சம் புத்தகங்களுக்கும் மேலாக இடம்பெற்றிருந்தன. . இந்தப் புத்தகக் கண்காட்சி ஷார்ஜாஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி அவர்களின் கனவு. அவரே நேரடியாகப் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளைத் திட்டமிடுகிறார். வழிநடத்துகிறார் என்கிறார்கள். இவ்வளவு பெரிய புத்தகக் கண்காட்சியை நான் [...]

இலங்கை பயணம்

எட்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன். கிழக்கு மாகாண இலக்கியவிழாவில் சிறப்புரையாற்ற எழுத்தாளர் உமா வரதராஜன் அழைத்திருந்தார். கொழும்பில் துவங்கி யாழ்பாணம் வரை பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தேன். இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாகப் பார்வையிட்டேன்.  இந்த பயண அனுபவம் குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இந்த பயணத்தில்எழுத்தாளர்கள் உமா வரதராஜன், ஹசீன்,  எஸ்.எல்.எம்.ஹனீபா, ஒட்டமாவடி அறபாத், திசேரா,மலர்செல்வன்.குழப்பிழான் சண்முகம், சாந்தன்,   யதார்த்தன் , கே.எஸ். சிவக்குமாரன், எம்.எம். நௌஷாத், சித்தாந்தன், பௌசர்  சிராஜ் [...]

குல்தாரா

தார்பாலைவனத்தினுள் ஜெய்சால்மரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது குல்தாரா. கைவிடப்பட்ட இந்தக் கிராமத்தை ஆவிகள் வாழும் ஊர் என்கிறார்கள். எங்கும் இடிபாடுகள். ஒட்டுமொத்த ஊரும் காலியாக உள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்சால்மரின் திவான் சலீம் சிங் குல்தாராவில் வசித்து வந்த பாலிவால் பிராமணப் பெண் ஒருத்தியின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ளக் கேட்டிருக்கிறார். அதற்குப் பாலிவால் பிரமாணர்கள் மறுக்கவே பெண்ணைத் தூக்கிக் கொண்டுபோய்த் திருமணம் செய்வதோடு ஊரையும் அழித்துவிடுவேன் என சலீம் சிங் மிரட்டியிருக்கிறார். [...]

தோக்கியோ சுவடுகள் 5

புல்லட் ரயில் ஹிரோஷிமா நோக்கி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. மனம் காலத்தின் பின்னே போய் ஜப்பானின் வரலாற்று நிகழ்வுகளில் சஞ்சரிக்கத் துவங்கியது, ஆகாயத்தில் ஒரு குடைக்காளான் மிதப்பது போன்ற அணுகுண்டு வீச்சின் புகைப்படத்தை எனது பள்ளி நாட்களில் முதன்முறையாகப் பார்த்தேன், அறிவியல் பரிசோதனைக்கூடத்தில் ஒரு போஸ்டராக ஒட்டப்பட்டிருந்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் போது அமெரிக்கா, ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசி ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொன்று குவித்தது என்று ஆசிரியர் விளக்கிச் சொல்லியிருந்தார், ஆனால் ஏன் ஹிரோஷிமாவில் [...]

தோக்கியோ சுவடுகள் 4

ஷின்கான்ஷேன் எனப்படும் அதிவேக ரயிலில் ஹிரோஷிமா போவது என முடிவு செய்திருந்தோம், 1964இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புல்லட் ரயில் ஒரு மணிக்கு சுமார் 240 – 320 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது, 900 கிலோமீட்டர் தூரமுள்ள ஹிரோஷிமாவை அந்த ரயில் மூன்றரை மணி நேரத்தில் சென்றடைகிறது ஷினகவா ரயில் நிலையத்திலிருந்து காலை ஏழு மணிக்கு இந்த ரயிலைப்பிடிக்க வேண்டும், ஷின்கான்ஷேன் ரயிலில் பயணிப்பது அலாதியான அனுபவம், இதற்காக அதிகாலை குளிரில் வீட்டிலிருந்து கிளம்பி வாடகை [...]

தோக்கியோ சுவடுகள்3

இரண்டாம் நாளின் மாலையில் முழுமதி அறக்கட்டளையோடு தொடர்புடைய பல்வேறு துறையைச் சேர்ந்த நண்பர்கள் அனைவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அது ஒரு உற்சாகமான சந்திப்பு . நிமித்தம் நாவல், மற்றும் எனது படைப்புகள் பற்றித் துவங்கி மெல்ல கிளைவிட்டு,  பிள்ளைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பது தேவையா, ஆங்கில வழிக்கல்வி சரியானதா, தீவிர இலக்கியம் ஏன் புரியவில்லை, தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படியிருக்கும், பௌத்தம் ஏன் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்தது. அம்பேத்காரின் சிந்தனைகள் குறித்த பார்வைகள், [...]

தோக்கியோ சுவடுகள் 2

தோக்கியோவில் இருந்து ஒரு மணி நேரப்பயணத்தில் உள்ளது காமகுரா, அங்கே பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று வெட்டவெளியில் அமைக்கபட்டிருக்கிறது, 13.35 மீட்டர் உயரமுள்ள வெண்கல புத்தரின் சிலையது, (Kamakura Daibutsu) ஜப்பானின் தேசிய அடையாளங்களில் ஒன்று அந்தப் புத்தர், 1252ம் ஆண்டு அதைச் செய்திருக்கிறார்கள், ஜப்பானில் உள்ள இரண்டாவது பெரிய புத்தர் சிலை இதுவே, முதற்சிலை நாராவில் உள்ளது, ஆகவே பிரம்மாண்டமான புத்தனைக் காண்பதில் இருந்து பயணத்தைத் துவங்கலாம் என முடிவு செய்து கொண்டு வெளியே வந்தபோது [...]

தோக்கியோ சுவடுகள் 1

இலவம்பஞ்சு பறப்பது போலக் காற்றில் பனி விழுந்து கொண்டிருந்தது. மூன்று அடுக்கு குளிராடைகளைத் தாண்டி குளிர் உடலை நடுக்கிக் கொண்டிருந்தது, கண்ணாடி தடுப்பின் பின்னால் நின்றபடியே பனிப்பொழிவை பார்த்துக் கொண்டிருந்தேன், சகுரா எனப்படும் பூக்கள் மலர்கிற காலத்தில் ஜப்பானைக் காண வேண்டும், அது பேரழகானது என்றார்கள், அன்று பனி, வானெங்குமிருந்து பூக்கள் உதிர்வதைப் போலவே இருந்தது கரிசலின் வெயில் குடித்து வளர்ந்த சிறுவன் நான், இது போன்ற பனிப்பொழிவைக் காண்பது எனக்கெல்லாம் புது அனுபவம், வெளிநாட்டுப் பயணத்தில் [...]

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: