பயணங்கள் - Welcome to Sramakrishnan


‘பயணங்கள்’

ரகுராஜ்பூர் போயிருந்தேன்

ஒதிஷா மாநிலத்திலுள்ள சிறு கிராமம் ரகுராஜ்பூர், பூரியிலிருந்து சந்தன்பூர் வழியாக இருபது நிமிச பயணத்திலுள்ளது, கிராமம் முழுவதும் ஒவியக்கலைஞர்கள் வாழ்கிறார்கள், சென்னையில் நவீன ஒவியர்களுக்கென உள்ள சோழமண்டலம் கடற்கரைகிராமத்தை கண்டிருக்கிறேன்,  இது பராம்பரியக் கலைஞர்களின் வசிப்பிடம், ஒடிசி நடனத்தின் தாய்வீடு இக்கிராமமே. ஒடிசி நடனக்கலைக்கு உலகப்புகழ் தேடி தந்த கேளுசரண் மொகபத்ராவின் ஊரிது, அவரது வீட்டிற்குப் போயிருந்தேன், சின்னசிறிய வீடது, முகப்பில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள், பார்வை குறைந்த அவரது துணைவியார் வரவேற்று ஆசிர்வாதம் செய்து கொட்டிபுவா [...]

நயாகரா முன்னால்

‘வாழ்விலே ஒரு முறை’ என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். நயாகரா அருவியின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது இந்தியாவில் எத்தனையோ அருவிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் நயாகராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன். வாழ்வில் ஒரு முறை நயாகராவைப் பார்ப்பது பேறு. பலமுறை காணக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு நயாகராவே சாட்சி. டொரண்டோவிற்கு வந்து இறங்கிய நாளே [...]

மார்க் ட்வைனின் வீடு

அமெரிக்கப்பயணத்தில் நான் இருவரது வீடுகளைப் பார்க்கவிரும்பினேன், ஒன்று வில்லியம் பாக்னர் மற்றொன்று ஜாக் லண்டன் ,இருவர் எழுத்தின் மீது அதிகமான விருப்பம் கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் நினைவிடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் பயணதிட்டமிடலில் அது சாத்தியமாகவில்லை, கனெக்டிகெட் மாநிலத் தலைநகர் Hartford இல் உள்ள அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் ம்யூசியத்திற்குச் சென்றிருந்தேன், ட்வைனின் வீட்டைச் சுற்றிப் பார்க்க கட்டணம் 20 டாலர். அருங்காட்சியகத்தில் அவரது படம் போட்ட பேனா. டாலர், கீ [...]

கொற்கையில் கடல் இல்லை

கொற்கைக்குப் போய் கொண்டிருந்தோம், என்னுடன் வந்து கொண்டிருந்த நண்பர் துளசிதாசன் கேட்டார் கொற்கையை நெருங்கிவிட்டோம் ஆனால் கடல் சப்தம் கேட்கவேயில்லையே அங்கே கடல் இல்லையே என்றேன் அது எப்படி, கொற்கை முத்துக்குப் பேர் போன கடற்துறைமுகம், அங்கே கடல் எப்படி இல்லாமல் போய்விட்டது என்று கேட்டார் கடல் பின்வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்று சொன்னேன், கொற்கை என்ற பெயரைக்கேட்டவுடன் நம்மில் பலருக்கும் பழமையான துறைமுகமும் கடலும் தான் நினைவிற்கு வருகின்றன, ஆனால் இன்றுள்ள கொற்கையில் கடல் கிடையாது. மறப்போர் [...]

சிம்கோ ஏரி

டொரன்டோவில் இருந்து மூன்று மணிநேரப் பயணத்தில் உள்ள சிம்கோ  ஏரிக்குச் சென்றிருந்தேன், ஒன்டாரியோ ஏரியை விடச் சிறியது என்றாலும் சிம்கோ ஏரி மிகவும் அழகானது, ஏரியைக் காண்பதற்கு விருப்பமான நண்பர்களுடன் செல்வது கூடுதல் சந்தோஷம் தரக்கூடியது, அன்று என்னுடன் மூர்த்தி, நவம் மாஸ்டர், செல்வன் மூவரும் உடன் வந்தார்கள், ஏரிக்குச் செல்வதற்காக பிரதான சாலையை விட்டு விலகி மரங்கள் அடர்ந்த பசுமையான சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தோம், சூடான டிம் ஹார்டன் காபி, தொடர்ந்த இலக்கிய உரையாடல்கள், [...]

பசியாறிட்டீங்களா.

ஒரு வார கால மலேசியப் பயணத்திலிருந்து இன்று சென்னை திரும்பினேன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நான் நடத்திய மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள், காலை எட்டு மணிக்குத் துவங்கிய பயிலரங்கு இரவு 11 மணிவரை நடைபெற்றது, உற்சாகத்துடன் கூடிப்பேசி விவாதித்தது சிறப்பாக இருந்தது, ஒரு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளில் இருந்து சிறந்த  ஒன்றைத் தேர்வு செய்து ஆயிரம் ரிங்கட் பரிசு தருகிறார்கள், அந்த தேர்வுக்குழு தலைவராக [...]

தனுஷ்கோடி

அழிந்து சிதலமாகி நிற்கும் தனுஷ்கோடியின் கரையில் நின்று கொண்டிருந்தேன். கடல் அடங்கியிருந்தது. மாலை நேரம். வெளிறிய நீல வானம். மேற்கில் ஒளிரும் சூரியன். மிதமான காற்று. கடல் கொண்டது போக எஞ்சிய இடிபாடுகள் கண்ணில் விழுகின்றன. ஒரு நாய் அலையின் முன்பாக ஒடியாடிக் கொண்டிருக்கிறது. கடலின் அருகாமை நம் சுபாவத்தையே மாற்றிவிடுகிறது. பலநேரங்கள் பேச்சற்று அதை பார்த்து கொண்டேயிருக்கிறோம். கடலை எப்படி உள்வாங்கி கொள்வது. கண்களால் கடலை ஒரு போதும் அறிய முடியாது. அலைகள் அல்ல கடலின் [...]

ரயிலோடும் தூரம்

ரயில் பயணத்தில் பின்னிரவில் விழித்துக் கொண்டு இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ? எனது பெரும்பான்மை ரயில்பயணங்களில் பின்னிரவில் விழித்தபடியே தொலைதூர காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். கல்கத்தாவை நோக்கிய ரயிலில் இருந்து பார்த்த நிலவு. வாரணாசி எக்ஸ்பிரஸில் இருந்து கண்ட கங்கை காட்சிகள், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸில் தென்பட்ட ஈரமான கிராமங்கள், மலைரயிலில் கண்ட குகைகள், சபர்மதி எக்ஸ்பிரஸில் பார்த்த விடிகாலையின் மழை. இப்படி எத்தனையோ காட்சிகள். ஈரத்துணி போல மனது [...]

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: