சினிமா - Welcome to Sramakrishnan


‘சினிமா’

சிரிப்பின் பின்னால்.

லாரல் மற்றும் ஹார்டி (Laurel and Hardy) இருவரும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்கள். ஒல்லியான ஸ்டேன் லாரல் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். குண்டான ஆலிவர் ஹார்டி அமெரிக்கர். ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையில் இவர்கள் தலைசிறந்த கலைஞர்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Stan & Ollie என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2018ல் வெளியான படமது. நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையை விவரிக்கும் என்றாலும் படம் நகைச்சுவை கொண்டதாக மட்டுமில்லை. இரண்டு திரைக்கலைஞர்களின் புறக்கணிக்கபட்ட வலியை, நிராகரிப்பின் வேதனையை மிகச்சரியாகப் பதிவு [...]

பெலினி காத்திருக்கிறார்

பெலினியின் நண்பரும், ஒவியரும், சக அலுவலருமான Ettore Scola இயக்கத்தில் உருவான ஆவணப்படமான How Strange to Be Named Federico பெலினியின் கலை மற்றும் திரைவாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது. குறிப்பாகப் பெலினியின் திரைப்படம் போலவே முன்பின்னாகவும், கனவுத் தன்மை கொண்டதாகவும் ஆவணப்படத்தை ஸ்கோலா உருவாக்கியிருக்கிறார். ஸ்கோலா இத்தாலிய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். மாஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். பெட்ரிக்கோ பெலினி (Federico [...]

எல்லை கடக்கும் சர்க்கஸ்

ஹாலிவுட்டின் நிகரற்ற இயக்குனர் எலியா கஸான். இவரது திரைப்படங்கள் இன்றும் திரைப்பள்ளிகளில் பாடமாகப் பயிலப்படுகின்றன. நடிகர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதிலும், காட்சிகோணங்களைப் புதிதாக வடிவமைப்பதிலும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளை அழுத்தமாகக் கையாளுவதிலும் எலியா கஸான் தனித்துவமிக்கவர். மார்லன் பிராண்டோவை திரைநட்சத்திரமாக உருவாக்கியவர் இவரே. போரும் வாழ்வும், குற்றமும் தண்டனை, மேடம் பவாரி போன்ற செவ்வியல் நாவல்களை வாசிக்கும் போது நாம் கதாபாத்திரங்களின் உருவாக்கம் மற்றும் கதையை எடுத்துச் செல்லும் விதத்தைக் கண்டு வியக்கிறோம். பாராட்டுகிறோம். அதே அனுபவத்தைத் திரையில் [...]

நித்தியத்தின் நுழைவாயில்

ஒவியஉலகில் வின்சென்ட் வில்லியம் வான்கோ என்பது ஒரு பெயரில்லை. அது ஒரு தனித்துவமிக்க அடையாளம். நவீன ஒவியர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞன். பேராசான். அவரது வண்ணங்களைப் போலக், கோடுகளைப் போல வரைந்துவிடமுடியாதா என்ற ஏக்கம் இளம் ஒவியர்களுக்கு எப்போதும் உண்டு. உன்மத்த நிலையில் வான்கோ வரைந்த ஒவியங்கள் உலகமே பற்றி எரிவது போலவே காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. கௌதம புத்தர் தனது முதற்சொற்பொழிவை சாரநாத்திலுள்ள மான்பூங்காவில் ஆற்றினார். அந்த உரையில் உலகம் முழுவதும் நெருப்பு இடையுறாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. அதை [...]

நிழல் எழுத்தாளர்

ஒருவர் எழுதி அது மற்றவர் பெயரில் வெளியாகி புகழ்பெறுவது உலகெங்கும் தொடர்ந்து நடந்து வரும் இலக்கியத்திருட்டு. பிரபலமான சிலருக்காக இப்படி வேலை செய்து தரக்கூடிய கோஸ்ட் ரைட்டர்ஸ் உலகெங்கும் இருக்கிறார்கள். அந்த எழுத்தாளர் யார் என வெளியுலகம் அறியாது. அவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். பணத்திற்காக இப்படித் தன்னை மறைத்துக் கொண்டு எழுதுபவர்களும் உண்டு. கட்டுபாட்டு, மற்றும் தணிக்கை, மோசடி என்று பல காரணங்கள் இதற்கு உள்ளன. அப்படி ஒரு கதையைத் தான் சொல்கிறது கோலெட் [...]

எலியா கஸான்.

East of Eden திரைப்படத்தில் ஒரு தந்தை தனது பிள்ளைகளிடம் அம்மா இறந்துவிட்டார் என்று பொய் சொல்லி வளர்க்கிறார். ஆனால் அம்மா இறந்து போகவில்லை. அப்பாவோடு சண்டையிட்டு விலகிப் போய்விட்டார். இப்போது அம்மா அருகிலுள்ள ஊர் ஒன்றில் சூதாட்டவிடுதி ஒன்றை நடத்துகிறார் என்பதை அறிந்து அம்மாவைக் காணச் செல்கிறான் இளையமகன். அம்மாவைச் சந்திப்பது எளிதாகயில்லை. நிறைய கெடுபிடிகள். அவள் தனது கடந்தகாலத்தை மறைத்து வாழுகிறாள். அந்தச் சூதாட்ட விடுதிக்குள் ரகசியமாக நுழைந்து அம்மாவை சந்திக்கிறான். எதற்காக என்னைத் [...]

பனியில் ஒரு யாத்திரை

1974 ஆம் ஆண்டு இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கிற்குப் பாரீஸில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது. அதில் அவரது நண்பரான லோட்டே ஐஸ்னர் என்ற எண்பது வயது பெண்மணி மரணப் படுக்கையில் இருக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் இறந்து போய் விடுவார் என்று தகவல் தெரிவிக்கபட்டது தனது தோழி சாகக் கூடாது. அவரைச் சாக விடமாட்டேன் என்று லோட்டே ஐஸ்னரைக் காண ம்யூனிச் நகரிலிருந்து பாரீஸிற்கு பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டார் இயக்குனர் வெர்னர் ஹெர்சாக். (WernerHerzog). கடுங் [...]

ராக் இசைக்குழு எனும் கனவு

ரிமா தாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள Village Rockstars படம் பார்த்தேன். சமகால இந்திய சினிமாவில் உருவாகி வரும் புதிய அலைப்படங்களில் இது ஒரு சாதனை என்றே சொல்வேன். தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் கலையின் மீது விருப்பமுள்ள எவரும் ஒரு நல்ல சினிமாவை உருவாக்க செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அஸ்ஸாமைச் சேர்ந்த ரிமா தாஸ் எவரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. திரைப்படப் பள்ளி எதிலும் சினிமா பயிலவில்லை. சுயமாகச் சினிமா கற்றுக் [...]

சண்டையிடும் சாப்ளின்

அகிரா குரசேவா படங்களில் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற தொஷிரோ மிபுன் குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன். Mifune: The Last Samurai (2015) என்ற ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் Steven Okazaki. கிழிந்த உடையுடன் வறுமையில் சுற்றித்திரிந்த இளைஞன் எப்படிப் புகழ்பெற்ற நடிகனாக உருவாகிறான் என்பதை ஆவணப்படம் விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஹாலிவுட் நடிகர்களின் நடிப்பு பாணி பெரிதும் முகபாவத்துடன் மட்டுமே தொடர்புடையது. மார்லன் பிராண்டோ போன்ற அரிதான நடிகர்களே மொத்த உடலையும் காட்சிக்கேற்ப மாற்றவும் பயன்படுத்தவும் கூடியவர்கள். [...]

சுராவிற்குப் பிடித்த சினிமா

எழுத்தாளர் சுந்தர ராமசாமி அபூர்வமாகத் திரைப்படங்கள் குறித்து எழுதியிருக்கிறார். பேசியிருக்கிறார். தனிப்பட்ட சந்திப்புகளின் போது சினிமா குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்ததை அறிவேன். ஆனால் தனக்குப் பிடித்த படங்கள் பற்றியோ, சினிமா இயக்குனர்கள பற்றியோ அதிகம் எழுதியதில்லை. அடூர் பற்றியும் சத்யஜித் ரே பற்றியும் எழுதியிருக்கிறார் என்று நினைவு. அவரது குறிப்பு ஒன்றில் Fried Green Tomatoes திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார். அது புகழ்பெற்ற படமில்லை. ஆனால் நேர்த்தியாக [...]

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: