சினிமா - Welcome to Sramakrishnan


‘சினிமா’

துரத்தும் பணம்

சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் மராத்திபடங்கள் உலக அளவில் மிகப்பெரிய விருதுகளையும் அங்கீகாரத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றுவருகின்றன. மராத்தி சிறுகதைகளில் இருந்தோ, நாவல்களில் இருந்தோ படத்திற்கான ஆதாரக்கதையைப் பெற்றுக் கொண்டு இளம் இயக்குனர்கள் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். அத்துடன் ஐம்பது லட்ச ரூபாய்க்குள் படத்தை முடித்துவிட முடிகிற வாய்ப்புகளும் அங்குள்ளன. மல்டிபிளெக்ஸ் அரங்குகளில் கட்டாயம் ஒரு திரை மராத்தி திரைப்படங்களுக்கு ஒதுக்கபட வேண்டும் என்பது மாநில விதிமுறை. ஆகவே விநியோக முறையும் சாதகமாகவுள்ளது. ஹிந்தி திரையுலகின் பிரபலங்கள் பலரும் மராத்தி [...]

வான்கோவின் கடைசி கடிதம்

ஓவியர் வான்கோவின் (Vincent vanGogh)வாழ்க்கை குறித்துச் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் LOVING VINCENT. திரையில் இப்படத்தைக் காண்பது பரவசமூட்டுகிறது. வான்கோவின் ஒவியங்கள் உயிர்பெற்று கண்முன்னே கடந்து போகின்றன. அவர் வரைந்த உருவங்கள் நம்முன்னே நடமாடுகிறார்கள். வான்கோவின் சீற்றமிக்கக் கோடுகள் திரையில் அலைபோல எழுந்து மறைகின்றன. வான்கோவின் நீலம் வான்கோவின் மஞ்சள், சிவப்பு என அவரது வண்ணக்கலவைகளே படத்தின் ஆதாரவண்ணங்கள். ஒவியத்திலிருந்தே ஒரு திரைப்படத்தை உருவாக்கமுடியும் என்ற நவீன தொழில்நுட்பத்தின் சாதனைப்படைப்பு இதுவென்பேன். அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் [...]

அறம் வென்றது

கோபி நயனார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அறம் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். அற்புதம். தமிழ்சினிமா பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படத்தை இயக்கியிருக்கிறார் கோபி நயினார். பொழுதுபோக்குத் திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற மாயையை உடைத்து அரங்கு நிரம்பி வழிகிறது. கடைசிக்காட்சியின் போது அருகிலுள்ள இருக்கையில் இருந்தவர்கள் பீறிடும் கண்ணீரை துடைக்கமுடியாமல் விசும்பினார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திரையில் வெளிப்படும் உண்மை. திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை. மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து [...]

கடைசி வைஸ்ராய்

Gurinder Chadha இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்Viceroy’s House. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். லண்டனில் வசிக்கும் குரிந்தர் Bend It Like Beckham, Bride and Prejudice போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர். இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் தேசப்பிரிவினையை எதற்காக உருவாக்கினார். அவர் முன்னிருந்த சவால்கள் எவை என்பதையே இப்படம் சித்தரிக்கிறது. சிறந்த கலைவடிவமைப்புடன் நேர்த்தியான ஒளிப்பதிவுடன் உருவாக்கபட்டுள்ள இப்படம் வைஸ்ராய் இல்லத்தின் பிரம்மாண்டத்தைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. இன்றைய ஜனாதிபதி மாளிகையே அன்றைய வைஸ்ராய் மாளிகை.  ஆகவே அதன் [...]

கவிதையின் நாயகி

The heart asks pleasure first and then excuse from pain. – Emily Dickinson அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்சன் பற்றி A Quiet Passion திரைப்படத்தினைப் பார்த்தேன். படத்தின் ஒரு காட்சியில் பாதிரியார் எமிலியின் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை நடத்துகிறார். எமிலியின் தந்தையும் சகோதரியும் தாயும் மண்டியிட்டு பிரார்த்தனைக்குத் தயார் ஆகும் போது  எமிலி மட்டும் மண்டியிட்டு பிரார்த்திக்க விரும்பவில்லை என மறுக்கிறார். கடவுளிடம் உன் பாவங்களுக்காக மண்டியிட வேண்டியதில்லையா எனப் பாதிரியார் [...]

நெருதா துரத்தப்படுகிறார்

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதா குறித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படம் நெருதா. சிலே தேசத்தின் பிரபல இயக்குனர் Pablo Larrain இயக்கியிருக்கிறார்.சிலே கம்யூனிஸ்ட் கட்சியின் செனட்டராக நெருதா பணியாற்றினார். அதிலிருந்தே படம் துவங்குகிறது. 1946 ஆம் ஆண்டில், சிலேயின் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிகளின் சார்பில் நின்ற கேப்ரியல் கோன்சல்ஸ் விதேலாவிற்கு ஆதரவாக வாக்குசேகரித்தார் நெருதா. விதேலா தேர்தலில் வெற்றிபெற்றபின், சிலே கம்யூனிஸ்ட் கட்சியுடன் சண்டையிட்டு கம்யூனிஸ்டுகளைத் தனதுஅமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார். பின்னர் ஜனநாயக பாதுகாப்பு சட்டத்தின் [...]

தோற்கடிக்கப்பட்டவனின் புன்னகை

“When I know your soul, I will paint your eyes.”- Amedeo Modigliani மோடிக்லியானி (Modigliani )புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் . 35 வயதில் இறந்து போனவர். மரணத்திற்குப் பிறகே மோடிக்லியானி பெரும்புகழை அடைந்தார். பாப்லோ பிகாசோவிற்கு இணையான திறமை கொண்டிருந்த போதும் அங்கீகாரம் கிடைக்காமலே இறந்து போனார். பெருங்குடிகாரர். போதை பழக்கம் கொண்டவர். இவரது காதல் வாழ்க்கையையும், பாரீஸில் நடைபெற்ற ஒவியப்போட்டியில் கலந்து கொள்வதற்காக முயன்ற நிகழ்வினையும் மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ளது மைக் டேவிஸ் [...]

தனிமையெனும் தீவு

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களுக்கும் இடையில் அடிப்படையிலே வேறுபாடிருக்கிறது. வெறும்பொழுதுவிஷயங்களைத் தாண்டி, காட்டை அழித்து இயற்கை வளங்களை நாசப்படுத்துவது குறித்தும். போருக்கு எதிராகவும், வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்தும், தொழில்மயமாதல், நகர்மயமாதலின் விளைவுகள் பற்றியும், சிறார்களின் வியப்பபூட்டும் கனவுகள். கற்பனைகள் பற்றியும் ஜப்பானிய அனிமேஷன் படங்கள் பேசுகின்றன. அதீத வன்முறைக்காட்சிகள். இன மதத் துவேசம் எதையும் ஜப்பானிய அனிமேஷனில் காணமுடியாது. மூத்தோர்களின் வழிகாட்டுதலும் ஞானமும் அவசியமானது. இயற்கையோடு இணைந்து வாழுதல் முக்கியம். உறுதியான நம்பிக்கையும் [...]

எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்கள்

எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்களாக  பார்த்துக் கொண்டுவருகிறேன். பெரும்பான்மையான படங்கள் மேலோட்டமாக உருவாக்கபட்டிருக்கின்றன. எழுத்தாளன் என்ற பிம்பம் எப்போதுமே எவரையும் புரிந்து கொள்ளாதவராக, குடும்பத்தை வெறுப்பவராக, உறவுகளில் சிக்கல் கொண்டவராகவே சித்தரிக்கபடுகிறது. எழுத்தாளர்களைப் பற்றிய படம் என்றபோதும் இவை முதன்மையாக எழுத்தாளனின் காதலைப் பேசுபவை. இந்தத் திரைப்படங்களைப் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். 1.     பாப்லோ நெருதாவைப்பற்றிய திரைப்படம் Neruda / 2016 / directed by Pablo Larraín. 2.     ஆஸ்கார் ஒயில்ட் பற்றிய [...]

எழுத்தில் வாழ்பவர்கள்

ஒவியர்கள், எழுத்தாளர்கள், இசை மற்றும் நடனக்கலைஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஆங்கிலப் படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் ஒரு பதிப்பாசிரியரின் வாழ்க்கையை, அவரது இலக்கிய ஆர்வத்தை பற்றிப் படம் எதுவும் வெளியானதில்லை.  அவ்வகையில் GENIUS தனித்துவமான படமே. Michael Grandage இயக்கியுள்ள இப்படம் Max Perkins என்ற Scribners பதிப்பக எடிட்டருக்கும் தாமஸ் வுல்ப் என்ற அமெரிக்க எழுத்தாளருக்குமான உறவைப் பற்றியது.  அமெரிக்க இலக்கியத்தின் நிகரற்ற நாவலாசிரியர் தாமஸ் வுல்ப் என்று புகழ்ந்து போற்றுகிறார் வில்லியம் பாக்னர். தாமஸ் [...]

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: