சினிமா - Welcome to Sramakrishnan


‘சினிமா’

இமயத்தின் மணியோசை.

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட ஆங்கிலப்படம் BLACK NARCISSUS, 1947ல் வெளியானது. மைக்கேல் போவல் இயக்கியுள்ளார். சிறந்த கலையமைப்பு. ஒளிப்பதிவு என இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள இப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். இமயமலையின் மோபு என்ற இடத்தில் கன்னியர் மடம் ஒன்றை உருவாக்க முயலும் கன்னியாஸ்திரிகளின் கதையே பிளாக் நார்சிசஸ். இளவரசன் திலீப் ராய் பயன்படுத்தும் வாசனைத்திரவியத்தின் பெயரது. மையக்கதையின் குறியீடாகவே அந்த வாசனை திரவியம் அடையாளப்படுத்தபடுகிறது. இளமையின் அடையாளமாக உள்ள அந்த வாசனைதிரவியத்தின் மணத்தைக் கன்னியாஸ்திரிகள் விரும்புகிறார்கள். [...]

பெண்ணால் முடியும்.

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கோவிந்த நிகாலனி இயக்கிய Sanshodhan என்ற ஹிந்திப்படத்தைப் பார்த்தேன். NFDC & UNICEF இணைந்து தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வித்யா என்ற இளம்பெண் தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து உறுப்பினராகிச் சந்திக்கும் பிரச்சனைகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் நிகாலனி. செய்திதுறையின் விளம்பரப் படம் போல நிறையக் காட்சிகள் பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் மகளிர் பங்கெடுப்பு பற்றிய விளக்கமாக இருந்த போதும் ராஜஸ்தானிய கிராமிய வாழ்க்கையைக் காட்சிபடுத்தியதிலும் கல்விக்காகக் [...]

திருலோக சீதாராம்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் திருலோக சீதாராம். சிறப்பான மொழியர்ப்பு. 1962 ஆகஸ்ட் 9ம் தேதியன்று ஹெஸ்ஸே காலமான செய்தியை ரேடியோவில் கேள்விபட்ட திருலோகம் தனது உறவினர்களில் ஒருவர் இறந்து போனது போலப் பதறிப்போயிருக்கிறார் அதைக்கண்ட மனைவி யாரு இறந்து போனது எனக்கேட்டதற்கு, என் சொந்தம். உனக்கு இதுல தீட்டு இல்லை என்று சொல்லிவிட்டு ஹெஸ்ஸேயிற்க்காக தான் தீட்டு காக்கவில்லை என்றாலும் உடனே ஒரு முழுக்கு போட [...]

பனியில் சிந்திய குருதி.

மெக்சிகோவைச் சேர்ந்த இயக்குனரான அலெஹாந்த்ரோ கான்சலஸ் இனாரித்து (Alejandro González Iñárritu) அமரோஸ் பெரோஸ், பாபேல், 21 கிராம்ஸ் போன்ற சிறந்த படங்களைத் தந்தவர். சென்ற ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான BIRD MAN ஆஸ்கார் விருதைப் பெற்றது. தற்போது அவரும் டிகாப்ரியோவும் இணைந்து The Revenant என்ற மிகச்சிறந்த படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 2015 கிறிஸ்துமஸ் அன்று இப்படம் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் இப்படத்தை மூன்றுமுறை பார்த்துவிட்டேன். கரடி தாக்கி உயிர்பிழைத்த வேட்டைக்காரன் Hugh [...]

பாஜிராவ் மஸ்தானி

நேற்றிரவு விஜயா போரம் மாலில் புதிதாக திறக்கபட்டுள் Palazzo திரையரங்கில் பாஜிராவ் மஸ்தானி பார்த்தேன். Palazzo திரையரங்கு  8-screen கொண்டது,  சிறப்பான ஒலி ஒளி இருக்கைகளுடன் உலகத்தரத்தில் உருவாக்கபட்டுள்ளது. கூடுதல் சிறப்பு பார்வையாளர்கள் சினிமா துவங்குவதற்கு முன்பும் பின்பும் அமர்ந்து பேசுவதற்கு வசதியான இருக்கைகள். காபி ஷாப்.  வளாகம் முழுவதும் ஒரே இளைஞர் கூட்டம். பாஜிராவ் மஸ்தானி இந்திய பொழுது போக்கு சினிமாவின் பெரும்சாதனை.   பிரம்மாண்டம் என்பது வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமில்லை, எடுத்துக் கொள்ளும் கதைக்களம்,  [...]

அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்

திரைக்கதையும் அணுகுண்டும் தமிழில்: ராம் முரளி 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலக புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ நகருக்கு சென்றிருந்தபோது, RHAPSODY IN AUGEST எனும் தனது புதிய படத்தை இயக்கிக் கொண்டிருந்த அகிரா குரோசாவாவை சந்தித்து உரையாடினார். மார்க்கேஸ் தனது “ONE HUNDRED YEARS OF SOLITUDE” மற்றும் “LOVE IN THE TIME OF CHOLERA” போன்ற மகத்தான கிளாசிக்கல் நாவல்களை எழுதிடும் முன்பாக, சில ஆண்டுகள் [...]

எவரெஸ்ட்

நேற்று மாலை எவரெஸ்ட் என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன், Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 1996ல் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எவரெஸ்ட் பயணம் மேற்கொள்வதற்காக நேபாளம் வந்து இறங்கும் குழு ஒன்றுடன் படம் துவங்குகிறது. நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம். பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது இமயம், பனிபடர்ந்த அதன் கம்பீரம் நம்மை மயக்குகிறது. அடிவாரத்தில் நின்றபடியே தாங்கள் செல்ல வேண்டிய சிகரத்தை வியந்து பார்க்கிறார்கள் பயணக்குழுவினர். இமயத்தின் அழகை கண்டு நம் அகம் [...]

அனடோலியாவின் மலைப்பாதைகள்

கடந்த இரண்டு வாரங்களாகத் துருக்கி சினிமாவின் சிறந்த இயக்குனரான நூரி பில்கே ஜெலான் (Nuri Bilge Ceylan ) படங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சமகால உலகசினிமாவில் என்னை மிகவும் பாதித்த இயக்குனர் இவரே. அதிலும் குறிப்பாக இவரது Once Upon a Time in Anatolia ஒரு காவியம். ரஷ்ய இயக்குனரான தார்கோவெஸ்கியின் திரைப்படங்கள் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பிற்கு நிகரானவை நூரியின் படங்கள். Clouds of May, Uzak, Climates, Three Monkeys , Once Upon [...]

யுத்த ரகசியம்

இறந்து போன ஒரு மனிதனால் ஒரு யுத்தத்தின் போக்கினை திசைதிருப்ப முடியுமா ? முடியும் என்கிறது The Man Who Never Was திரைப்படம்.நாவலாக வெளிவந்து வெற்றிபெற்ற கதையைப்  படமாக்கியிருக்கிறார்கள். 1956ல்  வெளியான இப்படத்தை Ronald Neame இயக்கியுள்ளார். சமீபத்தில் பார்த்த மிக சுவாரஸ்யமான திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் போது நேசப்படை எங்கே தனது அடுத்த தாக்குதலை நடத்தப் போகிறது எனக் கவனமாக உளவு பார்க்கிறது நாஜி ராணுவம். அதை திசைதிருப்புதவற்காக பிரிட்டீஷ் ராணுவம் இறந்த மனிதனின் [...]

மின்னும் சிவப்புப் பூக்கள்

காற்றில் பனித் துகள்கள் பறந்து கொண்டிருக்கின்றன.  சுழன்று ஆடும் மரக்குதிரையின் மீது பனி பொழிகிறது. நான்கு வயது பாங் குயிங் அதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறான் இப்படிதான் Little Red Flowers திரைப்படம் துவங்குகிறது. கிண்டர் கார்டன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உலகைச் சித்தரிக்கும் அற்புதமான படமது. இத்தனை குழந்தைகளை எப்படி நடிக்க வைத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் பாங் குயிங்காக நடித்துள்ள சிறுவன் அசத்துகிறான். சீனத்திரைப்படங்கள் என்றாலே மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள் அல்லது வரலாற்றையும் [...]

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: