அனுபவம் - Welcome to Sramakrishnan


‘அனுபவம்’

அரவான்

பழைய புகைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அதில் அரவான் நாடகநிகழ்வின் புகைப்படங்கள் கிடைத்தன. அரவான் என்ற எனது நாடகத்தைப் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாக கருணாபிரசாத் இயக்கி நடித்தார். கருணா பிரசாத் கூத்துப்பட்டறையில் பயின்ற மிகச்சிறந்த நடிகர். தனக்கென ஒரு நாடகக்குழுவை நடத்திவருபவர். அரவான் நாடகத்தை அவருக்காகவே எழுதினேன். ஒரு நபர் நடிக்கும் அந்த நாடகம் 50 நிமிஷங்கள் நிகழக்கூடியது. மகாபாரதத்தில் குருஷேத்திரப் போருக்கு முன்பாக அரவான் களப்பலியிடப்படுகிறான். தன் மரணத்தின் முந்திய இரவில் அரவான் எப்படியிருந்தான் என்பதே [...]

புதுவை இளவேனில்

பாண்டிச்சேரி போவது என்றாலே இளவேனிலுடன் சுற்றுவது என்று தான் அர்த்தம். எப்போது பாண்டிச்சேரி சென்றாலும் புகைப்படக்கலைஞர் இளவேனிலைச் சந்தித்துவிடுவேன். தேர்ந்த வாசகர். எழுத்தாளர்களை நேசிக்கும் ப்ரியத்துக்குரிய தம்பி. எழுத்தாளர் கிராவை தாத்தா என்றே இளவேனில் அழைக்கிறார். கிராவும் தனது சொந்தப்பேரனைப் போல தான் இளவேனிலை நடத்துகிறார். இளவேனிலுடன் பேசிக் கொண்டிருப்பது உற்சாகம் தரக்கூடியது. சமீபத்தில் அவருக்காக கிரா ஒரு நாவலை எழுதித் தந்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அந் நாவலை வெளியிட இருக்கிறது. 96வயது வயதில் கிரா ஒரு [...]

நிலாச்சோறு

கூடி உண்ணும் போது உணவிற்குத் தனிசுவை வந்துவிடுகிறது. அதுவும் நிலாவெளிச்சத்தில் அனைவரும் ஒன்று கூடி அருகமர்ந்து உண்ணுவது இன்பமானது. சிறுவயதில் பல இரவுகள் அனைவரும் ஒன்றுகூடி அமர ஆச்சி சோற்றை உருட்டி உருட்டி தருவார். அந்த உருண்டைக்கென்றே தனிருசியிருந்தது. அந்தக் காலத்தில் சித்ரா பௌணர்மி நாளில் ஆற்றின் கரைகளுக்குச் சென்று உணவருந்தும் வழக்கமிருந்தது. வண்டி போட்டுக் கொண்டு ஆற்றின் கரைதேடி போவோம். மணலில் அமர்ந்தபடியே நிலவின் வெண்ணொளியை ரசித்தபடியே சாப்பிட்ட நினைவு அடிமனதில் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது திடீரென [...]

ஆனந்தா ஆற்றில் இறங்காதே

கவிஞர்  ஷங்கர்ராமசுப்ரமணியன் வலைப்பக்கத்தில் வாசித்த இக்கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. சமகால தமிழ்கவிதையுலகில் ஷங்கர் தனித்துவமானர்.  அவரது சிறந்த கவிதைகளும் இந்த வலைப்பக்கத்திலுள்ளன. •• ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த [...]

காஃப்கா சிரிக்கிறார்

இணையத்தில் இன்று காஃப்காவின் அரிய புகைப்படம் ஒன்றைக் கண்டேன். சட்டை அணியாத சிரித்த முகத்துடன் உள்ள காஃப்காவின் புகைப்படம். கடற்கரையில் எடுக்கபட்ட படம் போலுள்ளது. அருகில் அவரது நண்பன் மாக்ஸ் பிராட் இருக்கிறார். கூச்சத்துடன் கேமிராவை நோக்கியபடி இருக்கிறார் காஃப்கா. காப்காவின் பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் கோட் அணிந்தபடியே தீவிரமான முகத்துடன் இருப்பார். சில புகைப்படங்களில் கறுப்பு தொப்பி அணிந்திருப்பார். சிலவேளை கையில் ஒரு பையுடன் காணப்படுவார். இந்த படத்திலுள்ள காஃப்காவிடம் காணப்படுவது மெலிந்த இளைஞனின் வெட்கம். [...]

சலூனுக்குள் புத்தகங்கள்

காலையில் தூத்துக்குடியிலிருந்து ஒருவர் தொலைபேசியில் அழைத்து நான் மில்லர்புரத்தில் சலூன் வைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். சலூனுக்கு வருபவர்கள் படிப்பதற்காகச் சிறிய புத்தக அலமாரி ஒன்றை வைத்திருக்கிறேன். அதில் நாற்பது ஐம்பது புத்தகங்கள் உள்ளன. நிறையப் பேர் ஆர்வமாகப் புத்தகம் எடுத்துப் படிக்கிறார்கள். இது மட்டுமின்றி யூடியூப்பிலுள்ள உங்களது இலக்கிய உரைகளை ஆடியோவாக்கி அதை ஸ்பீக்கரில் ஒலிக்கவிடுகிறேன். பலரும்  ஆர்வமாகக் கேட்கிறார்கள். இன்னும் அதிகமான புத்தகங்கள் சலூனில் வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எது போன்ற [...]

விஷமாகும் காய்கனிகள்

காரைக்காலில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் வாரச் சந்தையொன்றைக் கண்டேன். காரை விட்டு இறங்கி சந்தைக்குச் சென்றேன். காலையில் பறித்து வந்த பசுமையான காய்கறிகள். பழவகைகள். மிகப்பெரிய சந்தையது. மக்கள் பைநிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு போனார்கள். புதுச்சேரி மாநிலத்தில் வாரச்சந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. விவசாயிகள் நேரடியாக வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் திட்டமிட்டு உழவர்சந்தை அழிக்கபட்டது. கலைஞர் ஆட்சி கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைத்தது. [...]

பாண்டிச்சேரியில் ஒரு நாள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காகப் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். புகைப்படக்கலைஞரும் எனது நண்பருமான இளவேனில் வரவேற்று சிறப்பான உபசரிப்புகளைச் செய்தார். மாலையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். முன்னதாகத் திரைக்கலைஞர் சிவக்குமார் அவரைக் காண்பதற்காக வந்திருந்தார். சிவக்குமார் எழுத்தாளர்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர். கி.ரா குடும்பத்துடன் அவர் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றார். கி.ரா பூரண ஆரோக்கியத்துடன் தெளிவான நினைவாற்றலுடன் இருந்தார். கி.ராவைச் [...]

கேரள புத்தகக் கண்காட்சி

கேரள சாகித்ய அகாதமி சார்பில் திருச்சூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காகச் சென்றிருந்தேன். தமிழகத்தில் எத்தனையோ புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் புத்தகக் காட்சிகள் எதையும் எழுத்தாளர் எவரும் துவக்கி வைத்ததேயில்லை. தமிழகம் தரத்தயங்கிய கௌரவத்தைக் கேரளம் தந்திருக்கிறது. எழுத்தாளர்களை, கலைஞர்களை மதித்துக் கௌரவிப்பதில் கேரளம் முன்னோடி என்பதற்குச் சாட்சியாகவே இதைக் காண்கிறேன். விமான டிக்கெட் கொடுத்து ஐந்து நட்சத்திரவிடுதியில் தங்கவைத்துச் சிறப்பு விருந்தினராகச் [...]

இளம்பகவத்

இளம் ஐஏஎஸ் அதிகாரியான இளம்பகவத் நேற்று தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தார். ஐஏஎஸ் தேர்விற்காகத் தயாராகும் பலரும் என்னை வந்து சந்திப்பதுண்டு. தமிழ் இலக்கியம், வரலாறு, நுண்கலைகள் சார்ந்து விவாதிப்பார்கள். விகடனில் கதாவிலாசம் எழுத துவங்கிய நாள் முதல் இளம்பகவத் என்னைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார். இந்திய ஆட்சிப்பணியில் உள்ள பலர் தீவிர இலக்கியவாசிப்புக் கொண்டவர்கள் என்பதை அறிவேன். தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலே ஐஏஎஸ் எழுதி இந்திய அளவில் 117வது இடம்பிடித்துச் சாதனை [...]

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: