அனுபவம் - Welcome to Sramakrishnan


‘அனுபவம்’

நாளை மற்றுமொரு நாளே

கடந்த நான்கு நாட்களாக ஊட்டியிலிருந்தேன், எங்குத் திரும்பினாலும் ஒரே கூட்டம், நெரிசல், வாகன ஒசை. சென்னை ரங்கநாதன் தெருவிற்குள் இருப்பது போலவே உணர்ந்தேன். ஊட்டியின் பரபரப்பிலிருந்து தப்பி அவலாஞ்சிக்குள் போய்விட்டேன், இருபுறமும் சைப்ரஸ் மரங்கள். கண்படும் இடமெல்லாம் பசுமை, நீரோடைகள்.பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூத்திருந்தது. அப்பர் பவானி வரை சென்று வந்தேன். வழியெங்கும் மிக அரிய, விதவிதமான மரங்கள். மஞ்சளும் நீலமுமாகப் பூத்துச் சொரியும் செடிகள், பவானி ஆலயத்தின் அருகே விழுந்து கொண்டிருக்கும் [...]

தூண்டில்

நேற்றிரவு ஒரு கனவு வந்தது, அதில் ஒரு கண்மாய். கரையில் தூண்டிலை வைத்தபடியே மீன்பிடிப்பதற்காகக் காத்திருக்கிறேன், பள்ளிவயதில் நான் வழக்கமாக மீன்பிடிக்கப்போகும் கண்மாய் அது. கரை முழுவதும் புளியமரங்கள், மழை பெய்து கண்மாய் நிரம்பியிருக்கிறது. அசைந்து கொண்டிருக்கும் தக்கையைப் பார்த்தபடியே கரையில் உட்கார்ந்திருக்கிறேன், அந்த இடத்தில் என்னைத் தவிர யாருமேயில்லை. தண்ணீரின் மீது வெயில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. தூண்டிலை மீன் கடித்து இழுக்கிறது. தக்கை இழுபட்டு நகர்கிறது, மீன் நன்றாகக் கடிக்கட்டும் என நரம்பு கயிறை நழுவவிடுகிறேன், [...]

வெற்றிகரமான முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வில் 175 பேர் கலந்து கொண்டார்கள், இதில் எழுபது சதவீதம் பேர் இளைஞர்கள், தீவிர வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள், பெங்களுர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கோவை என வேறுவேறு ஊர்களில் இருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டார்கள் மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த முகாமிற்கு இயக்குனர் சசி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், பேராசிரியர் ராமகுருநாதன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள் எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, அகநாழிகை வாசுதேவன், [...]

மறக்கமுடியாத தருணங்கள்

2005-ம் ஆண்டில் குற்றாலத்தில் நான் நடத்திய இலக்கிய முகாமின் புகைப்படங்களை நண்பர் முரளிமனோகர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்செயலாக அதன் இணைப்பை நேற்று ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். புகைப்படங்களைக் காணும் போது பரவசமாக இருந்தது. குற்றாலச்சாரலில் நனைந்தபடியே இரண்டு நாட்களும் பகலிரவாகத் தொடர்ந்த உரையாடல்கள், வேடிக்கை கதைகள், தீவிர இலக்கிய விவாதங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன, அரிய தருணங்களைப் புகைப்படமாகச் சேகரித்து வைத்துள்ளதற்கு நன்றி முரளி. அந்த முகாமில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன், பூமணி, சோ,தர்மர், [...]

நன்றி வெங்கட்

நான் வெயில்காலத்தில் பிறந்தவன், வெயிலேறிய கிராமத்தில் வளர்ந்தவன், ஆகவே ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலமும் எனக்கு ஒவ்வாதவை, அதைக் கடந்து செல்வதற்காக நிறைய முன்தயாரிப்புகள், பிரயாசைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது குறிப்பாகக் குளிர் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை, பின்னிரவுகளில் விழித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு எப்போது சூரியன் உதயமாகும் எனக் கதகதப்பிற்குக் காத்துக் கொண்டிருப்பது விநோதமான அனுபவம், இந்தக் குளிர்காலமும் அப்படித்தான் துவங்கியிருக்கிறது, இரண்டு முறை மருத்துவரிடம் சென்று குளிர்காய்ச்சலுக்கான மருந்துகளைப் பெற்றுவந்துவிட்டேன், காய்ச்சல் குறைந்துவிட்டது ஆனால் மனநிலை பிடிப்பற்று [...]

கூட்ஸ் பயணம்

எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது, பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன், அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம்,  ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள், இந்த உலகிலே மிகதனிமையானது [...]

சிவகாசி வெடிவிபத்து

சிவகாசி வெடிவிபத்து பற்றி அறிய நேர்ந்த நிமிஷத்தில் இருந்து பல்வேறு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் என்னை அழைத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் என்ற முறையில் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கத் துவங்கினார்கள், இது விபத்தில்லை, அறிந்தே தொடரும் கொலைகள் என்று சொன்னேன், இந்த ஆண்டு நடக்கும் ஒன்பதாவது விபத்து இதுவெனச் சொல்கிறார்கள், கொள்ளை லாபத்திற்கு மனிதஉயிர்கள் பலியாகின்ற கொடுமை இது. எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து ஆண்டு [...]

தண்ணீரின் சிறகுகள்

கனடாவில் பயணம் செய்யும் வரை தண்ணீரைப் பற்றி என் மனதில் பதிந்திருந்த சித்திரம் வேறாகவே இருந்தது, கனடாவின் பிரம்மாண்டமான ஏரிகள் அந்த பிம்பத்தை முற்றிலும் மாற்றிவிட்டன தண்ணீருக்குச் சிறகுகள் இருப்பதைக் கனடாவின் ஒன்டாரியோ ஏரியையும், சிம்கோ ஏரியையும்,  பார்த்த போது தான் உணர்ந்தேன், கண்கொள்ளமுடியாதபடி அகன்று விரிந்து கிடக்கிறது ஏரி, கடலிடமுள்ள ஆர்ப்பரிப்பு கிடையாது, சுவையான நல்ல தண்ணீர், அடிவானத்தோடு தண்ணீர் ஒன்று சேர்ந்திருப்பதால் ஆகாசம் தான் தண்ணீராக உருமாறியிருக்கிறதோ எனும்படியாக நீர்பரப்பு விரிந்து கிடக்கிறது, குட்டி [...]

ஷேக்ஸ்பியரின் முன்னால்

டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது ஸ்ட்ராட்போர்ட்,  பிரிட்டீஷ்காரர்கள் அதிகம் வசிக்கும் அழகிய சிறிய நகரம், இங்கே ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதற்காக ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே பிரத்யேகமான குளோப் தியேட்டர் எனும் விஷேச அரங்கினை உருவாக்கியிருக்கிறார்கள், இந்தக் கோளவடிவ அரங்கில் ஒரு நேரத்தில் 1800 பேர் உட்கார்ந்து நாடகம் பார்க்க முடியும் இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகப்பிரதிகள் நவீனகால ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் மூலவடிவத்திலே நிகழ்த்தப்படுகின்றன, ஒரு நாடகம் மூன்று [...]

ரிவேரா வளாகம்.

கனடா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் அதிகம் நான் பார்வையிட்டது  அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களையே, குறிப்பாக பிகாசோவின் நூற்றுக்கும் மேற்பட்ட ஒவியங்கள், ரெம்பிராண்ட், வான்கோ,  டாலி,  கோயா, பிரைடா காலோ, மடீசி,  வெர்மர், ரெனார், பால்காகின், ரூசோ, பிளேக், எட்கர் டீகாஸ், புரூகேல், வில்லியம் பிளேக், மிரோ, காடீன்ஸ்கி, முன்ச், கிளிம்ட், எட்வர்ட் ஹாபர், மார்சல் டச்ஹாம், பால் செசான், மார்க் செகால், மோடில்யானி, கமிலோ பிசாரோ, டூரர் போன்ற ஒவியமேதைகளின் படைப்புகளைக் கண்டது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம், [...]

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: