அனுபவம் - Welcome to Sramakrishnan


‘அனுபவம்’

போர்ஹேயின் வகுப்பறை

அமெரிக்கப் பயணத்தை திட்டமிடும் போதே மிஷிகன் மாநிலத்தில் உள்ள கிழக்கு லான்சிங் பல்கலைகழகத்தை ஒரு முறைப் பார்வையிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன், அங்கே தான் எனது விருப்பத்திற்குரிய எழுத்து ஆளுமை ஜோர்ஜ் லூயி போர்ஹே (Jorge Luis Borges ) 1975ல் கௌரவ டாக்டர் பெற்றார், கவிதை குறித்து அப்பல்கலைகழகத்தில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார், லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் கவிஞர், புனைகதையாசிரியர் என்று கொண்டாடப்படும் ஜோர்ஜ் லூயி போர்ஹே பார்வையற்றவர், ஆனால் அதை ஒரு தடையாகக் [...]

வெரியர் எல்வின்

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஒரிசாவின் கோரபுட்டின் அருகில் உள்ள பழங்குடியினரின் வாரச்சந்தையில் சுற்றிக் கொண்டிருந்தேன்,  அந்த இடத்திற்கு வந்ததில் இருந்து வெரியர் எல்வினே (Verrier Elwin ) நினைவில் வந்து கொண்டிருந்தார், எல்வின் அந்தச் சந்தையைப் பற்றி எழுதியிருக்கிறார். பழங்குடி மக்கள் ஒன்று கூடும் கிராமசந்தையது, ஒரு பக்கம் கூடை கூடையாக குவித்து வைக்கபட்டுள்ள விதவிதமான கருவாடுகள், குச்சியில் குத்தி வைக்கபட்டுள்ள உலர்ந்த மாமிசம், மலிவான உடைகள், காய்கறிகள், பழங்கள், பலசரக்கு பொருட்கள், நகரங்களில் இருந்து [...]

வாசகர் கலந்துரையாடல்

இன்று புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற வாசகர் கலந்துரையாடலில் நான் பேசினேன், பாரதி புத்தகாலயத்தை சேர்ந்த நண்பர் நாகராஜன் அந்த நிகழ்வை ஒருங்கிணைவு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள், கூட்டம் நிரம்பி வெளியே  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டே கேட்டார்கள், இலக்கியம், புத்தகவாசிப்பு, சினிமா, பயணம், மகாபாரதம், கல்வி , ஏழு இலக்கியப்பேருரைகள், பௌத்தம் என்று பல்வேறு துறை சார்ந்த விஷயங்கள் குறித்துக்கேள்விகள் கேட்டார்கள், பத்திரிக்கையாளர் ஞாநி கலந்துரையாடலை ஒருங்கிணைப்பு செய்தார், ஒன்றரை மணி நேரம் விறுவிறுப்பாக நடந்த கேள்வி [...]

புத்தக கண்காட்சியில்

நேற்றும் இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்து பதினைந்து புத்தகங்களை வாங்கினேன், இந்த முறை அதிகமான கடைகள் இருக்கின்றன, ஆனால் மிக குறைவாகவே அரிய புத்தகங்கள் உள்ளன, புதிது புதிதாக நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை குவித்திருக்கிறார்கள்,  அதில் பாதிக்கு மேலான புத்தகங்கள் சந்தைக்கு உருவாக்கபட்ட மலினமான சரக்குகள், இரண்டு நாட்களிலும் அதிக கூட்டமில்லை, நாளையில் இருந்து அதிக கூட்டம் வரக்கூடும், இந்த இரண்டு நாட்களில் நான் தேர்வு செய்த முக்கியமான புத்தகங்கள் 1)      ஒக்ககூரா காக்குஜோ எழுதிய ஜப்பானிய [...]

என் பள்ளி

பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு, அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தைத்  தந்தபடியே இருப்பதே அதன் தனித்துவம், கையால் தலையைச் சுற்றி காதைத் தொட்டுவிட முடிகிறது என்ற ஒரு தகுதி தான் என்னைப் பள்ளியில் சேர்க்க உதவியது, அது தான் அன்றைய காலத்தின் நுழைவுத்தேர்வும் கூட, பொதுவாக சரஸ்வதி பூஜை காலத்தில் தான் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும், ஆறு வயதில் அப்படி ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பிறகு கடையில் ஆரஞ்சு மிட்டாய்கள் வாங்கிக் கொண்டு [...]

பசியாறிட்டீங்களா.

ஒரு வார கால மலேசியப் பயணத்திலிருந்து இன்று சென்னை திரும்பினேன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நான் நடத்திய மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள், காலை எட்டு மணிக்குத் துவங்கிய பயிலரங்கு இரவு 11 மணிவரை நடைபெற்றது, உற்சாகத்துடன் கூடிப்பேசி விவாதித்தது சிறப்பாக இருந்தது, ஒரு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளில் இருந்து சிறந்த  ஒன்றைத் தேர்வு செய்து ஆயிரம் ரிங்கட் பரிசு தருகிறார்கள், அந்த தேர்வுக்குழு தலைவராக [...]

விடுமுறைக் குறிப்புகள்

புத்தக வெளியீடுகள், கண்காட்சி என்று டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் பரபரப்பாக ஒடியாடியதில் இருந்து விடுபட்டு சில நாட்களாக கன்யாகுமரி மற்றும் திற்பரப்பு அருவி என்று ஒய்வில் இருந்தேன், எவ்வளவோ முறை கன்யாகுமரிக்கு வந்திருந்த போதும் அது புதியதாகவே இருக்கிறது, அறையின் ஜன்னலைத் திறந்தால் கடல். பின்னிரவில் கடற்கரையில் சுற்றி அலைந்தேன், கடல்காற்றைப் போல உன்னதமானது உலகில் வேறில்லை, கடல் மீது நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன,  பனியோடு கூடிய இரவு கடலின் நீல மயக்கம் மனதைப் பெரிதும் சாந்தம் [...]

நூலாறு

நேற்று வேலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.  ஆழிபதிப்பகம் நடத்தும் நண்பர் செந்தில்நாதன்.  தன்னுடைய அரிய முயற்சியால் இந்தப் புத்தக கண்காட்சியைத் தனது ஆழி அறக்கட்டளை மற்றும் வேலூர் வாசகர் பேரவை அமைப்புடன் இணைந்து முதன்முறையாக துவக்கியுள்ளார்.  புத்தகக் கண்காட்சி அல்லது புத்தக திருவிழா என்பதற்கு மாற்றாக நூலாறு 2010 என்று அவர்கள் விளம்பரப்படுத்தியிருந்தது பிடித்திருந்தது. எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தப் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பில் அயராது ஒடியாடி வேலை செய்து கொண்டிருந்தார், புத்தகங்கள் மீது அவர் கொண்ட [...]

ஜல்லிக்கட்டு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பர் ராம்நாராயண் எனும் ராம்ஜி ஹோம்டிவி என்ற நியூடெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஜல்லிகட்டு பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்க முனைந்தார். அப்போது நான் அவருடைய அறைத்தோழனாக இருந்தேன். ராம்ஜி பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். இன்று தொலைக்காட்சி தொடர்கள், விவாத நிகழ்வுகள் என்று விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது முதல் ஆவணப்படமது என்பதால் நாங்கள் சிறிய குழுவாக செயல்பட்டு அதை சிறப்பாக [...]

வயது நாலு

நண்பரின் வீட்டில் அவரது நான்கு வயது மகளைச்  சந்தித்தேன்.  உன் பேரு என்னவென்று கேட்டேன். சம்ஷிகா என்றாள். உனக்கு எத்தனை வயசாகுது என்று கேட்டேன். எனக்கு நாலு வயது ஆகுது. இந்த வீட்டிலயே நான் தான் பெரிய ஆள் என்றாள். உங்க அப்பாவுக்கு எவ்வளவு வயசு ஆகுது என்று கேட்டேன். அதை போய் அவர்கிட்டே கேளு என்றாள். உனக்கு என்ன பிடிக்கும் என்றேன். அவள் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் ரிமோட் கண்ட்ரோல் என்றாள். நண்பர் சிரித்தபடியே [...]

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: