அனுபவம் - Welcome to Sramakrishnan


‘அனுபவம்’

புத்தக கண்காட்சியில்

நேற்றும் இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்து பதினைந்து புத்தகங்களை வாங்கினேன், இந்த முறை அதிகமான கடைகள் இருக்கின்றன, ஆனால் மிக குறைவாகவே அரிய புத்தகங்கள் உள்ளன, புதிது புதிதாக நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை குவித்திருக்கிறார்கள்,  அதில் பாதிக்கு மேலான புத்தகங்கள் சந்தைக்கு உருவாக்கபட்ட மலினமான சரக்குகள், இரண்டு நாட்களிலும் அதிக கூட்டமில்லை, நாளையில் இருந்து அதிக கூட்டம் வரக்கூடும், இந்த இரண்டு நாட்களில் நான் தேர்வு செய்த முக்கியமான புத்தகங்கள் 1)      ஒக்ககூரா காக்குஜோ எழுதிய ஜப்பானிய [...]

என் பள்ளி

பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு, அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தைத்  தந்தபடியே இருப்பதே அதன் தனித்துவம், கையால் தலையைச் சுற்றி காதைத் தொட்டுவிட முடிகிறது என்ற ஒரு தகுதி தான் என்னைப் பள்ளியில் சேர்க்க உதவியது, அது தான் அன்றைய காலத்தின் நுழைவுத்தேர்வும் கூட, பொதுவாக சரஸ்வதி பூஜை காலத்தில் தான் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும், ஆறு வயதில் அப்படி ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பிறகு கடையில் ஆரஞ்சு மிட்டாய்கள் வாங்கிக் கொண்டு [...]

பசியாறிட்டீங்களா.

ஒரு வார கால மலேசியப் பயணத்திலிருந்து இன்று சென்னை திரும்பினேன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நான் நடத்திய மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள், காலை எட்டு மணிக்குத் துவங்கிய பயிலரங்கு இரவு 11 மணிவரை நடைபெற்றது, உற்சாகத்துடன் கூடிப்பேசி விவாதித்தது சிறப்பாக இருந்தது, ஒரு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளில் இருந்து சிறந்த  ஒன்றைத் தேர்வு செய்து ஆயிரம் ரிங்கட் பரிசு தருகிறார்கள், அந்த தேர்வுக்குழு தலைவராக [...]

விடுமுறைக் குறிப்புகள்

புத்தக வெளியீடுகள், கண்காட்சி என்று டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் பரபரப்பாக ஒடியாடியதில் இருந்து விடுபட்டு சில நாட்களாக கன்யாகுமரி மற்றும் திற்பரப்பு அருவி என்று ஒய்வில் இருந்தேன், எவ்வளவோ முறை கன்யாகுமரிக்கு வந்திருந்த போதும் அது புதியதாகவே இருக்கிறது, அறையின் ஜன்னலைத் திறந்தால் கடல். பின்னிரவில் கடற்கரையில் சுற்றி அலைந்தேன், கடல்காற்றைப் போல உன்னதமானது உலகில் வேறில்லை, கடல் மீது நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன,  பனியோடு கூடிய இரவு கடலின் நீல மயக்கம் மனதைப் பெரிதும் சாந்தம் [...]

நூலாறு

நேற்று வேலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.  ஆழிபதிப்பகம் நடத்தும் நண்பர் செந்தில்நாதன்.  தன்னுடைய அரிய முயற்சியால் இந்தப் புத்தக கண்காட்சியைத் தனது ஆழி அறக்கட்டளை மற்றும் வேலூர் வாசகர் பேரவை அமைப்புடன் இணைந்து முதன்முறையாக துவக்கியுள்ளார்.  புத்தகக் கண்காட்சி அல்லது புத்தக திருவிழா என்பதற்கு மாற்றாக நூலாறு 2010 என்று அவர்கள் விளம்பரப்படுத்தியிருந்தது பிடித்திருந்தது. எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தப் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பில் அயராது ஒடியாடி வேலை செய்து கொண்டிருந்தார், புத்தகங்கள் மீது அவர் கொண்ட [...]

ஜல்லிக்கட்டு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பர் ராம்நாராயண் எனும் ராம்ஜி ஹோம்டிவி என்ற நியூடெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஜல்லிகட்டு பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்க முனைந்தார். அப்போது நான் அவருடைய அறைத்தோழனாக இருந்தேன். ராம்ஜி பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். இன்று தொலைக்காட்சி தொடர்கள், விவாத நிகழ்வுகள் என்று விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது முதல் ஆவணப்படமது என்பதால் நாங்கள் சிறிய குழுவாக செயல்பட்டு அதை சிறப்பாக [...]

வயது நாலு

நண்பரின் வீட்டில் அவரது நான்கு வயது மகளைச்  சந்தித்தேன்.  உன் பேரு என்னவென்று கேட்டேன். சம்ஷிகா என்றாள். உனக்கு எத்தனை வயசாகுது என்று கேட்டேன். எனக்கு நாலு வயது ஆகுது. இந்த வீட்டிலயே நான் தான் பெரிய ஆள் என்றாள். உங்க அப்பாவுக்கு எவ்வளவு வயசு ஆகுது என்று கேட்டேன். அதை போய் அவர்கிட்டே கேளு என்றாள். உனக்கு என்ன பிடிக்கும் என்றேன். அவள் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் ரிமோட் கண்ட்ரோல் என்றாள். நண்பர் சிரித்தபடியே [...]

கனவின் மிச்சம்

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் தி போப்ஸ் டாய்லெட்.(ThePope’s Toilet) உருகுவே நாட்டில் தயாரிக்கபட்ட படமிது. இயக்கியவர் Cesar Charlone and Enrique Fernandez. 2007ம் ஆண்டு வெளியான இப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதிற்குச் சிபாரிசு செய்யபட்டது. லத்தின் அமெரிக்க நாடான உருகுவேயில் கதை நடைபெறுகிறது. மெலோ என்ற சிறிய ஊர். உருகுவே பிரேசில் எல்லையில் உள்ளது. இந்த ஊருக்கு 1988ம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் விஜயம் செய்யப் போவதாக [...]

தொலைத்த ஆடைகள்

அறையில்லாமல் சென்னையில் அலைந்து திரிந்த நாட்களில் நிறைய தொலைத்திருக்கிறேன். சில அறைகளை நான் ஊருக்கு சென்று திரும்பிவருவதற்குள் காலி செய்து போயிருப்பார்கள். அந்த அறையில் வைக்கபட்டிருந்த எனது புத்தகங்கள் உடைகள் பைகள் யாவும் தூக்கி எறியப்பட்டிருக்கும்.அல்லது பழைய பொருட்கள் கடைக்கு போயிருக்க கூடும். அப்படியொரு முறை அறையில் ஒரு பை நிறைய புத்தகங்களும் உடைகளையும் வைத்து விட்டு இரண்டு மாத காலம் ஊருக்கு சென்று இருந்துவிட்டேன். திரும்பி வருவதற்குள் அறையில் ஏதேதோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நண்பர்களாக இருந்தவர்கள் [...]

கனகசபை

கனகசபை என்பது அவனது பெயர், ஆனால் அப்படி யாரும் கூப்பிட்டு நான் பார்த்தேயில்லை. பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோருக்கும் அவன் கனகு தான். கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனத்தில் வாழ்ந்தவன். நாற்பது வயதை கடந்திருக்கும். இலக்கியம் எழுத்து புத்தக வாசிப்பு என்று தன் வாழ்வை கொண்டுசெலுத்தி அற்பவயதில் இறந்து போனான். நான் அறிந்தவரை இலக்கியத்திற்காக கைக்காசை முழுமையாக செலவு செய்த ஒரே ஆள் கனகு மட்டுமே. கனகு ஒரு இலக்கியவாதிக்கு போன் செய்து பேசினால் எப்படியும் ஒரு மணி [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: