அறிவிப்பு - Welcome to Sramakrishnan


‘அறிவிப்பு’

பிரண்ட்லைன் இதழில்

எனது சிறுகதை பிழைதிருத்துபவனின் மனைவி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இம்மாத பிரண்ட்லைன் இதழில்  வெளியாகியுள்ளது. திலீப்குமார் தொகுத்த The Tamil Short Story: Through the Times, Through the Tides (Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy) தொகுப்பிலிருந்து இக்கதை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது Translation of the Tamil short story Pizhai Thirutthubavanin Manaivi by S. Ramakrishnan. http://www.frontline.in/arts-and-culture/literature/the-proofreaders-wife/article9473926.ece?homepage=true நன்றி  : விஜயசங்கர் பிரண்ட்லைன் திலீப்குமார்

சிவன் பார்க்கில்

நேற்று கே.கே.நகர் சிவன் பார்க்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டம் https://www.facebook.com/shrutiwebtv/videos/826535620820631/ நன்றி    ஸ்ருதிடிவி வேடியப்பன்

ஒன்று கூடுவோம்

மாணவர் எழுச்சியை ஆதரிப்போம்

தமிழகம் காணாத அளவில் எழுந்துள்ள மாணவர் எழுச்சியை ஆதரிப்போம். இது ஒரு அடையாளப் போராட்டம். ஜல்லிகட்டு இதன் குவிமையம் என்ற போதும் மாணவர்களின் சமூக அக்கறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அமைதியான முறையில் வீதியில் இறங்கிப் போராடிய வரும் இளைய சமுதாயத்தை வாழ்த்துவோம். அவர்கள் நம் அனைவரின் உரிமைகளுக்காகவுமே களம் இறங்கி உள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும் உடனிருந்து ஆதரவு தருவதும் நமது கடமை. இது குறித்துப் புதிய தலைமுறை நேர்படப்பேசு நிகழ்வில் நான் பேசியதன்காணொளி [...]

கிராபிக் கதைகள்

Graphic Artist பூபதியை நேற்று புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். இவர் கலைவிமர்சகரான தேனுகாவின் பையன். மறைந்த கலைவிமர்சகர் தேனுகாவுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அற்புதமான மனிதர்.  பூபதியைப் பார்த்த மாத்திரம் மனதில் தேனுகாவின் மலர்ந்த சிரிப்பும் வாஞ்சையும் பீறிட்டது. பூபதி அகமதாபாத்திலுள்ள  NIDயில் Graphic Design படித்து முடித்துவிட்டு தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார்.  தனது கவிதை மற்றும் சிறுகதைகளை ஒவியத்துடன் சிறிய கிராபிக் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். தனது இணையப்பக்கத்தில் இவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளும்படியாகவும்  வைத்திருக்கிறார் பூபதி. [...]

அஞ்சலி

என் ப்ரியத்துக்குரிய வானவன் மாதேவி இன்று காலை 11  30 மணிக்கு  சேலத்தில் காலமானார் . தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாகச் சிகிட்சை பெற்று வந்த போதும் பலருக்கும் தன்னம்பிக்கையூட்டும் பெண்ணாக இருந்தவர் வானவன் மாதேவி. அவரைப் போல நோயால் பாதிக்கப்பட்ட  பலருக்கும் அரிய சேவைகளைச் செய்திருக்கிறார். தன் உடற்சிரமத்தைப் பொருட்படுத்தாமல் தேடித்தேடி படித்தவர், மிகுந்த சமூக அக்கறை  கொண்டவர். அவரது மறைவு பெருந்துயரமாக  மனதை அழுத்துகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் வல்லபிக்கும் எனது [...]

அன்பிற்குரிய தோழர் எஸ். ஏ.பி எழுதியுள்ள சிறுகுறிப்பு •• பதின் நாவல் படித்தேன் ……. ……….. …………… Sap Marx எஸ்ரா எழுதிய புதியநாவலான பதின் அருமையாக வந்துள்ளது. பதின் என்றால் பத்து.ஒரு பதின் வயதுச்சிறுவனின் வாழ்வு.. அவனது சிறுவயது அனுபவங்கள் சுவைபடப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு சிறு வயது நினைவுகள்மட்டும் மரணம்வரை மறப்பதில்லை. இது தனியொருவனின் கதையல்ல.இதில் வரும் நான் என்ற சொல் என்னைக் குறிக்கவில்லை…நம்மைக்குறிக்கிறது என்கிறார் எஸ்ரா. சிறுவயது அனுபவங்கள் வாசிக்கும் நம்மை நமது [...]

புக் மார்க்

புத்தகம் படிப்பவர்களுக்கு உதவும் விதமாக டிஸ்கவரி புக் பேலஸ் எனது படைப்புகளிலிருந்து தேர்வு செய்த வரிகளைக் கொண்ட  புக் மார்க்குகளை வெளியிட்டுள்ளது. இதனைச் சிறப்பாக வடிவமைப்பு செய்திருப்பவர் கவிஞர் நரன். நன்றி வேடியப்பன்.நன்றி நரன். தேவைப்படுகிறவர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் ••

ஆங்கிலத்தில்

எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Two Bubbles என்ற தலைப்பில்  வெளியாகியுள்ளது. கதைகளை மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர் P. ராம்கோபால். IUP  இதனை வெளியிட்டுள்ளது. இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் Leftword, மற்றும் பாரதி புத்தகாலயம் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கிறது. விலை ரூ 200.

இடக்கை புதிய பதிப்பு

இடக்கை நாவலின் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெகுசிறப்பாக  வெளியிட்டுள்ளது. இந்நாவல் குறித்து இதுவரை பதினாறு விரிவான விமர்சனக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்நாவலின் ஹிந்தி மொழியாக்கம் தற்போது நடைபெற்றுவருகிறது.

Archives
Calendar
January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: