அறிவிப்பு - Welcome to Sramakrishnan


‘அறிவிப்பு’

சிங்கப்பூரில்

Singapore Writers Festival 2017 லில் கலந்து கொள்வதற்காக வெள்ளிகிழமை சிங்கப்பூர்  செல்கிறேன். மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன் 11/11/2017 1:30 – 3:00pm The Arts House (Screening Room) இளம் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும் எழுத்துலகில் அவர்களுக்குக் காத்திருக்கும் வாய்ப்புகளையும் பற்றிய குழு விவாதம் , அதை ஒருங்கிணைத்து நடத்துகிறேன் •• 12/11/2017 2:30-3:30pm The Arts House (Screening Room) அறத்திற்கு அப்பால் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் அற இலக்கியங்களின் பங்களிப்பு [...]

அந்தி மழை இதழில்

இம்மாத அந்திமழை இதழில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது 06.11.2017

விகடன் தடம் இதழில்

இம்மாத விகடன் தடம் இதழில் தேவதச்சனின் கவிதைகள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்

ஷார்ஜாவில்

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் நவம்பர் 3  வெள்ளிகிழமை இரவு 8 : 30 மணிக்கு உரையாற்றுகிறேன்

அஞ்சலி

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி இன்று காலை காலமானார். விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாடு என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்த மேலாண்மை பொன்னுசாமி தினமும் அவரது கடைக்குரிய பலசரக்குப் பொருட்கள் வாங்குவதற்காக விருதுநகருக்கு வருவார். அந்த வேலை அரைமணி நேரத்தில் முடிந்துவிடும். நானும் நண்பர்களும் அவருடன் இணைந்து டீ குடித்தபடியே பலமணி நேரம் இலக்கியவிவாதம் செய்வோம். சினிமா பார்ப்போம். கிராம வாழ்வினை அசலாகப் பதிவு செய்த எழுத்தாளர் மேலாண்மை. கதைகள் எழுதி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறார். சில [...]

தமிழ் ஸ்டுடியோ நிகழ்ச்சி

தமிழ் ஸ்டுடியோ அருண் மிகுந்த அர்ப்பணிப்புடன் மாற்றுசினிமா குறித்த கலந்துரையாடல், பயிலரங்கு. சிறப்பு நிகழ்ச்சிகள், திரையிடல், விருது வழங்குவது எனச்செயல்பட்டு வருகிறார். சினிமா புத்தகங்களுக்காகவே ப்யூர் சினிமா என்ற அங்காடி ஒன்றினையும் நடத்தி வருகிறார். அவரது தீவிரமான செயல்பாடும் ஆர்வமும் மிகுந்த பாராட்டிற்குரியது. தமிழ் ஸ்டுடியோ சார்பில் படிமை இயக்கம் துவங்கப்பட்ட போது அதற்கு சிறப்பு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். பாலுமகேந்திராவிற்கு விழா எடுத்த போது அதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருக்கிறேன். தமிழ் சினிமா நூற்றாண்டினைச் சிறப்பிக்கும் [...]

போர்ஹெஸ்

போர்ஹெஸ் சிறுகதைகள், கட்டுரைகள் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பினை யாவரும் பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்துள்ளது. போர்ஹெஸை தமிழுக்கு அறிமுகம் செய்து அவரது கதைகள் கவிதைகளை  தொடர்ந்து மொழியாக்கம் செய்தவர் கவிஞர் பிரம்மராஜன். அவரது மீட்சி சிறுபத்திரிக்கை உலகில் மிகவும் தனித்துவமான இதழாகும். உலக இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்தததில் மீட்சி பெரும்பங்கு வகித்திருக்கிறது. ஆங்கிலப் பேராசிரியரான பிரம்மராஜன் சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், குற்றாலம் கவிதை பட்டறையை கலாப்ரியாவோடு இணைந்து நடத்தியவர். பிரம்மராஜன் தொகுத்த போர்ஹெஸ் சிறுகதைகள் முன்னதாக ஸ்நேகா [...]

தீபாவளி மலரில்

ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் எனது சிறுகதை பாங்கிணறு வெளியாகியுள்ளது.

விகடனில்

இந்த வார விகடன் (4500 வது )சிறப்பிதழில் இடம் பெற்றுள்ள நேர்காணல் 05.10.2017

அசோகமித்திரனின் பத்து முகங்கள்

கோலம் வழங்கும் அசோகமித்திரன் விருது 2016-17 அசோகமித்திரனின் பத்து முகங்கள் – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை https://www.youtube.com/watch?v=5JwKkQW3Vls

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: