அறிவிப்பு - Welcome to Sramakrishnan


‘அறிவிப்பு’

கதை சொல்கிறார்கள்

கோடைவிடுமுறையில் குழந்தைகளை ஒன்று கூட்டி எனது கடவுளின் நாக்கு புத்தகத்திலுள்ள கதைகளைப் பகிர்ந்துவருகிறார்கள் இரண்டு ஆசிரியர்கள். துறையூரைச் சேர்ந்த பெருமாள் என்ற ஆசிரியரும் அவரது துணைவியாரும் தங்கள் வீட்டிலே இந்தக் கதை சொல்லும் நிகழ்வை நிகழ்த்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். தி இந்து நாளிதழில் கடவுளின் நாக்கு தொடராக வந்த போது விரும்பி வாசித்தோம். இப்போது அந்த நூலிலுள்ள கதைகளை மாணவர்களை எடுத்துச் சொல்கிறோம். சிறுவர்கள் ஆர்வமாகக் [...]

பிரபஞ்சன் பாராட்டுவிழா

கடந்த ஆண்டு சென்னையில் எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம் என்ற சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்டி  அளித்தோம். அந்த விழாவிற்கு வந்திருந்த புதுவை முதல்வர் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பிரபஞ்சனை நாங்களும் சிறப்பித்துக் கொண்டாடுவோம் என்று உறுதி அளித்தார். அதன்படி கடந்த வியாழன் ( 3.05.2018) அன்று மாலை புதுவையில் அரசு சார்பில் பிரபஞ்சன் அவர்களுக்கு சிறப்பான விழா நடத்தி பத்து லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார்கள். அந்த நிகழ்வில் கலந்து [...]

காணொளி

நேற்று மௌனி பற்றி நான் ஆற்றிய உரையை ஸ்ருதி டிவி பதிவு செய்து வலையேற்றம் செய்துள்ளார்கள். ஸ்ருதிடிவி கபிலனுக்கு மனம் நிரம்பிய நன்றி •• டிஸ்கவரி புக் பேலஸ் & தேசாந்திரி பதிப்பகம் வழங்கும் உலகப் புத்தக தினம் சிறப்பு நிகழ்வு ‘மெளனியைக் கொண்டாடுவோம்’ – எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை S.Ramakrishnan speech https://www.youtube.com/watch?v=yRRwfaW7nqk

மௌனியைக் கொண்டாடுவோம்

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 மாலை 5 மணிக்கு  எழுத்தாளர் மௌனி குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன் இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே. கே. நகர். சென்னை 78 நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து  கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

விமர்சனப் போட்டி

அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி •••• அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி . இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை  அந்திமழை அழைக்கிறது. பரிசு விவரங்கள்: •         முதல் பரிசு – ரூ.10000 •         இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு] •         மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள [...]

வாழ்த்துகள் லிங்கம்

உலகப் புத்தக தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வில் வேலூர் லிங்கம் சிறந்த வாசகர் விருது பெறுகிறார். இந்த விருதிற்கு முழுத்தகுதி கொண்டவர் லிங்கம். தேர்ந்த இலக்கியப்புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க கூடியவர். அவரது வீடே ஒரு நூலகம் போலதானிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வரும் லிங்கம் இந்த விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.  அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல்23 மாலை 5 [...]

நன்றி

நேற்று எனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. பிறந்த நாளுக்காக வாழ்த்து தெரிவித்த எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள் ஊடகத்துறை நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் தீராத நன்றிகள். நேற்றை நிகழ்விற்கு எழுத்தாளர் வண்ணநிலவன் வந்து என்னை வாழ்த்தியது மறக்கமுடியாத நிகழ்வு.அவருக்கு என் அன்பும் நன்றியும். நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்து உதவிய ஆடிட்டர் சந்திரசேகருக்கு நன்றிகள். நிகழ்வை முழுமையாக ஸ்ருதி டிவி நேரலையாக ஒளிபரப்பியது. காணொளிகளும் [...]

சுபமங்களாவில்

சுபமங்களா இதழ்கள் முழுமையாக இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன. அதில் 1992ல் வெளியான எனது மொழிபெயர்ப்பு கதை

கதை பேசுவோம்

பிறந்தநாள்

ஏப்ரல் 13 – எனது பிறந்த நாளை முன்னிட்டு  தேசாந்திரி அலுவலகத்தில்  நண்பர்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன். விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் ஒன்று கூடி தேநீர் அருந்தும் நிகழ்வாக அமைக்கலாம் என எண்ணம். நிகழ்வின் சிறப்பாக  சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை ஒன்றினை வாசிக்க இருக்கிறேன். வாருங்கள், நாம் ஒன்றுகூடி கதை பேசுவோம். நேரம் :  மாலை 5 மணி முதல் 7  : 30 வரை நாள்  : 13.04.2018    வெள்ளிக்கிழமை முகவரி தேசாந்திரி பதிப்பகம் [...]

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: