இயற்கை - Welcome to Sramakrishnan


‘இயற்கை’

பார்க்க வந்த இலை

என்னைப்பார்க்க ஒரு வாசகர் வந்திருந்தார். அவர் கையில் எங்கோ வழியில் பறித்த ஒரு இலையிருந்தது. பச்சை நிறத்தில் அகலமான இலை. அவர் சுவாரஸ்யமாக இலக்கியத் தகவல்களை பேசிக் கொண்டேயிருந்தார். எனக்கோ அந்த இலையிடமிருந்து கவனத்தை அகற்ற முடியவில்லை. எவ்வளவு பசுமை. எவ்வளவு அழகு. அந்த இலை ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறது. இந்த நிமிசம் முன்பு வரை எங்கிருந்தது அந்த இலை. எந்த செடியின் இலையது. நான் அதை இதுவரை கண்டதேயில்லையே. எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறது. [...]

மழை இருட்டு

முந்தாநாள் மாலை நான்கு மணியிருக்கும். பாலாவின் அவன்இவன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். வெளியே பாருங்கள். அதற்குள் இருட்டிவிட்டது என்ற குரல் கேட்டது. அறையை விட்டு வெளியே வந்து நின்று பார்த்தேன். சுற்றிலுமிருந்த மரங்கள் தெரியவில்லை. சட்டென பகல் மறைந்து எங்கும் இருண்டிருந்தது. இது அன்றாடம் காணும் இருளில்லை. சிம்னியை கரிப்புகை மறைத்து கொண்டிருப்பது போல பகல்வெளிச்சத்தை இந்த இருள் மூடிக் கொண்டுவிட்டதோ என்று தோன்றியது. மாலை நான்கு மணிக்கு இப்பிடி இருண்டு போவது அபூர்வம். ஆகாசத்தையே பார்த்துக் [...]

ஆடுகளின் நடனம்

பழனி அருகே ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது என்று பேருந்தில் காத்திருந்தேன். சற்று தொலைவில் சிறிய மலை. அதன் நிறம் பச்சை கலந்த சாம்பல். எல்லையற்ற பரந்த வெளி. பின்மதிய நேரம். உருண்டுகிடக்கும் பாறைகள். கூட்டமாக ஆடுகள் ஆங்காங்கே மேய்ந்துகொண்டிருந்தன. ஆடுகள் மேயும் காட்சி எப்போதுமே மிக பழமையானதொரு காலத்தை நினைவுபடுத்துகிறது. பார்க்க எளியதாக தோன்றும் ஆடுமேய்த்தல் மிக கடினமான வேலை. ஆடுகளின் மீது கண் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். ஆட்டு இடையர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது [...]

தும்பை பூத்த பாதை

மலையடிபட்டி என்ற ஊருக்கு சைக்களில் சென்று கொண்டிருந்தேன். அந்த பாதையில் ஆட்களேயில்லை. வழியெங்கும் தும்பைச் செடிகள் பூத்திருந்தன. இவ்வளவு தும்பைகள் பெருகிய பாதையைக் கண்டதேயில்லை. சைக்கிளை விட்டு இறங்கி நின்று பாதையைத் திரும்பி பார்த்தேன். முன்னும் பின்னும் வளைந்து கிடந்தது பாதை. தொலைவில்  ஊர் தெரிகிறது. எல்லா கிராமங்களும் வெளியில் இருந்து பார்க்கும் போது மிக அழகாகவே இருக்கின்றன. அதன் தோற்றம் யாரோ வரைந்து வைத்துவிட்டு போன சித்திரம் போலவே இருக்கிறது. மரங்கள், வீடுகள், வைக்கோல் போர்கள், [...]

ஆயிரம் கொக்குகள்

டஞ்சோ எனப்படும் கொக்குகள் ஜப்பானில் மிக புகழ்பெற்றவை. இந்த கொக்குகள் ஆயிரம் வருடம் வாழக்கூடியவை என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடமிருக்கிறது. அரிதாகிவரும் இந்தக் கொக்குகளை காப்பாற்றுவதற்காக அரசு பெரும்முயற்சி எடுத்துவருகிறது. டஞ்சோ கொக்கைக் காண்பது நீண்ட ஆயுளைத் தரக்கூடியது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஆன்மாவின் குறியீடாகவும், சமாதானத்தின் அடையாளம் போலவும் கொக்குகள் சித்தரிக்கபடுகின்றன. அதை ஜென் கவிதைகளில் தொடர்ந்து காணமுடிகிறது. டிராகன் போல கொக்குவும் ஒரு புனிதபிம்பமே. நம் ஊரிலும் கொக்குகள் அதிர்ஷடத்தை கொண்டு வருகின்றன என்ற நம்பிக்கையிருக்கிறது. [...]

தும்பை பூத்த பாதை

மலையடிபட்டி என்ற ஊருக்கு சைக்களில் சென்று கொண்டிருந்தேன். அந்த பாதையில் ஆட்களேயில்லை. வழியெங்கும் தும்பைச் செடிகள் பூத்திருந்தன. இவ்வளவு தும்பைகள் பெருகிய பாதையைக் கண்டதேயில்லை. சைக்கிளை விட்டு இறங்கி நின்று பாதையைத் திரும்பி பார்த்தேன். முன்னும் பின்னும் வளைந்து கிடந்தது பாதை. தொலைவில்  ஊர் தெரிகிறது. எல்லா கிராமங்களும் வெளியில் இருந்து பார்க்கும் போது மிக அழகாகவே இருக்கின்றன. அதன் தோற்றம் யாரோ வரைந்து வைத்துவிட்டு போன சித்திரம் போலவே இருக்கிறது. மரங்கள், வீடுகள், வைக்கோல் போர்கள், [...]

அருவிக்காக காத்திருப்பது

இந்த நகரமே அருவிக்காக காத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே குற்றாலத்திலிருக்கிறேன். அடர்ந்து மணக்கும் பகல் வெளிச்சம்.. அருவி வழியும் பாறையில் சப்தமில்லாமல் வழிந்து போகிறது வெயில். பொங்கி சீறும் அருவியை காண்பது போலவே அருவி இல்லாத வெறுமையை கடந்து செல்லும் கண்கள் ஏக்கத்துடன் பார்த்து போகின்றன.அருவி உருவாக்கிய ஊர் என்பது எவ்வளவு பெரிய விசித்திரம். நகரின் வீதிகள், வீடுகள் சாலைகள் மரங்கள் மலை உள்ளிட்ட அத்தனையும் அருவியோட்டத்தால் உருக் கொண்டவை. இந்த நகரின் நினைவில் அருவியோசை தீராமல் [...]

ஹரித்துவாரில் பெய்யும் மழை

என் இருபத்தி நான்காவது வயதில்  ஹரித்துவாரில் இறங்கி நடக்க துவங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் மழைக்காலம் துவங்கியிருந்தது. எனது பயண வழியெங்கும் மழையின் தடங்கள். ஈரமேறிய கற்கள், மரங்கள், ரயில்நிலையங்கள், சிமெண்ட் பெஞ்சுகளை கடந்தே ஹரித்துவாருக்கு வந்திருந்தேன். மழைக்காலத்தில் பயணம் செய்வது  அலாதியானது. பழகிப்பிரிந்த நண்பருடன் மீண்டும் சேர்ந்து பயணம் செய்வது போன்றது. அடர்த்தியான மழை. ஷ்ராவன மாதத்து மழை எளிதில் அடங்காது என்பார்கள். அன்றாடம் கங்கையை பார்த்து களிக்கும் [...]

யானை பார்த்தல்

மகாபலிபுரத்தில் ஒரு கல்யானையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். அதை பார்க்க பார்க்க மனது களிப்புறுகிறது. யானை பார்ப்பது என்பது பால்யத்தின்  விளையாட்டு.  வீதியில் யானை வரும்போது யானையை பார்க்க குழந்தைகளும் பெண்களும் ஆசையாக வீதிக்கு வருவார்கள். வாசற்படி தாண்டால் நின்று வேடிக்கை பார்க்கும் இளம் பெண்களும் உண்டு.  யானை கம்பீரமாக அசைந்து உலா போகும். என்ன பார்க்கிறார்கள் யானையிடம் என்ன பார்க்கிறார்கள். மஹாமௌனம் கண்முன்னே ஊர்ந்து போகிறது. யானை தன்னை வேடிக்கை பார்க்கும் உலகின் மீது அக்கறை கொள்வதில்லை. [...]

அழைக்கும் நிழல்

இரண்டு மாதங்களின் முன்பு காரில் பெங்களுருக்கு சென்று கொண்டிருந்தேன். வேலூரை தாண்டியதும் வழக்கமான பிரதான சாலையில் செல்லாமல் சிறுநகரங்களின் வழியில் போகலாம் என்று தோன்றியது. பிரதான சாலையை விட்டு விலகிய பாதையில் செல்ல துவங்கினேன். புதிய நான்குவழி சாலைகள் எல்லா ஊர்களையும் விலக்கி தனியே சென்று கொண்டிருக்கிறது. எந்த ஊரை கடந்துசெல்கிறோம் என்று கூட தெரிவதில்லை. அன்று நான் சென்ற பாதை சீராக இல்லை. ஆனால் சிறியதும் பெரியதுமான ஊர்கள். வீடுகள், ,  பரபரப்பான மனித இயக்கங்கள். [...]

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: