இயற்கை - Welcome to Sramakrishnan


‘இயற்கை’

மலை தோன்றுகிறது

மாபெரும் மலையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். நான் தங்கியுள்ள வீடு அரைவட்டமாக மலைசூழ உள்ளது. இது ஒரு பண்ணை வீடு. பொதிகை மலையின் இடுப்பில் அமர்ந்திருப்பது போன்றிருக்கிறது.மேகங்கள் புகை செல்வது போல நிதானமாக அதிக வேகமின்றி கடந்து சென்றபடியே இருக்கின்றன. நீர்தாரை வடிவது போலதானிருக்கிறது. மேகங்களின் ஊற்று எங்கோ தொலைவில் இருக்கிறது போலும். வடிந்து ஒடி மேகங்கள் மலைகளின் மீது வழிந்தபடியே இருக்கின்றன. மலையின் மிக உயரத்தில் உள்ள மரம் ஒன்று எங்கோ இருக்கும் மரம் ஒன்றின் நிழல் [...]

விழிக்கும் ஏரி

ஒரு பின்னிரவில் கொடைக்கானல் வந்து இறங்கினேன். மலை தெரியாத அளவு இரவு நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல குளிர்.  குளிராடையை மீறி உடம்பு நடுக்கம் கொண்டது. மலை நகரங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்று கதவை திறந்த போது கூடவே குளிரும் நுழைந்தது. முகம் பார்க்கும் கண்ணாடியெங்கும் குளிர் தெரிந்தது. கம்பளியை இழுத்து போர்த்திக் கொண்டு சுருண்டு கொண்டேன். உறக்கம் கொள்ளவில்லை. தாகமாக இருந்தது. [...]

ஒடும் ஆறு.

கடந்த வெள்ளிகிழமையன்று கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் சென்றிருந்தேன்.  அதிகாலை நேரத்தில் பயணம் செய்தேன். விடியாத இருட்டும் விட்டுவிட்டு பெய்யும் மழையுடன் கூடிய பயணம். கோடையிலும் வயலின் பசுமை கண்ணில் படுகிறது. மண்டியா மாவட்டத்தின் கிராமங்கள் மிக அழகானவை. முற்றிலும் வயல்களுக்கு நடுவில் உள்ள சிறிய கிராமங்கள். ஆற்றங்கரையில் முளைத்துள்ள கிராமங்கள், ஆலமரங்களும் ஒற்றையடி பாதைகளும் கொண்ட கிராமங்கள் என்று காலத்தின் பின்செல்கிறோமோ என தோன்றும் தோற்றங்கள். வாத்து கூட்டம் ஒன்று மண்பாதையில் தனியே சென்று கொண்டிருந்தது. அடிவானத்தினுள் [...]

தண்ணீரோடு பேசுங்கள்.

உலகின் தொலைதூரத்தில் ஒரு வயதான பெண் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி பதினேழு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து போயிருக்கிறாள். அவள்  பெயர். ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin  ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருபிரிவான Anishinabe யை சேர்ந்த அறுபது வயதைக் கடந்த பெண். இன்றும் தனது நெடும்பயணத்திலிருக்கிறாள். கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள மிகப்பெரிய ஏரி தி கிரேட்டர் லேக். இது ஐந்து பெரிய ஏரிகளாகவும் சிறு சிறு ஏரிகள், தீவுகளாகவும் பெரிய கடல் [...]

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: