இலக்கியம் - Welcome to Sramakrishnan


‘இலக்கியம்’

நாசகார உலகம்.

தி.ஜானகிராமன் சிறுகதை ஒன்றினை இன்று வாசிக்கும் போது ஒரு வரி சட்டென்று நிறுத்தியது. அந்த வரியைக் கடந்து போக முடியவில்லை. வாசித்தவுடன் முதலில் சிரிப்பு வந்தது. பின்பு மெல்ல சிரிப்பு மறைந்து இது உண்மையிலே நாசகாரச் செயல் தான் என்று உறைக்கவும் செய்தது. சண்பகப் பூ என்றொரு சிறுகதை. 1948ல் எழுதியிருக்கிறார். கதை முழுவதும் ஒரு பெண்ணின் அழகைப் பற்றிய வியப்பு. ஆராதனை தான். லா.ச.ராவை படிக்கிறோமோ என்று எண்ணும்படியாக இருந்தது. ஆனால் லா.ச.ரா பெண்ணை தெய்வநிலைக்குக் [...]

அசோகன் சருவிலோடு ஒரு நாள்

மலையாளச் சிறுகதையுலகில் மிக முக்கிய எழுத்தாளர் அசோகன் சருவில். இவரது இரண்டு புத்தகங்கள் என்ற சிறுகதை தொகுப்பு தமிழில் வம்சி வெளியீடாக வந்துள்ளது. சுகானா மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் புத்தகம் சென்றவாரம் புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலிற்கான விருதைப் பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருச்சூர் சென்றிருந்த போது அசோகன் சருவில் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். சிறந்த பண்பாளர். எளிமையானவர். சருவிலின் கதைகள் எளிய மனிதர்களின் துயரங்களைப் பேசுபவை. வடிவ உத்திகளை விடவும் வாழ்வின் [...]

அதிகதைகள் – ஒரு அறிமுகம்

சிங்கப்பூரில் உள்ள இளம் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து அரூ என்ற இணைய இதழைக் கொண்டுவருகிறார்கள். மிகச்சிறப்பான படைப்புகளுடன் இதழ் வெளியாகிறது. மிகைப் புனைவும் (fantasy fiction), அறிவியல் புனைவும்  கொண்ட படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் இணைய இதழது.  புதிய கதைவெளியை உருவாக்க முனையும் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். அரூ இதழில் வெளியான எனது சிறுகதை தொகுப்பு பற்றிய கட்டுரையிது. நண்பர் கணேஷ் பாபு தேர்ந்த இலக்கிய வாசகர்.  வெயிலைக் கொண்டு வாருங்கள் சிறுகதைத் தொகுப்பு பற்றி [...]

ஆசி.கந்தராஜாவின் புனைவுக்கட்டுரைகள்

ஆசி. கந்தராஜா ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்துப் படைப்பாளி. சிறந்த கட்டுரையாசிரியர். சிறுகதை எழுத்தாளர். தாவரவியல் அறிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் சென்னை வந்திருந்த போது சந்தித்து உரையாடினேன். அற்புதமான மனிதர். இவரது இரண்டு நூல்களைச் சமீபத்தில் வாசித்தேன் முதலாவது செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். இது ஆஸ்திரேலியாவில் யாழ்பாணத்து கத்திரிக்காய் ஒன்றை ஒட்டுமுறையில் விளைவிக்க முயன்றதை பற்றிய வேடிக்கையான நிகழ்வை விவரிக்கும் கட்டுரை. இதில் வரும் மாமி மறக்கமுடியாத கதாபாத்திரம். நினைவுகளில் ஊடாடிச் [...]

லூக்கா எனும் மருத்துவர்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் பெர் லாகர்குவிஸ்ட் (Pär Lagerkvist) எழுதிய நாவல் அன்பு வழி (Barabbas ) .இதை தமிழில் மொழி பெயர்த்தவர் க நா சு. இந்நாவல் பாரபாஸ்  என்ற குற்றவாளியின் கண்ணோட்டத்தில் இயேசுவின் வாழ்க்கையை விவரிக்கக் கூடியது. பாரபாஸ் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. தனக்குப் பதிலாக இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள் என்பதை அறிந்த பாரபாஸ் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதே நாவலின் மையக்கதை. பல லட்சம் பிரதிகள் விற்றுள்ள இந்நாவல் எனக்கு மிகவும் பிடித்தமானது. [...]

நுவ்வை

பிரெஞ்சு எழுத்தாளரும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான ஜீன் க்ளாட் காரியரின்(jean claude carrier) நேர்காணல் ஒன்றை கண்டேன். அதில் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் தொன்றுதொட்டு பின்பற்றிவரும் ஒரு பழக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் போது அந்தச் சந்தோஷத்தின் அடையாளமாக ஒரு மரம் வைக்கப்படுமாம். காரியர் பிறந்த போது அவரது தந்தை வால்நட் மரத்தை வைத்திருக்கிறார். அது பதினெட்டு ஆண்டுகள் வளர்ந்து பின்பு விழுந்துவிட்டது என்கிறார் காரியர். அத்தோடு காரியர் தனது [...]

ஏங்கெல்ஸின் மனைவி

கார்ல் மார்க்ஸின் இணைற்ற நண்பனாகவும், சிறந்த தோழனாகவும் விளங்கியவர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸ் ஏங்கெல்ஸின் மனைவி லிடியா எனப்படும் லிசி பென்ஸ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய நாவல்-Mrs Engels வெளியாகியுள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான கெவின் மெக்ரே இதனை எழுதியிருக்கிறார். லிசி பென்ஸ் தோழர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸின் துணைவி. ஐரீஷ் பெண்ணான இவர் பஞ்சாலை ஒன்றில் சாயமிடும் தொழிலாளியின் மகள்., அவரது சகோதரி மேரி பர்ன்ஸை தான் ஏங்கெல்ஸ் காதலித்தார். மான்செஸ்டரில் மேரியுடன் ஏங்கெல்ஸ் ஒன்றாக வாழ்ந்த போது [...]

காலம் மாறுகிறது

சென்றவாரம் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது எழுத்தாளர் கி,ராஜநாராயணனைச் சந்திக்கச் சென்றிருந்தோம். கிராவை சந்தித்துத் திரும்பினால் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பியது போலப் புத்துணர்வு வந்துவிடும். கிராவிடம் நான் கண்ட முக்கிய அம்சம் எவரைப் பற்றியும் புரணி பேசினாலோ, எதிர்மறையாகப் பேசினாலோ பிடிக்காது. வேண்டாத விஷயங்களை ஏன் பேசிகிட்டு என்று ஒதுக்கிவிடுவார். அது போலவே நன்றாகயில்லை என்று தோணுகிற விஷயத்தை நேரடியாகச் சொல்லிவிடுவார். யாரையும் துதி பாட மாட்டார். 96 வயதில் அவர் புதிய நாவலை எழுதியிருக்கிறார் [...]

கண்ணீர் சிந்தும் சிறுவர்கள்.

மனிதனின் நிர்கதியான நிலையைப் பதிவு செய்வதில் சங்க இலக்கியம் முன்னோடியாக உள்ளது. ஒரு மனிதன் நிர்கதியான நிலையில் தான் கடவுளை நம்பத்துவங்குகிறான். சகமனிதர்களை நோக்கிக் கைகூப்புகிறான். கருணையை வேண்டுகிறான். நிர்கதியின் போது உலகம் சிறியதாகிவிடுகிறது. காலமும் சூழலும் தான் நிர்கதியை உருவாக்குகிறது. போரில் வென்ற பின்பு மலையமானின் இரண்டுபிள்ளைகளை யானைக்காலில் இட்டு மிதிக்கச் சொல்லி ஆணையிடுகிறான் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். அந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து கோவூர் கிழார் என்ற கவிஞர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.  [...]

ரே பிராட்பெரியின் நேர்காணல்கள்.

ஒரு புத்தகத்தை வாசிக்கையில் அது எழுப்பும் நினைவுகளே அதன் மீதான விருப்பத்தை உருவாக்குகின்றன. நேற்று ரே பிராட்பெரியின் (Ray Bradbury) நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். ரே பிராட்பெரி எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர். அவரது நேர்காணல்களின் வழியே அவரது புனைவின் பின்புலத்தையும், அவர் எழுத்தாளராக உருவான சூழலையும் புரிந்து கொள்ள முடிந்தது. உலகெங்கும் எழுத்தாளர்கள் ஒன்று போலத் தான் உருவாகிறார்கள் போலும். பிராட்பெரியின் நேர்காணல்களில் வெளிப்படும் கேலியும் கிண்டலுமான பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிதாக [...]

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: