இலக்கியம் - Welcome to Sramakrishnan


‘இலக்கியம்’

நதிமுகம் தேடி

நைல் உலகின் மிக நீளமான ஆறு தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோபியா, எரிட்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து மத்தியதரைக்கடலில் கலக்கின்றது. எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடைகின்றன நைல்  நதி வெள்ளை நைல், நீல நைல் என்ற இரண்டாகப்  பிரியக்கூடியது. வடகிழக்கு ஆப்ரிக்காவில் இது தொடங்குகிறது. இரண்டில் வெள்ளை நைல் தான் மிக நீளமானது. இந்த நதி ருவாண்டா, புரூண்டி, [...]

உலக ஞானம் ஒரு நூலில்!

தி இந்து நாளிதழில் பிரபஞ்சன் எழுதி வரும்  எமதுள்ளம் சுடர்விடுக பத்தியில் நான் ஆற்றிய உலக இலக்கியப் பேருரைகளின் தொகுப்பு நூல் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். பிரபஞ்சன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் •• உலக இலக்கியப் பெரும் ஆளுமைகள் பற்றித் தமிழ்ச் சூழலில் ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்தும் பெரும் பணியில் பல காலமாக ஈடுபட்டு வருபவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அண்மையில் அவர் நிகழ்த்திய இலக்கியப் பேராசான் டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், ஹோமர், ஹெமிங்வே, பாஷோ, அரேபிய இரவுகள், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் [...]

நிலவொளியின் பாடல்கள்

தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை. ஜென் கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் தமிழில் அதிகம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. ஜென் கவிதைகள் குறித்து நான் கூழாங்கற்கள் பாடுகின்றன என்ற கட்டுரை தொகுதி ஒன்றை எழுதியிருக்கிறேன். அதில் பாஷோ, ரியோகான் என முக்கியமான ஜென் கவிஞர்களின் கவிதையுலகை அறிமுகம் செய்திருக்கிறேன். பாஷோவின் கவிதையுலகம் பற்றி விரிவான உரையொன்றையும் சென்னையில் நிகழ்த்தியிருக்கிறேன். அது தற்போது டிவிடியாகவும் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் [...]

டி.எஸ். எலியட்டின் காதல்

கல்லூரி நாட்களில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் டி.எஸ். எலியட்டின் வேஸ்ட் லேண்ட் கவிதையைப் பாடமாக வாசித்திருக்கிறேன். பின்பு எலியட்டின் (T.S.Eliot) கட்டுரைகளைப் பலமுறை விரும்பி வாசித்திருக்கிறேன். ஆனால் கல்லூரி நாட்களில் ஒரு பேராசியர் கூட எலியட்டின் வாழ்க்கை குறித்தோ, அவருக்கும் எஸ்ரா பவுண்டிற்குமான நட்பு குறித்தோ, யார் வேஸ்ட் லேண்ட் என்ற கவிதையின் தலைப்பை வைத்தவர் என்றோ எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை. பாடமாக இலக்கியம் கற்கும் போது மதிப்பெண் மட்டுமே முதன்மையாகி விடுகிறது. ரசித்து ரசித்து [...]

கவிதையே வாழ்க்கை.

சையத் மிர்ஸா, இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் இந்திய சினிமாவின் நவீன அலை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது வாழ்க்கை மற்றும் திரையுலகப் பங்களிப்பு பற்றிய ஆவணப்படமாக உருவாக்கபட்டுள்ளது Saeed Mirza: The Leftist Sufi. சூபியும் இடது சாரி எண்ணங்களும் கொண்டவர் என்ற தலைப்பே அவரது ஆளுமையின் தனித்துவத்தைக் காட்டுகிறது. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதும் எவ்விதமான மதக்கட்டுபாடுகளும் இல்லாமல் வளர்க்கபட்டதாக நினைவு கூறுகிறார். இவரது பத்து [...]

விருது விழா

நேற்று நடைபெற்ற விருதுவழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  சென்னை நகரின் கலைவாணர் அரங்கம் மிகப்பிரம்மாண்டமானது. அதி நவீன வசதிகள் கொண்டது. அந்த அரங்கம் நிரம்பி ஆட்கள் இருக்கையின்றி நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டார்கள். விழாவில் அத்தனை அரசியல்தலைவர்களும் கலந்து கொண்டது சிறப்பு. நீதியரசர் மகாதேவன், கவிஞர் வைரமுத்து, தமிழருவி மணியன், உள்ளிட்ட பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  என் வாழ்வின் மறக்க முடியாத நாள். நிகழ்வில் கலந்து கொண்ட வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் [...]

நாடற்றவனின் நாட்கள்

Stefan Zweig: Farewell to Europe திரைப்படம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டெபான் ஸ்வேக்கின் அகதி வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஸ்டெபான் ஸ்வேக் (Stefan Zweig). ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர். ஹிட்லரின் நாஜி படைகளால் யூதர்கள் தேடித்தேடி கொலை செய்யப்பட்டார்கள். இந்த இன அழிப்பிலிருந்து உயிர்த்தப்ப முயன்ற எழுத்தாளர்கள். கலைஞர்கள். விஞ்ஞானிகள் பலரும் ஜெர்மனியை விட்டு வெளியேறினார்கள். அப்படி நாட்டை விட்டு வெளியேறி அகதியாக அலைந்து திரிந்தவர் ஸ்வேக். தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் [...]

எழுத்திற்குத் திரும்புதல்

எழுத்தாளர்களின் வாழ்க்கை குறித்து எத்தனையோ ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை எழுத்தாளரின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் படைப்புகள் குறித்த விபரங்கள், நேர்காணல்கள் அடங்கியதாகவே இருக்கும். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு José and Pilar என்ற ஆவணப்படம் நோபல் பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளரான ஹோசே ஸரமாகோவை நிழல் போலப் பின்தொடர்ந்து அவர் ஒரு நாவல் எழுதுவதற்கு எப்படித் தயார் ஆகிறார், அவரது தினசரி வாழ்க்கை எப்படியிருக்கிறது. அவரது காதல்மனைவி பிலாருடன் உள்ள அன்பும் காதலும் எவ்வாறு வெளிப்படுகிறது என [...]

காஃப்கா சிரிக்கிறார்

இணையத்தில் இன்று காஃப்காவின் அரிய புகைப்படம் ஒன்றைக் கண்டேன். சட்டை அணியாத சிரித்த முகத்துடன் உள்ள காஃப்காவின் புகைப்படம். கடற்கரையில் எடுக்கபட்ட படம் போலுள்ளது. அருகில் அவரது நண்பன் மாக்ஸ் பிராட் இருக்கிறார். கூச்சத்துடன் கேமிராவை நோக்கியபடி இருக்கிறார் காஃப்கா. காப்காவின் பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் கோட் அணிந்தபடியே தீவிரமான முகத்துடன் இருப்பார். சில புகைப்படங்களில் கறுப்பு தொப்பி அணிந்திருப்பார். சிலவேளை கையில் ஒரு பையுடன் காணப்படுவார். இந்த படத்திலுள்ள காஃப்காவிடம் காணப்படுவது மெலிந்த இளைஞனின் வெட்கம். [...]

எழுத்தாளனின் அரசியல்

நார்வீஜிய எழுத்தாளர் நட் ஹாம்சன் ஹிட்லருக்கு ஆதரவு அளித்துப் பேசியும் எழுதியும் வந்தார் என்பது இன்றைக்கும் விமர்சிக்கபடும் விஷயம் ( இவர் பெயரை நுட் ஹாம்சுன் என உச்சரிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழில் இவர் நட் ஹாம்சன் என்றே அறியப்படுகிறார் ) நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான ஹாம்சனின் புகழ்பெற்ற நாவல் தமிழில் நிலவளம் எனக் க.நா.சு மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த அற்புதமான நாவலை க.நா.சு எப்படித் தேடிக்கண்டுபிடித்து வாசித்து மொழி பெயர்த்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது உலகின் [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: