இலக்கியம் - Welcome to Sramakrishnan


‘இலக்கியம்’

எழுத்தாளனின் அரசியல்

நார்வீஜிய எழுத்தாளர் நட் ஹாம்சன் ஹிட்லருக்கு ஆதரவு அளித்துப் பேசியும் எழுதியும் வந்தார் என்பது இன்றைக்கும் விமர்சிக்கபடும் விஷயம் ( இவர் பெயரை நுட் ஹாம்சுன் என உச்சரிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழில் இவர் நட் ஹாம்சன் என்றே அறியப்படுகிறார் ) நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான ஹாம்சனின் புகழ்பெற்ற நாவல் தமிழில் நிலவளம் எனக் க.நா.சு மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த அற்புதமான நாவலை க.நா.சு எப்படித் தேடிக்கண்டுபிடித்து வாசித்து மொழி பெயர்த்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது உலகின் [...]

பாண்டிச்சேரியில் ஒரு நாள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காகப் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். புகைப்படக்கலைஞரும் எனது நண்பருமான இளவேனில் வரவேற்று சிறப்பான உபசரிப்புகளைச் செய்தார். மாலையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். முன்னதாகத் திரைக்கலைஞர் சிவக்குமார் அவரைக் காண்பதற்காக வந்திருந்தார். சிவக்குமார் எழுத்தாளர்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர். கி.ரா குடும்பத்துடன் அவர் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றார். கி.ரா பூரண ஆரோக்கியத்துடன் தெளிவான நினைவாற்றலுடன் இருந்தார். கி.ராவைச் [...]

பால்சாக்கின் சிற்பம்

நவீன சிற்பங்களின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் சிற்பி ரோடின் பற்றிய Rodin (2017) திரைப்படம் பார்த்தேன். ஒவியர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் எனப் பலரது வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பிரெஞ்சில் வெளியாகியுள்ளன. கலையாளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க எடுப்பது தனிப்பிரிவாகவே உள்ளது. உண்மையில் அதுவொரு சவால். ஒரு கலைஞனின் முழுவாழ்க்கையைத் திரையில் காட்டிவிட முடியாது. ஆகவே அவரது வாழ்வின் பிரதான சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டே திரைப்படம் உருவாக்கபடுகிறது. ரோடினுக்கும் அவரது மாணவியும் காதலியுமாக இருந்த கேமிலோ கிளெடலிற்குமான உறவும் [...]

உருமாறும் புத்தகங்கள்

இத்தாலிய எழுத்தாளர் உம்பர்தோ ஈகோவும் பிரெஞ்சு எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜீன் கிளாட் கேரியரும் சந்தித்துப் புத்தகங்கள் குறித்து உரையாடிதன் தொகுப்பாக வெளிவந்துள்ளது This is Not the End of the Book. இரண்டு அறிவுஜீவிகளின் சந்திப்பும் உரையாடலும் எத்தனை ஆழமானதாக, விரிந்த தளத்தில் இருக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். இருவரது பேச்சின் பொதுவிஷயமாக அமைத்திருப்பது நூலகமும் அரிய நூல்களும். இருவருமே முதன்முதலாக அச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட 1500 காலகட்டத்தைச் சேர்ந்த அரிய [...]

கேரள புத்தகக் கண்காட்சி

கேரள சாகித்ய அகாதமி சார்பில் திருச்சூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காகச் சென்றிருந்தேன். தமிழகத்தில் எத்தனையோ புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் புத்தகக் காட்சிகள் எதையும் எழுத்தாளர் எவரும் துவக்கி வைத்ததேயில்லை. தமிழகம் தரத்தயங்கிய கௌரவத்தைக் கேரளம் தந்திருக்கிறது. எழுத்தாளர்களை, கலைஞர்களை மதித்துக் கௌரவிப்பதில் கேரளம் முன்னோடி என்பதற்குச் சாட்சியாகவே இதைக் காண்கிறேன். விமான டிக்கெட் கொடுத்து ஐந்து நட்சத்திரவிடுதியில் தங்கவைத்துச் சிறப்பு விருந்தினராகச் [...]

தமிழின் வரலாறு

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாட்டின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து மிகச்சிறப்பான நூலாக எழுதியிருக்கிறார் டேவிட் சுல்மான். தமிழாய்வில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அறிஞர். ஜெருசலம் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் மற்றும் சமய ஒப்பீட்டுத் துறையில்  பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதன் உயராய்வு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். 2000 வருட தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவது எளிதானதில்லை. தனது ஆழ்ந்த வாசிப்பு மற்றும் ஆய்வின் வழியே தமிழ் இலக்கிய வரலாற்றின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுகிறார் சுல்மான். தமிழ் மொழி [...]

தமிழ்ச் சிறுகதையின் புதிய முகங்கள்!

தமிழ்ச் சிறுகதை உலகம் ஒவ்வொரு பத்தாண்டிலும் ஒரு புதிய எழுச்சியைச் சந்தித்திருக்கிறது. புதிய முகங்களாக இளம் எழுத்தாளர்கள் அறிமுகமாகி, முந்தைய சிறுகதைகளின் வடிவத்தை, கதைக்களன்களை, மொழியைப் புத்துருவாக்கம் செய்வார்கள். 2010-க்குப் பிறகு எழுதத் தொடங்கிய இன்றைய இளம் எழுத்தாளர்களிடமும் அந்த வீச்சை, பங்களிப்பை, தொடர்ச்சியைக் காண முடிகிறது. இளம் தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகளை அச்சிலும் இணையத்திலும் தேடி வாசித்துவருபவன் என்ற முறையில், என் வாசிப்பில் விருப்பத்துக்குரிய சிறுகதை ஆசிரியர்களாக கே.என்.செந்தில், மாரி செல்வராஜ், நரன், போகன் சங்கர், [...]

கவிதைகளுடன் ஒரு நாள்

அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் சார்லஸ் சிமிக் தனக்கு மிகவும் பிடித்தமான செர்பியக்கவிஞரான MILAN DJORDJEVIC கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இதற்கு சிமிக் எழுதியுள்ள அறிமுகவுரை முக்கியமானது. சிமிக் மொழியாக்கம் செய்த Oranges And Snow Selected Poems of Milan Djordjevic என்ற கவிதைத்தொகுதியை இன்று வாசித்தேன். சமகால உலகக்கவிதைகளில்  Milan Djordjevic மிக முக்கியமானவர். 1954ல் பெல்கிரேடில் பிறந்தவர் மிலன் ஜோர்ஜிவிக். அவரது அப்பா ஒரு கட்டிடக்கலை நிபுணர். மிலன் ஜோர்ஜிவிக்கின் கவிதை [...]

இளம்வாசகர்கள்

துணையெழுத்து வெளியான நாட்களில் அது குறித்து விக்னேஷ் என்ற இளைஞர் இணையத்தில் எழுதியுள்ள பதிவு. சமீபத்தில் இதை ஒரு பொறியியல் கல்லூரி மாணவி இந்த பதிவிலிருந்து என்னை தேடி வாசிக்க துவங்கியதாக கூறி விக்னேஷிற்கு நன்றி தெரிவித்திருந்தார். இளம்வாசகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்குச் சாட்சியமாக இதை மீள்பிரசுரம் செய்கிறேன் S.Ramakrishnan Posted by Vignesh Saturday, July 5, 2008 Can a book change lives? Can an author alter all the perceptions [...]

நீதி மறுக்கப்பட்டவர்களின் குரல்

முருகபூபதி   (ஆஸ்திரேலியா) சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன். இடக்கை என்னும் இந்த நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர்  ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம். இவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் [...]

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: