இலக்கியம் - Welcome to Sramakrishnan


‘இலக்கியம்’

நகுலன் வீடு

இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாக கண்ட பதிவிது.நகுலன் இறந்த போது மலையாள எழுத்தாளர் உண்ணி ஆர் எழுதிய அஞ்சலிக்குறிப்பு ** நகுலன் வீடு உண்ணி.ஆர். ‘டி.கே.துரைசாமி என்ற நகுலன் காலமானார்‘ இந்த மரண அறிவிப்பின் மீது சாய்ந்து நின்று என் சக ஊழியர் கேட்டார்: யார் இவர்? நான் சொன்னேன்: தமிழ் எழுத்தாளர். கண்களை விரித்து நம்பிக்கையில்லாத குரலில் அவர் சொன்னார்: கேள்விப்பட்டதே இல்லை. எல்லாக் காதுகளாலும் கேட்க முடியாத சில ஓசைகளும் எல்லாக் கண்களாலும் [...]

எழுதித் தீராப் பக்கங்கள்

காலம் இலக்கிய இதழின் ஆசிரியர் கனடா செல்வம். தமிழ் இலக்கிய உலகோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் நல்ல நண்பர். கனடாவிற்கு நான் சென்றிருந்த போது செல்வம் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். சிறப்பாக உபசரிப்புச் செய்தார். இலக்கியப் புத்தகங்களை அறிமுகம் செய்வது,. கூட்டங்கள் நடத்துவது, சிற்றிதழ் கொண்டு வருவது , புத்தகக் கண்காட்சி நடத்துவது, ஈழ அரசியல் சார்ந்த கூட்டங்களை ஒருங்கிணைப்புச் செய்வது, நவீன நாடகங்கள் நடத்த உதவி செய்வது,  கூத்து, நாட்டுப்புற [...]

கவிதை எனும் வட்டக்கண்ணாடி.

There are three idealists: God, mothers and poets! They don’t seek the ideal in completed things— they find it in the incomplete. என்ற பீட்டர் ஆல்டென்பெர்க்கின் (Peter Altenberg) வரிகள் தான் அவரைத் தேடி வாசிக்க வைத்தது. ஆல்டென்பெர்க் ஆஸ்திரியாவின் முக்கியக் கவிஞர். வியன்னாவிலுள்ள கபே சென்ட்ரல் என்ற காபிஷாப் தான் இவரது உலகம். இவரது பெரும்பான்மைக் கவிதைகள் இந்தக் காபிஷாப்பில் வைத்து எழுதப்பட்டவை. இவரை “coffee house [...]

வரலாற்றின் குரல்

தினம் ஒரு தகவல் என்ற நிகழ்ச்சி ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பபடுகிறது. இவற்றில் பெரும்பாலும் புகழ்பெற்ற மனிதர்கள். நிகழ்ச்சிகள். பொதுவான வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியே பேசப்படுகின்றன. மறந்து போனவற்றை நினைவுபடுத்துவது போல மட்டுமே இந்நிகழ்ச்சிகள் உருவாக்கபடுகின்றன. ஆனால் மனித குல வரலாற்றில் முக்கியமான, அறியப்படாத செய்திகளை. மறைக்கப்பட்ட வரலாற்றை. அறிவியல் உண்மைகளை, ஆளுமைகளை முதன்மைப்படுத்தித் தனித்துவமான பார்வையுடன் தினம் ஒரு தகவல் எழுதப்பட்டால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணமான உள்ளது எட்வர்டோ கலியானோ எழுதிய ‘சில்ரன் ஆஃப் தி டேஸ்: [...]

உணவை மறுத்தவள்.

2016ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசைப் பெற்ற நாவல் ‘தி வெஜிடேரியன்’. தென் கொரியாவைச் சேர்ந்த ஹன் காங்க் (Han Kang) எழுதியது. கொரிய சமகால நாவல்களில்TREES ON A SLOPE – Hwang Sun-wo˘n மற்றும் THE DWARF- Cho Se-hu˘i ஆகிய இரண்டினை வாசித்திருக்கிறேன். சமகாலக் கொரியப் படைப்புகளின் வழியே மிதமிஞ்சிய நுகர்வு கலாச்சாரம் கொரிய வாழ்வினை எவ்வாறு பாதித்துள்ளது என்பதையும், குடி, போதை. பாலின்பம், வன்முறை எனப் பெருநகரவாழ்வு சிதைந்து போயிருப்பதையும் அறிந்து [...]

உடலின் விதி

விர்ஜிலியோ பினேரா (Virgilio Piñera) க்யூபாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது மாமிசம் (Meat) சிறுகதையைத் தமிழில் கவிஞர் ரவிக்குமார் மொழியாக்கம் செய்துள்ளார். மிக முக்கியமான சிறுகதை. இக்கதை இப்படித்தான் துவங்குகிறது திரு. அன்சால்டோ மட்டும்தான் அந்த நகரத்தில் விதிவிலக்கு. எந்தக் கலக்கமும் இல்லாமல் ஒரு பெரிய கத்தியை அவன் தீட்டிக்கொண்டிருந்தான். பிறகு தனது பேண்ட்டை முழங்கால் வரை கீழே தள்ர்த்திவிட்டான். தனது இடதுபுற பிருஷ்டத்திலிருந்து ஒரு துண்டுக் கறியை வெட்டி எடுத்தான். உப்பும் வினிகரும் போட்டு [...]

குற்றமும் காதலும்.

லத்தீன்அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் எர்னெஸ்டோ சபதோ (Ernesto Sábato ) முக்கியமானவர். அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவரைப் போர்ஹேயின் முன்னோடி என்கிறார்கள். எர்னெஸ்டோ சபதோ இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அர்ஜென்டினாவில் நடைபெற்ற மல்வினாஸ் போரில் காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் பற்றி விசாரிக்க உருவாக்கபட்ட மனித உரிமைக் கமிஷனின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது The Tunnel நாவல் அளவில் மிகக்சிறியது. ஆனால் அதன் தாக்கம் மிகப்பெரியது. நாம் பொதுவில் மற்றவர்களின் குற்றங்கள் குறித்து எளிதாகத் தீர்ப்பு எழுதுகிறோம். [...]

கவிஞனின் நிழல்

நவீன ரஷ்யக்கவிதையுலகின் தனிப்பெரும் கவியாக இருந்தவர் ஒசிப் மெண்டல்ஷ்டாம். அக்மேயிசம் ( Acmeism) என்ற கவிதைக்கோட்பாட்டினை உருவாக்கியவர். ஸ்டாலினைக் கிண்டல் செய்து கவிதை எழுதினார் என்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கபட்ட மெண்டல்ஷ்டாம் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்து மனச்சிதைவிற்கு உள்ளானார். அவரது கவிதைகளைப் பத்திரிக்கையில் வெளியிடுவது தடைசெய்யப்பட்டது. மெண்டல்ஷ்டாம் கவிதைகள் அத்தனையும் நினைவில் வைத்திருந்து நடமாடும் புத்தகமாகத் திகழ்ந்தவர் அவரது மனைவி நடாஷ்டா. அவரது நினைவுகளில் இருந்த கவிதைகளே பின்னாளில் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்தன. மெண்டல்ஷ்டாமின் [...]

பால்யத்தின் சிற்றலைகள்

பேரலைகளின் சீற்றத்தை விடவும் சிற்றலைகளின் நடனம் வசீகரிக்கக் கூடியது. நாவலிலும் அப்படித்தான். போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற அடர்த்தியான, பல்வேறு பின்னல்களும் அடுக்குகளும் கொண்ட நாவல்கள் தரும் வாசிப்பு அனுபவம் ஒருவிதம் என்றால் ஒட்டுச்சில்லை வீசி எறியும்  போது அது தண்ணீரில் எழும்பும் சிற்றலை போலச் சிறியதும் பெரியதுமாக வாழ்வு அனுபவங்களைத் தொடுத்து எழுதப்படும் நாவல்கள் முற்றிலும் புதுவகை வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. தமிழில் இந்த வகை நாவலுக்கு உதாரணமாகக் காசியபனின் அசடு மற்றும் ஹெப்சிபா [...]

கண்ணீர்ப் புகை

கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய சிறுகதை. கவனம் சிற்றிதழில் வெளியானது. ••• புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர்நோக்கி வந்துகொண்டிருந்தது. பேருந்தில் சென்றுகொண்டிருப்பதாகவும், இரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருப்பதாகவும், இரயிலிலேயே போய்க்கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு மாறிவிட்டார்கள். நிலைக் கண்ணாடிக்கு முன் வேலை முடிந்து வெறுமனே அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்கள். ஆண்கள் கணுக்கால் சட்டையைப் போர்த்து இடுப்பில் இறுக்கிக்கொண்டுவிட்டார்கள். இன்னும் மூன்று நாட்களுக்குப் பால், தயிர், பத்திரிகை எதுவும் வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டதா [...]

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: