நினைவுகுறிப்பு - Welcome to Sramakrishnan


‘நினைவுகுறிப்பு’

புத்தகக் காட்சியில் -1

நேற்று மாலை  சென்னை புத்தகக் காட்சி சிறப்பாக துவங்கியது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 391  & 392னை  தயார்படுத்தும் பணி காலையிலிருந்து நடைபெற்றது.  நான்கு மணிக்கு புத்தக காட்சிக்குச்  சென்றேன். ஸ்ருதிடிவி நேரடியாக புத்தக கண்காட்சி குறித்த செய்திகளை சிறப்பாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் பற்றிய எனது  நேர்காணல் ஒன்றினை ஸ்ருதி டிவி பகிர்ந்திருக்கிறார்கள். ஸ்ருதி டிவி கபிலனுக்கு நன்றி நேற்று மாலை எழுத்தாளர்கள் பா.ராகவன்,  விமலாதித்த மாமல்லன், தமிழ்மகன், லட்சுமி சரவணக்குமார் [...]

கனகசபை

கனகசபை என்பது அவனது பெயர், ஆனால் அப்படி யாரும் கூப்பிட்டு நான் பார்த்தேயில்லை. பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோருக்கும் அவன் கனகு தான். கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனத்தில் வாழ்ந்தவன். நாற்பது வயதை கடந்திருக்கும். இலக்கியம் எழுத்து புத்தக வாசிப்பு என்று தன் வாழ்வை கொண்டுசெலுத்தி அற்பவயதில் இறந்து போனான். நான் அறிந்தவரை இலக்கியத்திற்காக கைக்காசை முழுமையாக செலவு செய்த ஒரே ஆள் கனகு மட்டுமே. கனகு ஒரு இலக்கியவாதிக்கு போன் செய்து பேசினால் எப்படியும் ஒரு மணி [...]

செல்லம்மாள் பாரதி

நேற்று புத்தக கண்காட்சியில் நான் பேசிய போது குறிப்பிட்ட செல்லம்மாள் பாரதி ரேடியோ உரையை பலரும் படிக்க கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள், அவர்களின் பார்வைக்காக  ** என் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி (1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)   வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை [...]

சுஜாதாவிற்கான அஞ்சலி.

நேற்றிரவு பத்தரைமணிக்கு அவரது மரணம் பற்றிய குறுஞ்செய்தி வந்தது. சில நிமிசங்கள் அது நிஜம் தானா என்று நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் பதினைந்து குறுஞ்செய்திகள் உண்மை என்று உறுதிப்படுத்தியது. கல்லூரிப் பருவத்தில் என்னோடு படித்து நீண்ட காலம் தொடர்பில்லாமலிருந்த நண்பன் நள்ளிரவில் போன் செய்து அழும் குரலில் கேட்டான், நிஜமாவாடா ?. எனது மௌனம் அவனுக்கு பதிலாக இருந்திருக்க வேண்டும். சட்டென உடைந்த குரலில் எவ்வளவு படிச்சிருக்கோம். எவ்வளவு பேசியிருக்கிறோம். வாத்தியார் போயிட்டாரு [...]

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: