புத்தக விமர்சனம் - Welcome to Sramakrishnan


‘புத்தக விமர்சனம்’

சாக்லேட் கனவுகள்

I am only 8 years old, I told myself. No little boy of 8 has ever murdered anyone. It’s not possible. Roald Dahl உலக அளவிலான சிறுவர்களுக்கான இலக்கியம் குறித்து தமிழில் அதிகம் பேசப்படுவதேயில்லை, அப்படி பேசப்பட வேண்டிய முக்கியமானவர்களில் ஒருவர் ரொவால்ட் டால் (Roald Dahl). சிறுவர்களுக்கான அவரது புனைகதைகள் உலகப்புகழ் பெற்றவை, அதே அளவிற்கு அவரது சிறுகதைகளும் முக்கியமானவை, திகில் ஊட்டும் சம்பவங்களைக் குடும்பச் சூழலின் பின்புலத்தில் [...]

கதைக்கம்பளம் விமர்சனம்

குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழு புத்தகங்கள் குறித்த விமர்சனம்,  எஸ்.வி,வேணுகோபாலன் கதைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக எழுதியிருக்கிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி. ** கதைகளின் உலகிற்குக் குழந்தைகளை மீட்டெடுக்கும் அற்புதக் கற்பனைக் கொத்துக்கள்… எஸ் வி வேணுகோபாலன் ஏய், சிப்பு, குப்பு, பப்பு, திப்பு, கப்பு,லப்பு, மப்பு. ….எல்லாம் இங்க பக்கத்திலே வந்து உக்காருங்க. முதல்ல எல்லாரும் கண்களை மூடிக்கணும். நான் சொல்ற வரைக்கும் திறக்கக் கூடாது. சுவாரசியமா சில விஷயங்களைக் காட்டப் [...]

துயில் விம‌ர்ச‌ன‌ம்

- டி.சே. த‌மிழ‌ன் 1. நாம் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு நம் வாழ்வில் ப‌ய‌ணித்திருப்போம். அவ்வ‌வ்விட‌ங்களின் இய‌ற்கையின‌தோ, க‌ட்டிட‌க்க‌லையின‌தோ அழ‌கைக் க‌ண்டு ம‌ன‌ஞ்சிலிர்த்து இர‌சித்துமிருப்போம். ஆனால் எப்போதாவ‌து நாம் நின்று இர‌சிக்கும் இட‌த்தின் நில‌விய‌லும் வாழ்விய‌லும் எவ்வாறு சில‌ தசாப்த‌ங்க‌ளுக்கோ, நூற்றாண்டுக‌ளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்த‌துண்டா?  அவ்வாறு பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றையும், அத‌னோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளையும் விரிவாக‌ப் பேசுகின்ற‌ ஒரு நாவ‌ல்தான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் ‘துயில்’. இத்தேவால‌ய‌ம் பிற்கால‌த்தில் (அல்ல‌து நிக‌ழ்கால‌த்தில்) நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம்பிக்கை த‌ரும் [...]

நெடுங்குருதி : விசித்திரத்தின் அழகியல்

தீவிர இலக்கிய வாசகரும் எனது நண்பருமான கார்த்திகைப் பாண்டியன் நெடுங்குருதி நாவல் பற்றி எழுதியுள்ள விமர்சனம். •• ஒரு மனிதனின் அடிப்படை இயல்புகளைத் தீர்மானிக்கக் கூடிய விஷயங்கள்எவையெவை என்று சொல்லலாம்… அவர்களின் பிறப்பு? குடும்ப சூழ்நிலைகள்? நண்பர்கள் அல்லது உறவினர்கள்? இவை போக, இது எல்லாவற்றையும் மீறியஒன்றும் இருக்கிறது. அது  அவர்களின் ஊர்.. அவர்கள் வாழும் சூழ்நிலை. இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடைய எட்டாவது வயதில்குடும்பத்தோடு மதுரை சுப்ரமணியபுரம் பகுதிக்கு குடிபுகுந்தோம். அதுவரை வீடு [...]

மாற்று சினிமா

கிராபியன் ப்ளாக் ஒரு இளம் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், திரைத்துறையிலும் பத்திரிக்கையிலும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார், அவரது இரண்டு புத்தகங்களை சமீபத்தில் வாசித்தேன், ஒன்று மாற்றுசினிமா, மற்றது திரைப்படக்கல்லூரி ஆளுமைகள், இரண்டையும்  புதிய கோணம் என்ற பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது இதில் மாற்றுசினிமா தமிழில் வெளியான 32 சிறந்த குறும்படங்களைப் பற்றியது, குறும்படத்திற்கான விமர்சனம் என்பதோடு. அந்த இயக்குனரைப் பற்றியும் குறும்படங்களின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான முதற்படி என்று சொல்வது சரியான ஒன்றே, இதன்வழியே புதிய [...]

வரலாறு என்னும் கதை

எடுவர்டோ கலியானோ (Eduardo  Galeano) மிக முக்கியமான லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்,  உருகுவேயைச் சேர்ந்தவர், பத்திரிக்கையாளராக துவங்கி முக்கிய வரலாற்றுஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் தனிஇடம் கொண்டவர் இவரது Mirrors: Stories of Almost Everyone படித்திருக்கிறேன், கலியானோவின் எழுத்து மற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டது, நேரடியான அரசியல் ஈடுபாடும் இடதுசாரிக் கருத்தியலும் கொண்ட எழுத்தாளர் இவர், போர்ஹெஸ், மார்க்வெஸ், ப்யூந்தஸ். இசபெல் ஆலெண்டே, கொர்த்தசார், லோசா,  நெரூதா. ஆக்டோவியா பாஸ் என்று பல லத்தீன் அமெரிக்க [...]

துயில் விமர்சனம்

புத்தகம் பேசுது, மே இதழில் வெளியாகி உள்ள துயில் நாவல் பற்றிய விமர்சனம் ** துயில் : நோய்மையின் தரிசனம் – பி.வசந்தா தமிழ் வாசகத் தளத்திற்கு நல்ல நாவல்கள் அபூர்வமாகவே வெளிவருகின்றன. இருண்மை, புரியாமொழி, கட்டுரைத்தனம், எனக் கதையின்றி வரும் நாவல்கள் வாசகரைச் சித்ரவதை செய்கின்றன. வாழ்க்கையைப்பற்றிய புரிதல் ஏற்படுத்தும் நாவல்கள் மிகவும் குறைந்துவிட்டன. இந்தக் களேபரங்களிலிருந்து விலகி சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், நோயாளிகளின் வாழ்வையும் முன்வைத்துச் சமூகத்திற்கு யதார்த்தமான நற்செய்திகளைச் சொல்லும் நாவலாய் [...]

கடக்க முடியாத யாமம்

எனது நாவல் யாமம் குறித்து கவிஞர் சமயவேல் எழுதிய சிறப்பான விமர்சனக்கட்டுரை •• இரவால் கோர்க்கப்பட்ட கதைகள் – சமயவேல்   எஸ்.ராமகிருஷ்ணனின் புதினம் யாமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் ஒரு கர்ண பரம்பரைக் கதைகளின் தொகுப்பு என அன்றைய புத்திலக்கியப் பரப்பால் ஒதுக்கப்பட்டது ஞாபகம் வந்தது. எனவேதான் ‘யாமம்’ பற்றிய இந்த எழுத்தாடலை ஒரு வாசகத் தளத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன். விதம் விதமாகக் கசியும் இருளுக்குள் ஏராளமான கதைகள் மெல்லிய குரலில் [...]

ஊர்வாசம்

ந.முருகேச பாண்டியன் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர். தேர்ந்த படிப்பாளி. தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ள புத்தகங்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், புதுக்கோட்டையில் வசிக்கும் அவர் நாடகம். சிறுபத்திரிக்கை. கல்வி. நூலகத்துறை என்று விரிந்த தளங்களில் இயங்குபவர். உயிரோசை இணைய இதழில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த கிராமத்து தெருக்களின் வழியே என்ற கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன், தனது கிராம வாழ்வின் நினைவுகளை துல்லியமாக, அதே நேரம் மிகை உணர்ச்சியின்றி அழகாக சித்தரித்திருக்கிறார் வாசிக்கும் [...]

எஸ்.ஏ. பெருமாள்

எனது செகாவின் மீதுபனி பெய்கிறது நூல் பற்றி மிக அருமையான விமர்சனம் ஒன்றினை தமிழகத்தின் முக்கிய மார்க்சிய அறிஞரும், படைப்பாளியுமான தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எழுதியிருக்கிறார், இது புத்தகம் பேசுது டிசம்பர் இதழில் வெளியாகி உள்ளது, வாசகர்களின் கவனத்திற்கான அந்தக் கட்டுரையைத் தந்திருக்கிறேன் •• உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல் -எஸ்.ஏ. பெருமாள்  இலக்கியங்களை வாசிப்பதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஒரு அற்புதக்கலை. அதுவும் கூட மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும். தமிழில் ஒரு [...]

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: