புத்தக விமர்சனம் - Welcome to Sramakrishnan


‘புத்தக விமர்சனம்’

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

என் ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கம் அவர்கள் எனது சிறுகதைத்தொகுப்பான ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ பற்றி எழுதிய கட்டுரை. •• தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி அப்பூதியடிகள் என்ற தொண்டரைப்பற்றி பெரியபுராணத்தில் படித்திருப்போம். அவர் திருநாவுக்கரசரில் அளவில்லாத பக்தி கொண்டவர். திருநாவுக்கரசரை அவர் பார்த்தது கிடையாது, கேள்விப்பட்டதுதான். ஆன்மீக குருவாக அவரை வரித்து நிறைய தானதருமங்கள் செய்து வந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் ‘திருநாவுக்கரசர்’ என்றே பெயர் சூட்டினார். ஆடு மாடுகளுக்கும் அதே பெயர்தான். திருநாவுக்கரசர் பெயரால் ஒரு தண்ணீர் [...]

காண் என்றது இயற்கை

எனது புதிய புத்தகமான காண் என்றது இயற்கை குறித்து கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரை. •• காண் என்றது இயற்கை – கவிஞர் கலாப்ரியா ’நதி’ மலையாள சினிமா என்று நினைவு. வயலாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.இது மொழிபெயர்ப்பு “ உன்னைக் குறித்து நான் பாடிய பாட்டுக்குஓராயிரம் அலைகள் சுருதியிட்டன உன் மனோராஜ்ஜியத்தின் நீலக்கடம்பில் நீயென் விளையாட்டோடத்தைக் கட்டிப் போட்டாய், அன்பே கட்டிப் போட்டாய்.” ஒரு நதிக்கரை. இக்கரைக்கும் அக்கரைக்கும் ஓடுகிற ஓடம், ஓட்டுகிற ஓடக்காரன்….ஓடத்தை சற்றே ஒரு [...]

சினிமா மின்னல்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச்சேர்ந்தவர் மின்னல். இவரது இயற்பெயர் உதுமான் முகையதீன்.  ஜனசக்தி இதழின் பத்திரிக்கையாளராக துவங்கி விளம்பர நிறுவன அதிபராகவும், படத்தயாரிப்பாளராகவும் இயங்கிய அவர் தனது சினிமா அனுபவங்களை தொகுத்து மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். நர்மதா பதிப்பகம் 2004ல் இதை வெளியிட்டுள்ளது. மிக சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் தந்த புத்தகமிது. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் தமிழ்முரசில் இதன் முதற்பாகம் தொடராக வெளியாகியிருக்கிறது. 2005ல்  நான் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஜான் [...]

நன்றி பாவண்ணன்

நவீன தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எழுத்தாளர் பாவண்ணன், மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருப்பவர், தேர்ந்த வாசகர், அவரது சிறுகதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும், அவை தனித்துவமான அனுபவமும் கச்சிதமான மொழிநடையும் கொண்டவை,  தான் வாசித்த புத்தகங்கள் குறித்து நுட்பமாக தொடர்ந்து எழுதி வருபவர் பாவண்ணன், அது மிகுந்த பாராட்டிற்குரியது அவர் எனது புதிய நூலான செகாவின் மீது பனி பெய்கிறது குறித்து திண்ணை இணைய இதழில் வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது” என்று ஒரு [...]

ஒரு வாழ்க்கையின் துகள்கள்

எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன. ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது. அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது. – ஜெஸ்ஸி பெர்னார்டு மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண்உரிமைகள் சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். அவர் தனது தாய்வழிப்பாட்டியான சுப்புலட்சுமியின்நாட்குறிப்பு களைச் சேகரித்து அதன் வழியே அவரது வாழ்க்கை சித்திரத்தை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியான அப்புத்தகம் தற்போது பாரதி புத்தகாலயம் சார்பில் கி. ரமேஷால் மொழியாக்கம் செய்யப்பட்டு  ஒரு வாழ்க்கையின் [...]

காலத்தை செதுக்குதல்

Art could be said to be a symbol of the universe, being linked with that absolute spiritual truth which is hidden from us in our positivistic, pragmatic activities. கடந்த இரண்டு நாட்களாக தார்கோவெஸ்கியின் புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கிறேன். ரஷ்ய நவீன சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை ஆந்த்ரேய் தார்கோவெஸ்கி ((Andrey Tarkovsky). அவர் எழுதிய Sculpting in time  சினிமாவை பற்றிய தார்கோவெஸ்கியின் புரிதல்களை அனுபவங்களை பேசுகிறது.  கடந்த [...]

எண்ணும் மனிதன்

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் இரண்டாம் நாளில் அகல் பதிப்பகம் வெளியிட்டுள்ள மல்பா தஹான் எழுதிய எண்ணும் மனிதன் என்ற மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வந்தேன். அட்டையை பார்த்தபோது பாரசீகம் அல்லது அரபு மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழாக்கம் செய்திருப்பவர் கயல்விழி. மல்பா தஹான் என்பவர் யார். எந்த தேசத்தை சேர்ந்தவர். எந்த ஆண்டு இந்த நூல் வெளியானது என்று எந்த குறிப்பும் புத்தகத்தில் இல்லை.  பின் அட்டை குறிப்பும் மிக [...]

ஜராதுஷ்ட்ரா.

கடந்த சில வருசங்களில் நான் வாசித்த மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஆகச்சிறந்தது நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்ற புத்தகமே. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. நீட்ஷேயை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரவி. இவர் குவளை கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். மாயா பஜார், பிள்ளை விளையாட்டு என்று இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன. நீட்ஷேயின் ஒரு படைப்பு முழுமையாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். கடவுள் இறந்து போய்விட்டார் [...]

யானையின் கண்ணீர்.

jefferey mussaieff masson  எழுதிய when elephents weep புத்தகத்தை வாசித்தேன் நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான புத்தகப்பட்டியலில் இந்த நூல் இடம் பெற்றிருந்தது. உளவியல் ஆய்வாளரான ஜெப்ரி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காடுமலை சுற்றி மிருகங்களை தொடர்ந்து அவதானித்திருக்கிறார். உளவியல் ஆய்வில் அமைந்த இந்த புத்தகம் மிக சுவாரஸ்யமான அனுபவம் தருவதாகயிருந்தது. தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்று தனிவகையே இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராவணன் என்பவர் எழுதிய சிந்தாமணி வைத்திய நூல்கள் ஒலைச்சுவடிகளாக நிறைய [...]

இருள் விலகும் கதைகள்

இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையப்படுத்தி விஜய் மகேந்திரன் தொகுத்துள்ள சிறுகதை தொகுப்பு இருள்விலகும் கதைகள். இதை தோழமை பதிப்பகம் வெளியீட்டுள்ளது.நான் வாசித்து அறிந்தவரை இந்திய மொழிகளிலே தமிழில் தான் சிறுகதை அதன் உச்சபட்ச சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. பல்வேறு விதமான கதை சொல்லும் முறைகள், கதைமொழி, வடிவ சோதனைகள், பின்நவீனத்துவன எழுத்து முறை, தலித்திய, பெண்ணிய சிந்தனை சார்ந்த சிறுகதைகள் என்று தமிழ் சிறுகதைகள் உலகின் சிறந்த சிறுகதைகளுக்குச் சமமாக எழுதப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு பத்தாண்டிலும் சிறுகதையின் [...]

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: