கல்வி - Welcome to Sramakrishnan


‘கல்வி’

கோமாளியும் கதை சொல்லியும்

பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும், சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும், பகடியும், நகைச்சுவையும், கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை.  இத்தனையிலும் முக்கியமானது தன்னைத் தானே கேலி செய்து கொள்ள தெரிந்திருக்க வேண்டும் என்பதே, கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான [...]

சொல்லிய கதை

இரண்டு நாட்களின் முன்பு சேலத்தில் உள்ள ஹெலிக்ஸ் சிறப்பு பள்ளிக்கு சென்றிருந்தேன். வேடிக்கவுண்டர் காலனியில் இப்பள்ளி உள்ளது. அது டிஸ்லெக்சியாவால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி . தாரே ஜமீன்பரில் வருகின்ற சிறுவனை போன்றவர்களே இப்பள்ளி மாணவர்கள்.  இப்பள்ளியை செந்தில்குமார் நிர்வகித்துவருகிறார். இப்பள்ளியின் பாடத்திட்டங்களும் கற்று தரும் முறைகளும் தனித்துவமானவை. செந்தில் இஸ்ரேலில் மனநலவியல் பயின்றவர். கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்காக அவர் மேற்கொண்டுவரும் சேவை மிகுந்த பாராட்டிற்கு உரியது. இந்த பள்ளி மாணவர்களுக்காக ஒரு நாள் [...]

பதில் இல்லாத பரிட்சை.

சென்னையில் எந்தச் சாலையை எப்போது தோண்டுவார்கள். என்ன வேலை நடக்கிறது எப்போது அது முடியும். எந்த சாலை எப்போது திருப்பிவிடப்படும் என்று எவராலும் சொல்லிவிட முடியாது. எந்த முன்னறிவிப்பும் கிடையாது. தொலைக்காட்சி, பண்பலை, இணையம் என்று இத்தனை ஊடகங்கள் இருந்த போதும் காவல்துறையும் மாநகராட்சியும் அதில் எதையும் பயன்படுத்தி முன்கூட்டி தெரிவிப்பதுமில்லை. குறிப்பாக தேர்வு காலங்களில் சென்னை மாநகரம் படும்பாடுகள் எழுதி தீராத வலி நிரம்பியது. மைக்கேல் டக்ளஸ் நடித்த Falling Down  படத்தில் வீடு திரும்பும் மைக்கேல் [...]

கற்கத்தவறிய பாடம்.

பள்ளிச் சிறுவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எது என்று பையனிடம் கேட்டேன். ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் முட்டாள் என்று சொன்னான். இந்தச் சொல் இன்று நேற்றல்ல பள்ளி துவங்கிய காலத்திலிருந்து கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது . சிறுவர்களின் மிக முக்கியமான பிரச்சனை தான் முட்டாளா? அறிவாளியா ? என்பதே. அதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நீயொரு முட்டாள் என்ற வசையைச் சந்திக்காத குழந்தைகளே  இல்லை என்று சொல்லலாம். [...]

தினம் ஒரு கதை

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒன்றாம் வகுப்பில் படிக்கும் எனது பையன் ஆகாஷ் டிராகன் ஒன்றுக்கு பெயர் வைக்க வேண்டும். நல்லதாக ஏதாவது ஒரு பெயர் சொல்லுங்கள் என்று கேட்டான். எதற்காக என்றதும் ஆங்கிலத்தில் டிராகன் பற்றி தான் ஒரு கதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதில் வரும் டிராகனுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றான். டிராகனுக்கு என்ன பெயர் வைப்பது என்று  உடனே நினைவிற்கு வரவில்லை. ஏன் டிராகன்களுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றே தோன்றிக் கொண்டிருந்தது. அத்தோடு [...]

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: