சிறுகதை - Welcome to Sramakrishnan


‘சிறுகதை’

ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி

சிறுகதை ஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான் இருக்கிறது என்ற குரல் ஒலித்த போது டோக்கியோ செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் ஜோதிராம். அந்தக் குரல் குமாரசாமியுடையது, இருபத்திரெண்டு வருஷங்களுக்கு முன்பு ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். ஒரு வருஷம் ஜுனியர், பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசியது போல அத்தனை துல்லியமாக மனக்குரல் கேட்டது. பாதிசொருகியிருந்த கண்களைக் கசக்கிவிட்டபடியே மணி பார்த்தபோது இரவு [...]

ஷெர்லி அப்படித்தான்

அந்திமழை இதழில் வெளியான எனது புதிய சிறுகதை, **** காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருந்தாள், அவள் பூசியிருந்த லாவெண்டர் செண்டின் நறுமணம் அவள் வீட்டிற்குள் வருவதற்கு முன்னதாகவே நுழைந்திருந்தது. இவ்வளவு அடர்த்தியான வாசனை திரவியத்தைப் பூசிக் கொள்கிற ஒரே பெண் அவளாகத் தானிருக்ககூடும் ஷெர்லி பிராங் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள் என்றால் அன்று ஏழாம் தேதி என்று அர்த்தம், ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி அன்று மாலை நான்கு [...]

ஒண்டிக்கட்டை

சிறுகதை. மாக்ஸிம் கார்க்கி தமிழில் பாஸ்கரன் எனக்கு பிடித்தமான மாக்சிம் கார்க்கியின் கதையிது, ருஷ்யச் சிறுகதைகள் நூலில் இருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது ••• ஏழைகளைப்  புதைக்கும் கல்லறையில் ஒரு பகுதியில் இலைகள் உதிர்ந்து, மழையினால் அரிக்கப்பட்டு, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேடுகள். அங்கே கிழிந்த உடையும், கறுப்பு சால்வையும் அணிந்திருந்த ஒரு மாது, அல்லாடிப்போன இரண்டு பிர்ச் மரங்களின் நிழலில் உள்ள கல்லறை மேட்டிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். நரைகண்ட மயிர்ச்சுருள் கற்றையாக அவளது சுருங்கிய கன்னத்தில் புரண்டு [...]

அஸ்தபோவில் இருவர்

சிறுகதை உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது, டால்ஸ்டாய் ரயிலினுள் ஒடுங்கி உட்கார்ந்திருந்தார், அவரது மகள் சாஷாவும் மருத்துவர் துஷானும் அருகில் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள், தளர்ந்து போன அவரது உடலை குளிர்காற்று ஊசிமுனை போல குத்திக் கொண்டிருந்த்து, அவரது கால்முட்டிகளில் கடுமையாக வலி, உதடுகள் வெடித்து சிவந்து, கண்கள் சோர்ந்து அயர்ந்து போயிருந்தன, நுரையீரலில் புகைபடிந்தது போல மூச்சுவிடுவதற்கே கனமாகிக் கொண்டிருந்தது. அவராக கழுத்தடியில் தொட்டு பார்த்துக் கொண்டார், உள்ளுற காய்ச்சல் அடிப்பது போலவே தோன்றியது, நாக்கில் [...]

காந்தியோடு பேசுவேன்

சிறுகதை காலையில் தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன், நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன்முறை, ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன், புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன், ஆனால் நேரில் காணும்போது அதன் பெருமைகள் எதுவும் கண்ணில்படவில்லை, சுமாரான பராமரிப்பில் நடைபெறும் ஒரு முதியோர் விடுதி ஒன்றைப்போலவே இருந்தது ராகேல், காந்தியின் குடிலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள், இந்த அறையில் தான் காந்தி தங்கியிருந்திருக்கிறார், கூரை வேய்ந்த எளிமையான அறை, காந்தியின் கைத்தடி மற்றும் காலணிகள், எழுதும்பொருள்கள், [...]

வெறும் பிரார்த்தனை

சிறுகதை அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது, வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே மதியசாப்பாட்டினை சாப்பிட்டு விடலாம் என்று அம்மா சொன்னாள் ஆனால் அப்பா  பழனிக்கு போனதும் சாப்பிடுவோம் என்று மறுத்துவிட்டார், ரமா மட்டும் எனக்கு பசிக்கு, இன்னும் எவ்வளவு தூரம்மா இருக்கு என்று ஆதங்கத்துடன் கேட்டாள், “அரைமணி நேரத்தில் போயிருவோம், நீ வேணும்னா ஒரு கொய்யாபழம் வாஙகி தின்னு“ என்று சொன்னாள் அம்மா. ரமாவால் பசி தாங்கமுடியாது, [...]

எதிர் கோணம்

சிறுகதை பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த அந்த பையனைப் பார்க்க விடுமுறைக்கு வந்திருந்த பள்ளிமாணவனைப் போலிருந்தான், ஒடிசலான தோற்றம், வெளிறிய ஜீன்சும், ஆரஞ்சுவண்ண டீசர்டும் அணிந்திருந்தான், அவனது கழுத்தில் கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது, முதுகில் கேமிராவின் உபகரணங்கள்  அடங்கிய பையை தொங்கவிட்டிருந்தான், அன்று பேருந்தில் நிறைய கூட்டமாக இருந்தது சவரிமுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபடியே அந்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தான், அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது கேனான் கேமிரா, அது போன்ற கேமிரா ஒன்றை ஹிண்டு பேப்பர்  விளம்பரத்தில் [...]

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை

2007ல் வெளியான சிறுகதை, அமெரிக்காவில் வசிக்கும் எனது நண்பர்  ஆனந்த் விருப்பத்திற்காக இதை மீள்பதிவு செய்கிறேன் ••• ஜி.சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்து போய்விட மாட்டோமா என்று அவள் [...]

தூய வெளிச்சம்

- சிறுகதை கோச்சடை சாலையில் நின்றபடியே வீடு இடிக்கபடுகின்றதை பார்த்துக் கொண்டிருந்தான், இடிபட மறுத்த உறுதியான சுவர்களை டங்டங் என கடப்பாரைகள் ஒங்கியோங்கி குத்தி உடைத்துக் கொண்டிருந்த ஒசை அவனை என்னவோ செய்தது, பழமையான அந்த வீடு  அவன் ஏறிக் குதித்து திருடிய வீடுகளில் ஒன்று, இரண்டுநாட்களாகவே அந்த வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்பொருள் அங்காடி ஒன்று வரப்போவதாக சொல்லிக் கொண்டார்கள்,  அந்த வீடு சைகோன் குமாரசாமி பிள்ளையுடையது, கப்பல் ஏறி போய் வணிகம் செய்து பிழைத்த [...]

மழைமான்

- சிறுகதை தேவபிரகாஷிற்கு உடனே ஒரு மானைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. தனது மேஜையில் ஆத்தியப்பன் ரிஜிஸ்தரை வைத்து விட்டுப் போகும்வரை அந்த யோசனை தோன்றவேயில்லை. திடீரென்று தான் மனதில் உருவானது. எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் மனதில் மானைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகக் கொப்பளிக்கத் துவங்கியது. இப்படி யாருக்காவது விசித்திரமான எண்ணம் வருமா என்ன… தன்னைச் சுற்றிலும் இருந்த சக ஊழியர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார். மின்வாரியத்தின் நிர்வாகப் [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: