ஆளுமை - Welcome to Sramakrishnan


‘ஆளுமை’

சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம்

ஆர்.பாலகிருஷ்ணன். ஐ.ஏ.எஸ் ஒடிஸா அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.  மதுரையில் தமிழ் இலக்கியம் பயின்ற பாலகிருஷ்ணன் தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இடப் பெயர்களின் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.  சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை  கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்துள்ளார். அக்கட்டுரை சிந்துவெளி ஆய்வுலகில் மிகுந்த பாராட்டினைப் பெற்றுள்ளது. தனது [...]

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்

அம்ஷன் குமார் சினிமா எவ்வாறு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கிறது என்பது பற்றி ஒரு தலைமுறைக்கே அது குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்த ஆசானாக விளங்கினார் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் எழுத வந்த காலத்தில் தமிழில் பத்திரிகை உலகும் சினிமா உலகும் பெரும் தொழில் நிறுவனங்களாக ஆகிவிட்டிருந்தன. பல இலக்கிய எழுத்தாளர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பெரும் பத்திரிகைகளில் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். நாவல்கள், கதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் அவற்றில் வந்தன. இலக்கியச் சிறப்பு மிக்க உ.வே.சாமிநாத அய்யரின் சுயசரிதை ‘என் [...]

அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்

திரைக்கதையும் அணுகுண்டும் தமிழில்: ராம் முரளி 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலக புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ நகருக்கு சென்றிருந்தபோது, RHAPSODY IN AUGEST எனும் தனது புதிய படத்தை இயக்கிக் கொண்டிருந்த அகிரா குரோசாவாவை சந்தித்து உரையாடினார். மார்க்கேஸ் தனது “ONE HUNDRED YEARS OF SOLITUDE” மற்றும் “LOVE IN THE TIME OF CHOLERA” போன்ற மகத்தான கிளாசிக்கல் நாவல்களை எழுதிடும் முன்பாக, சில ஆண்டுகள் [...]

பஸ்டர் கீட்டனின் நகைச்சுவை

ஹாலிவுட்டின் மௌனப்பட யுகத்தில் சார்லி சாப்ளினுக்கு இணையாக இருந்த மகத்தான கலைஞன் பஸ்டர் கீட்டன்.(Buster Keaton) அவரது நகைச்சுவை உயர்தரமானது. தி ஜெனரல் என்ற கீட்டனின் படத்தை உலகின் மிகச்சிறந்த படமாகச் சொல்கிறார் ஆர்சன் வெல்ஸ் கீட்டனின் நகைச்சுவையை ரசிக்க : Winds of Change https://youtu.be/yjV9tobFjLQ

உண்மையின் தோழன்

சமஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான யாருடைய எலிகள் நாம் நூலை வாசித்தேன், சமகாலப்பிரச்சனைகள் குறித்து வெகுதீர்க்கமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவைகள். வேறுவேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் அதன் அடிப்படையாக இயங்குவது நீதியுணர்வும் அறச்சீற்றமும் தான். சமூகவெளியில் நடக்கின்ற வன்முறைகள், அரசியல் வெறியாட்டங்கள், ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் போகிற பொதுபுத்தியின் மீது விழும் சவுக்கடிகள் தான் இந்தக் கட்டுரைகள் சமஸின் கட்டுரைகள் பிரச்சனைகளை மட்டும் கவனம் கொள்பவையில்லை, மாறாக அது எப்படி உருவானது, எங்கே அதன் வேர்கள் புதையுண்டிருக்கின்றன, [...]

மௌனியோடு ஒரு மாலை

நேற்று  மௌனி குறித்து எழுத்தாளர் கி. அ. சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை கேட்பதற்காகப் போயிருந்தேன். அழகியசிங்கர் கோவிந்தராஜன் இருவரும் இணைந்து விருட்சம் சார்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டம் கேட்க பதினைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் சரிபாதி எழுத்தாளர்கள். எழுத்தாளர் இரா.முருகன். திரைப்பட இயக்குனர் அம்ஷன்குமார், ராஜ்கமல் கண்ணன், சிறகு ரவிச்சந்திரன், ராஜகோபால் முதலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மௌனியின் மகள் ஞானம், தனது கணவருடன்  கூட்டத்தில் கலந்து கொண்டார், நிகழ்வின் இறுதியில் ஞானம் தன் தந்தையைப் [...]

படிப்பதற்காகவே வாழ்பவர்

ஒருவன் தனது வாழ்நாளிற்குள் பத்தாயிரம் மைல் நடக்க வேண்டும், பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும், அதுவே முழுமையான வாழ்க்கை என்கிறது சீனப்பழமொழி, இதை உண்மையாக்குவது போல படிப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் 87 வயதான எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், அவரது முழுப்பெயர் சேதுராமலிங்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் இந்த அயராத படிப்பாளியைக் காண்பதற்காக சென்றிருந்தேன், எனது முதல்நாவல் உப பாண்டவத்தை வெளியிடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் நானே அதன் முதற்பதிப்பை வெளியிட்டேன், விருதுநகரில் இருந்த எனது முகவரிக்கு மணிஆர்டர் அனுப்பி புத்தகத்தைப் [...]

ஜெயகாந்தன் பிறந்தநாள்

இன்று ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள், அவரிடம் ஆசிபெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன், உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவசிகிட்சை பெற்று வீடு திரும்பியுள்ள ஜெயகாந்தன்  தளர்ச்சியாகவே  காணப்பட்டார் ஜேகேயை காண்பதும், அருகமர்ந்து இருப்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது, தனது எழுத்தாலும் பேச்சாலும் தமிழகத்தையே வியந்து பார்க்க வைத்த ஜேகே இப்போது அமைதியாகிவிட்டார் இந்த அமைதியும் அவருக்கு அழகாகவே இருக்கிறது கவிதா சொக்கலிங்கம், முனைவர் மா. ராஜேந்திரன், டாக்டர் ருத்ரன், ஒவியர் சீனிவாசன், யு.எஸ்.எஸ்.ஆர் நடராசன் என பலரும் ஜேகேயை காண்பதற்காக [...]

கும்பல்

ஜெயகாந்தன் ஒரு சொற்பொழிவில் இப்படிக் குறிப்பிடுகிறார், கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும். கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். [...]

காந்தி

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை விவரிக்கும் மாங்கா காமிக்ஸ் ஒன்று 2011ல் வெளிவந்துள்ளது, இதனை உருவாக்கியவர் Kazuki Ebine. இவர் தோக்கியோவில் வசிக்கும் இளம் ஒவியர், இந்த நூலின் விலை ரூ 400. பதின்வயதினர் காந்தியை அறிந்து கொள்வதற்கு உதவியாக இப்படக்கதை மகாத்மா வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை அழகாக விவரிக்கிறது, ஜப்பானில் பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை புரிந்துள்ளது இந்த நூல் இந்தப் புத்தகத்தை எனக்குத் தெரிந்த பள்ளி மாணவர்கள் சிலருக்குப் பரிசாக வாங்கித் தந்தேன், ஆச்சரியம். அவர்கள் [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: