ஆளுமை - Welcome to Sramakrishnan


‘ஆளுமை’

செல்லப்பாவின் கேமிரா

எழுத்தாளர் சி.சு. செல்லப்பா ஜல்லிக்கட்டு குறித்து அற்புதமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார், புகைப்படக்கலையின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த செல்லப்பா கறுப்பு வெள்ளையில் நிறையப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார் மதுரையில் உள்ள மகனது வீட்டில் அவர் வசித்தபோது நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு, தனது புகைப்படங்களில் சிலவற்றைச் செல்லப்பா காட்டியிருக்கிறார், அந்தப் புகைப்படங்கள் என்னவாகின என்று தெரியவில்லை இன்று வரை அவர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி எதுவும் நடத்தப்படவேயில்லை. செல்லப்பா முக்கியமான புகைப்படக்கலைஞர் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் சாட்சி [...]

கடிதம்

நெஞ்சில் இட்ட கோலம்

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை, என்றும் அது கலைவதில்லை, எண்ணங்களும் மறைவதில்லை என்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் என் நினைவில் கொப்பளிக்கிறது, பாலுமகேந்திரா என்ற மகத்தான கலைஞனைப் பற்றியே கடந்த ஒருவாரமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், முந்திய நாளின் இரவில் யாத்ரா படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்கள் கலங்கிவிட்டது, என்னவொரு அற்புதமான ஒளிப்பதிவு, படமாக்கம், இசை, மலையாளத்தில் வெளியான அப்படம் இன்றளவும் புத்துணர்வுடனே இருக்கிறது. பாலுமகேந்திரா அவர்களுடன் பழகிய நினைவுகள் பொக்கிஷமானவை, இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு [...]

ஹோமியோபதியின் மகத்துவம்

நேற்று டாக்டர் விகடன் இதழுக்காக நேர்காணல் செய்ய வந்திருந்தார்கள், அப்போது எனது அண்ணன் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதையும் அவரது மருத்துவசெயல்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த போது ஏன் சார் இந்த அனுபவங்களைப் பற்றி எழுதவேயில்லை எனப் பத்திரிக்கையாளர் ஆதங்கத்துடன் கேட்டார், அதற்கென்ன எழுதிவிடுகிறேன் என்று சொன்னேன் நேற்று இரவு யோசித்த போது தோன்றியது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நான் எவ்வளவோ பயணங்கள் செய்திருக்கிறேன், கண்டபடி ஊர் சுற்றியிருக்கிறேன், எது எனது பயணத்தின் உறுதுணை என்றால் ஹோமியோபதி [...]

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள் எந்த அரங்கில் கிடைக்கின்றன என்பது குறித்தும் இந்த புத்தகக் கண்காட்சியில் என்ன புதிய புத்தகங்கள் வாங்கலாம்  என்றும்  நண்பர்கள்  பலர் தொடர்ந்து  மின்னஞ்சலில் கேட்டு வருகிறார்கள்,அவர்களுக்காக எனது பரிந்துரை, இது கடந்த நான்கு நாட்களில் புத்தக கண்காட்சியில் சுற்றித் தேர்வு செய்தவை,  இதில் உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்கிக் கொள்ளவும் ••• 1) ஒநாய் குலச்சின்னம்  -ஜியாங் ரோங் -தமிழில் சி மோகன், அதிர்வு வெளியீடு, முக்கியமான மொழியாக்க நாவல் 2) [...]

சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்

– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.  சிந்துசமவெளி பற்றிய ஆய்வில் முக்கியமானவர், அவரது ஊர்பெயரியல் ஆய்வு குறித்த அறிமுக கட்டுரை ••• மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக [...]

காந்தியும் சாப்ளினும்

வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது, இந்தச் சந்திப்பு எப்படி நடைபெற்றது என்பது குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள், மாற்றுகருத்துகள், கற்பனைகள் இன்றும் உலவி கொண்டேயிருக்கின்றன. எரிக் பிளாம் எழுதிய சாப்ளின் பற்றிய புத்தகத்தினை வாசித்த போது அதில் இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க [...]

பவா கதை சொல்கிறார்

பவா செல்லத்துரை என்றொரு கதைசொல்லி ஆவணப்படத்தைப் பார்த்தேன் ,பவாவோடு இருபது ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் படம் பார்க்கும் போது, அவர் கூடவே இருந்து கதை கேட்பது போல இயல்பாக, நேர்த்தியாக, உணர்ச்சிபூர்வமாக இப்படம் உருவாக்கபட்டுள்ளது, சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர், பேச்சாளர், கதை சொல்லி, இலக்கிய இரவுகளை உருவாக்கியவர், முற்றம், டயலாக் போன்ற இலக்கிய அமைப்புகளை உருவாக்கி நடத்திவருபவர், பதிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் பவா செல்லத்துரை இந்த ஆவணப்படம் பவாவின் கதை [...]

தாயின் குரல்

காமராஜர் முதல்வராக இருந்த சமயம் அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார். (2.7.1961) இணையத்தில் மறுபிரசுரம் கண்ட அந்த இணைப்பை ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார், அதன் மீள்பதிவு இது ••• விருதுநகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது. அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் [...]

பாராட்டிற்குரியவர்கள்

கடந்த ஒரு வாரத்தின் முன்பாக மதுரையில் நடைபெற்ற விருட்சத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது குறித்து நண்பர்கள் பலரும் என்னிடம் தெரிவித்தார்கள், நானும் அதில் கலந்து கொள்ள விரும்பியிருந்தேன், ஆனால் வேறு ஒரு முக்கியப்பணியின் காரணமாக சேலம் சென்ற காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்த விருட்சத்திருவிழா  களமாக அமைந்திருந்தது என்று பல பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், இதனை சாத்தியமாக்கிய நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கும் அவரது குழுவிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள் முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்த இந்த [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: