ஆளுமை - Welcome to Sramakrishnan


‘ஆளுமை’

பேட்ரிக் ரோசாரியோ

ரஷ்ய எழுத்தாளர் கொரலங்கோ கண்தெரியாத இசைஞன் என்றொரு குறுநாவலை எழுதியிருக்கிறார், அதில் பார்வையற்ற ஒரு இசைக்கலைஞனின் உலகம் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும், அப்படியான ஒரு அரிய இசைக்கலைஞர் சென்னையிலே வசிக்கிறார், அவரது இசையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள், மறக்கவே முடியாது என்று இசை ரசிகரான எனது நண்பர் கார்த்திக் ஒரு முறை தெரிவித்தார், பேட்ரிக் அலெக்சாண்டர் ரோசாரியோ. ஒரு அகார்டியன் இசைக்கலைஞர், இவரது இசை நிகழ்ச்சியினை எழுத்தாளர் ஷாஜியின் புத்தக வெளியீட்டு விழாவின் போது ஒரு முறைக் கேட்டேன், [...]

பாரதி எனும் விசித்திரன்

மகாகவி பாரதியாருடன் நேரடியாகப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற 92வயது முதியவரை நேரில் சந்தித்து உரையாடும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, இவர் அம்ஷன் குமார் இயக்கிய சுப்ரமணிய பாரதி ஆவணப்படத்தில் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்போது கல்யாண சுந்தரம் உயிருடன் இல்லை, ஆனால் அவருடன் பேசிய நினைவுகள் அப்படியே பசுமையாக எனக்குள் இருக்கின்றன,  அவரைச் சந்தித்துப் பேசியதை ஆறாம்திணை என்ற இணையதளத்திற்கு ஒரு நேர்காணலாக எழுதித் தந்திருந்தேன், ஹரி கிருஷ்ணா என்ற பெயரில் வெளியாகி [...]

ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல்

கணிதம் மற்றும் அறிவியல் ஆளுமைகள் பற்றி நண்பர் பாஸ்கர் லட்சுமண் சிறப்பான கட்டுரைகளை  எழுதிவருகிறார்,  அவர் சொல்வனம் இணைய இதழில் எழுதிய இக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று ••• ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் – புள்ளியியல் பகுப்பாய்வின் முன்னோடி பாஸ்கர் லட்சுமண் ஃப்ளோரென்ஸ்  நைட்டிங்கேல் என்றவுடன் பொதுவாக எல்லோர் நினைவில் வருவது “விளக்குடன் ஒரு மங்கை” மற்றும் செவிலியாக அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு. அனேகமாக நாம் அறியாத அவருடைய இந்த புள்ளியில் துறைத் திறமை மீது சிறிது [...]

காந்தியைப் பின்தொடர்வது

இந்த ஆண்டு மகாத்மா காந்தி குறித்து நான்கு விரிவான உரைகளை நிகழ்த்தியிருக்கிறேன்,  மதுரை, திருச்சி, கடலூர், சென்னை ஆகிய நான்கு இடங்களிலும் நான்கு வேறு விதமான தலைப்புகள், அதில் மூன்று கூட்டங்கள் மாணவர்கள் மத்தியில், ஒன்று எனது புத்தக வெளியீட்டுவிழாவில். ஒவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் காந்தியின் குரலை இரண்டு நிமிஷம் ஒலிக்கவிடுவேன், காந்தியை ஒரு புகைப்படமாக, சிலையாக, பிம்பமாகத் தான் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம், அவரது குரலை இந்த தலைமுறையினர் கேட்கவேயில்லை, அதற்காக இரண்டு நிமிஷங்கள் காந்தியின் [...]

சுசீலா ராமன்

சுசீலா ராமன்  எனக்கு விருப்பமான பாடகி, அவரது கிறக்கமூட்டும் குரலுக்கு நிகரேயில்லை,  சுசீலாவின் சால்ட் ரெய்ன் இசைத்தொகுப்பு  அற்புதமானது,  தஞ்சாவூரைப் பூர்வீகமாக கொண்ட சுசீலா பிரிட்டனில் பிறந்தவர், அவரது நான்கு வயதில் பெற்றோர் ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள், அங்கு மேற்கத்திய இசையும் கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொண்டவர் சுசீலா ராமன்,  கல்லூரி நாட்களிலே தனக்காக ஒரு இசைக்குழுவை உருவாக்கி கொண்டு கர்நாடக சஙகீதத்தை ஜாஸ் இசையோடு இணைந்து புதியதொரு இசை எழுச்சியை உருவாக்கினார், இன்று உலகப்புகழ்பெற்ற பாடகியாக சுசீலாராமன் [...]

ஜேகே

நேற்று ஜெயகாந்தனின் 78வது பிறந்த நாள், காலையில் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன், வாசகர்கள், நண்பர்கள், இடதுசாரித்தோழர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல பலரும் வந்து கொண்டேயிருந்தார்கள். எப்போதுமே ஜெயகாந்தனோடு பேசிக் கொண்டிருப்பது மிகுந்த உத்வேகம் தரக்கூடியது, நேற்றும் அப்படியே இருந்தது, முதுமையின் தளர்ச்சியிருந்த போதும் அவரது தீர்க்கமான பதில்களும், கேலியும் அனைவரையும் உற்சாகமூட்டியது, ஜேகேயின் வீட்டில் அவரது இளையமகள் தீபாவைச் சந்தித்து பேசியது சந்தோஷம் தருவதாக இருந்தது, அவர் வலைப்பதிவுகளில் [...]

சமணச் சிற்பங்கள்

இரா.பானுகுமார், சென்னை இரா. பானுகுமார், சமணச் சிற்பங்கள் குறித்து அருமையான விளக்க கட்டுரையை எழுதியிருக்கிறார்,அவரது வலைத்தளத்தில் சமணம் குறித்து விரிவான கட்டுரைகள் உள்ளன, கட்டுரையின் முக்கியத்துவம் கருதி அதை மீள்பிரசுரம் செய்கிறேன். ••• பல சொற்கள் உணர்த்தாததை ஒரு படம் உணர்த்தும் என்பார்கள். சிற்பங்களும் அவ்வாறே. சமயச் சிற்பங்களும், சித்திரங்களும் அந்தந்த சமயங்களின் பிரதிபலிப்பு என்றால் அதுமிகையாகாது. இந்திய சமய வரலாறும் உணர்த்துவதும் அதுவேயாம். இந்திய வரலாற்றை ஆராயும்போது உருவ வழிபாடு என்பது சிரமண மதங்களிலிருந்தே தொடங்குகிறது. [...]

தியான நடனம்

ருஷ்ய மெய்ஞானியான  குர்ஜீப்பின்(Gurdjieff) இளமைக்காலம் குறித்த Meetings with Remarkable Men படத்தை மூன்று நாட்களுக்கு முன்பாகப் பார்த்தேன், 1979ம் ஆண்டு வெளியான இப்படத்தை பீட்டர்புரூக் இயக்கியிருக்கிறார், இவர் மகாபாரதத்தை நாடகமாகவும் திரைப்படமாகவும் இயக்கியவர், நவீன நாடக உலகில் தனிப்பெரும் ஆளுமை,  குர்ஜீப்பின் தத்துவச் செறிவான நினைவலைகளை பீட்டர்புரூக் ஆழ்ந்து புரிந்து கொண்டு சிறப்பாக படமாக்கியிருக்கிறார். குர்ஜீப்பை எனது கல்லூரி நாட்களிலே படித்திருக்கிறேன், கவிஞர் தேவதச்சன் அறிமுகம் செய்து வைத்து Meetings with Remarkable Men நூலை [...]

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும்

சமகாலத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரம் திருவண்ணாமலை என்று எப்போதுமே சொல்வேன், அப்படித் திருவண்ணாமலையை ஒரு இலக்கிய சங்கமமாக மாற்றியமைத்தவர் எனதருமை நண்பர் பவா செல்லத்துரை. அவர் மீடியா வாய்ஸ் இதழில் எங்களது நட்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், வாசிக்கையில் மனம் நெகிழ்ந்து போனேன்.  அரஸ் வரைந்துள்ள எனது ஒவியம் மிக துல்லியமாக, சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. எத்தனையோ இரவுகளில் பவா வீட்டுக்கதவை தட்டி அவரது அம்மா சமைத்து தரும் உணவைச் சாப்பிட்டு விடிய விடிய இலக்கியம் பேசியிருக்கிறேன், எனக்கும் [...]

சாரல் விருது

2012ம் ஆண்டுக்கான சாரல் விருது எழுத்தாளர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி தனது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் வழங்குகிறார்கள், விருது வழங்கும் நிகழ்வு ஜனவரியில் சென்னையில் நடைபெற உள்ளது வண்ணதாசன், வண்ணநிலவன் இருவரும் ஒருங்கே விருதுபெறுவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது, இருவருமே என் விருப்பதிற்குரிய எழுத்து ஆளுமைகள் தமிழ் இலக்கியத்தின் மகத்தான இரண்டு கலைஞர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: