எனக்குப் பிடித்த கதைகள் - Welcome to Sramakrishnan


‘எனக்குப் பிடித்த கதைகள்’

எனக்குப் பிடித்த கதைகள் 27

ஒண்டிக்கட்டை   —மாக்ஸிம் கார்க்கி தமிழில் பாஸ்கரன் ஏழைகளைப் புதைக்கும் கல்லறையில் ஒரு பகுதியில் இலைகள் உதிர்ந்து, மழையினால் அரிக்கப்பட்டு, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேடுகள். அங்கே கிழிந்த உடையும், கறுப்பு சால்வையும் அணிந்திருந்த ஒரு மாது, அல்லாடிப்போன இரண்டு பிர்ச் மரங்களின் நிழலில் உள்ள கல்லறை மேட்டிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். நரைகண்ட மயிர்ச்சுருள் கற்றையாக அவளது சுருங்கிய கன்னத்தில் புரண்டு கொண்டிருந்தது. அவளது உதடுகள் இறுக்கமாக மூடியிருந்தன. அதன் ஓரங்களில் ஒரு நெளிவு அவளது வாயின் இருபுறங்களிலும் [...]

எனக்குப் பிடித்த கதைகள் 26

மிகப்பெரும் சிறகுகளுடன் ஒரு வயோதிகன் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் தமிழில் : ஆர்.சிவகுமார் வீட்டுக்குள் அவர்கள் கொன்ற ஏராளமான நண்டுகளைக் கடலில் எறிவதற்காக மழை தொடங்கி மூன்றாவது நாள் பெலயோ நனைந்த முற்றத்தைத் தாண்டிப் போனான். இறந்த நண்டுகள் உண்டாக்கிய துர்நாற்றம்தான் பிறந்த குழந்தைக்கு இரவு முழுவதும் காய்ச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு உலகமே சோகமயமாக இருந்தது. கடலும் வானமும் ஒரே சாம்பல் வண்ணத்தில் இணைந்து போயின. மார்ச் மாத இரவுகளில் [...]

எனக்குப் பிடித்த கதைகள் 25

மணியோசை – ஜப்பானிய பழங்கதை. தமிழில்/ புதுமைப்பித்தன் “நான் சாவதற்குப் பயப்படவில்லை” என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. “இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?” வேதனைப்பட்டுக்கொண்டிருந்த கணவன் சொன்னான்: “உனக்குப் பதிலாக யாரும் இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க மாட்டார்கள்; நீ போய்விட்டால் கலியாணமே செய்து கொள்ளமாட்டேன்.” அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது மனப்பூர்வமாகத்தான் சொன்னான்; அவள் மீது அவ்வளவு ஆசை அவனுக்கு. [...]

எனக்குப் பிடித்த கதைகள் 24

கோயில் / கௌ ஷிங்ஜென்.  தமிழில் / நதியலை நாங்கள் வெகு மகிழ்ச்சியாக இருந்தோம். மிகுந்த நம்பிக்கையுடனும், காதலுடனும், பரிவுடனும் நெகிழ்வோடும் கூடிய தேன்நிலவிற்கேற்ற உற்சாக உணர்வுகளோடு இருந்தோம். திருமணத்திற்கென பத்து நாட்களும் ஒரு வாரம் கூடுதல் விடுமுறையுமென பதினைந்து நாட்களே விடுமுறை இருந்தபோதிலும் ஜியாவும் நானும் இப்பயணத்திற்கென மீண்டும் மீண்டும் திட்டமிட்டோம். வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வு, எங்களுக்கு அதைவிட வேறு எதுவுமே முக்கியமாகப் படாததால் கூடுதல் விடுமுறைக்கு விண்ணப்பித்தால் என்னவென்று தோன்றியது. [...]

எனக்குப் பிடித்த கதைகள் 23

கரடி வேட்டை                     லியோ டால்ஸ்டாய்- தமிழில் :எம்.ஏ.சுசீலா நாங்கள் கரடி வேட்டைக்காகச் சென்றிருந்தோம். என் கூட்டாளி ஒரு கரடியைச் சுட்டான்; ஆனால் அது ஒரு சதைக் காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பனியின் மீது இரத்தத் துளிகள் படிந்திருந்தாலும் கரடி தப்பித்துப் போய்விட்டது. அந்தக் கரடியை உடனே பின் தொடர்ந்து செல்வதா அல்லது இரண்டு மூன்று நாட்களில் அது தன் இடத்துக்குத் திரும்பியதும் பார்த்துக் கொள்வதா என்பதை முடிவு செய்வதற்காக நாங்கள் எல்லோரும் காட்டில் ஒன்று கூடிப் பேசினோம். [...]

எனக்குப் பிடித்த கதைகள் 21

சிறுவர் விளையாட்டு – வில்லி ஸோரன்ஸன் (டேனிஷ்) தமிழில்: நகுலன் ஒரே தாய் தகப்பன்மாருக்குப் பிறந்த விசேஷத்தினால் சகோதரர்களான அவ்விரு சிறுவர்கள், அதே முறையில் பொதுவாக ஒரு மாமனையும் பெற்றிருந்தார்கள். சிறுவர்களுடைய மாமனுக்கு ஒரு காலை முறிக்கவேண்டிய அவசியமேற்பட்டது. இதனால் அவ்விரு சிறுவர்களும், தங்கள் மாமனைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். சிறுவர்களுடைய பரபரப்பைச் சாந்தப்படுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்கு இது விஷயமாக விஞ்ஞான ரீதியாக விஷயத்தை விளக்கிக்காட்ட வேண்டுமென்று நிச்சயித்தார்கள். அதற்காக அவர்கள் சிறுவர்களிடம் இவ்வாறு சொன்னார்கள். அவர்களுடைய [...]

எனக்குப் பிடித்த கதைகள் 20

விருந்தாளி -ஆல்பெர் காம்யு தமிழில்: க.நா.சுப்ரமண்யம் சரிவான பாதையிலே தூரத்தில் தன்னை நோக்கி ஏறி வந்த இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றார் ஆசிரியர். ஒருவன் குதிரை மேல் வந்தான்; மற்றொருவன் நடந்து வந்தான். இன்னும் செங்குத்தான குன்றை அவர்கள் அடையவில்லை. அதைத் தாண்டியே அவர்கள் பள்ளிக்கூடத்தை அடைய முடியும். ஏறி வருவது சிரமமான காரியம்தான். பனி வேறு பெய்ததால் சற்று மெதுவாகவே வந்தனர் அவர்கள். மனித சஞ்சாரமேயற்ற சரிவு அது. காலடியிலிருந்த கற்களில் குதிரை அடிக்கடி இடறிற்று. காதில் [...]

எனக்குப் பிடித்த கதைகள் 19

நகங்களைச் சேகரிப்பவன் –   ஜோரன் ஜிவ்கோவிக் தமிழாக்கம் - க.ரகுநாதன் திரு. ப்ரோஸ்கா வெட்டப்பட்ட தனது விரல் நகங்களை சேகரித்து வந்தார். தனது எட்டாவது வயதில் முதல் முதலாக தானாகவே விரல் நகத்தை வெட்டியதிலிருந்தே அவற்றை சேகரிக்கத் துவங்கிவிட்டார். அம்மாவின் உதவி இல்லாமலும் விரல்களைக் காயப்படுத்திக் கொள்ளாமலும் தானே நகங்களை வெட்டியதை நினைத்து அன்று அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்த வெற்றியின் நினைவாக அந்த பத்து குட்டி அரிவாள்கள் போன்ற நகங்களை சேகரித்து வைக்க முடிவு செய்தார்.  அம்மாவுக்குத் [...]

எனக்குப் பிடித்த கதைகள் 18

பழுப்புக் காலை – ஃப்ராங்க் பாவ்லாஃப் தமிழில்: ஆனந்தராஜ் கால்களை ஓய்வாக நீட்டிக்கொண்டு, காப்பியைப் பருகியபடி மனத்தில் தோன்றியதையெல்லாம் சார்லியும் நானும் நிதானமாகப் பகிர்ந்துகொண்டிருந்தோம். மெதுவாக நேரம் கடந்துகொண்டிருக்கச் சில அருமையான கணங்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். திடீரென, தனது நாயைத் தான் கொல்ல வேண்டி வரும் என அவன் சொன்னான். எனக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டாலும் வேறு உணர்வு எதுவும் எழவில்லை. என்னைப் பொறுத்தளவில் பதினைந்து வருடங்கள் – இது நீண்ட காலம்தான்- வாழ்ந்துவிட்ட ஒரு நாய், நோயுற்றுச் சிரமப்படுவது [...]

எனக்குப் பிடித்த கதைகள் 17

மேசை என்றால் மேசை ஜெர்மன்மூலம் : பீட்டர் பிக்ஃசெல் (Peter Bichsel) தமிழில்: ந.சுசீந்திரன் நான் ஒரு முதியவனைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இனி எந்த வார்த்தையுமே பேச மாட்டாத, சிரிக்கவும் கோபப் படவும் கூட சோம்பற் படும் தூங்கிப்போன முகங்கொண்ட ஒரு முதியவனைப் பற்றி. அந்தச் சிறு நகரின் ஒரு தெரு முனைச் சந்திக்கருகில் அவன் வீடு. அவனைப் பற்றி இன்னும் மேலதிகமாகச் சொல்லிக் கொண்டு போவதால் ஆகப்போவது எதுவுமில்லை. மற்றவர்களை விட அவனொன்றும் வித்தியாசமான [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: