எனக்குப் பிடித்த கதைகள் - Welcome to Sramakrishnan


‘எனக்குப் பிடித்த கதைகள்’

எனக்குப் பிடித்த கதைகள் – 6

குரங்கின் பாதம் – W. W. Jacobs -சிறுகதை தமிழில் : என்.பக்கிரிசாமி ** நல்ல குளிரும், நசநசவென்று ஈரமும் மிகுந்த ஒரு குளிர்கால இரவு. ஜன்னல்களின் திரைப்பலகைகள் நன்கு மூடப்பட்டிருந்தது. அறையின் வெப்பத்தை அதிகப்படுத்த உண்டாக்கப்பட்ட நெருப்புத்தொட்டியில் கனழ்ந்துகொண்டிருந்த கரித்துண்டுகள் தங்களது வேலையை சரியாகச் செயததால், அறையின் கதகதப்பு குளிருக்கு அடக்கமாக இருந்தது. தந்தை வொய்ட்டும் மகன் ஹெர்பர்ட்டும் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். வொய்ட் ஒரு வித்தியாசமான வகையில் குதிரையை நகர்த்தி மகனுடைய ராஜாவை கொல்வதற்கு முயற்சி [...]

எனக்குப் பிடித்த கதைகள் 5

பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் [...]

எனக்குப் பிடித்த கதைகள் 4

மணல் புத்தகம்-சிறுகதை : போர்ஹேஸ் தமிழில் : க.செண்பகநாதன் …… மணலைக் கயிறாகத் திரித்து ….. (-ஜார்ஜ் ஹெர்பர்ட் – 1593-1623) கணக்கிலடங்காத புள்ளிகளை ஒருங்கே கொண்டது ஒரு கோடு; எண்ணிக்கையற்ற பல கோடுகளை கொண்டது ஒரு சமவெளி; கணக்கிலடங்கா சமவெளிகள் ஒரு கண பரிமாணம்; எண்ணற்ற கணபரிமாணங்கள் பெருத்த அதிகனமான பரிமாணமாகும்…. இவ்வாறாக கூறுவது சரியானதல்ல – இது நிலவியல் கணக்கைப் போல் இருப்பதால் கதையை கூறுவதற்கு உகந்த முறையல்ல. கற்பனைக் கதையே மெய்யான கதையென்ற [...]

எனக்குப் பிடித்த கதைகள்- 3

யுத்தம்- லூய்கி பிரண்ட்லோ (luigi pirandello) தமிழில் நிருத்தன் ரோமிலிருந்து இரவு நேர பெரு ரயிலில் புறப்பட்டவர்கள் இந்த பழைய ஃபாப்ரியனோ புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கி, சல்மோனாவுக்கு அந்த பழங்கால இணைப்பு ரயில் பெட்டியில் விடியல்வரை – பயணத்தை தொடர காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த விடியலில், புகை அப்பி நெடி அடிக்கும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் – ஏற்கனவே ஐந்துபேர் தங்கள் இரவை கழித்து இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் துக்கம் அனுஷ்டித்தபடிவந்த அந்த [...]

எனக்குப் பிடித்த கதைகள் 2

பூங்காக்களின் தொடர்ச்சி ஹுலியோ கொர்த்தஸார்              மொழிபெயர்ப்பு: ராஜகோபால் சிலநாட்களுக்கு முன்புதான் அவன் அந்த நாவலைப் படிக்கத் தொடங்கினான். அவசர வியாபாரச் சந்திப்புகளின் நிமித்தம் அதை அவன் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. அவனுடைய எஸ்டேட்டிற்குத் திரும்பும் வழியில் ரயிலில், அதை அவன் மீண்டும் திறந்தான். கதை நிகழ்வில், கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் மெதுவாக ஆர்வம் வளார்வதற்குத் தன்னை அனுமதித்துக் கொண்டான். பிற்பகலில், அவன் சார்பாகச் செயலாற்றும் அதிகாரத்தை வழங்கும் ஒரு கடிதத்தை [...]

எனக்குப் பிடித்த கதைகள் 1

பால்மணம் ஜப்பானியச் சிறுகதை எழுதியவர்- அகுடாகாவா[ RYUNOSUKE  AKUTAGAWA] தமிழாக்கம்: கவிஞர் வைதீஸ்வரன் ஷின்சுகே பிறந்ததிலிருந்து தாய்ப்பாலைச் சுவைத்ததேயில்லை. அவன் பிறந்ததிலிருந்தே அவன் தாய் மிகவும்   பலஹீனமானவளாக  பால்சுரப்பில்லாமல் இருந்தாள். குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக செவிலித்தாயை ஏற்பாடு செய்யவேண்டுமென்றால் அதற்குப் பணம் தேவையாக இருந்தது. அவளுக்கு அவ்வளவு   வசதியில்லை. ஆகை யால் ஷின்சுகே பசும்பால் குடித்துத்தான் வளரவேண்டியிருந்தது.  இப்படி தாய்ப்பால் சுவையறியாமல் வளர்ந்த குழந்தைப் பருவத்தை  நினைத்து  அவன் எப்போதும் சபித்துக் கொள்ளாமல் இருந்ததே யில்லை தினமும் [...]

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: