புரூகேலின் வேட்டைக்காரர்கள்
பீட்டர் புரூகேலின் (Pieter Bruegel) The Hunters in the Snow ஒவியத்தின் பிரதி ஒன்றை என் அறையில் மாட்டி வைத்திருக்கிறேன், ஒவ்வொரு நாளும் காலையில் அதைச் சில நிமிஷங்கள் பார்த்துக் கொண்டேயிருப்பது எனது வழக்கம். அது தான் எனது தியானம் மெல்ல அந்த ஒவியம் என் மனம் முழுவதும் நிரம்பும் வரை அதைப்பார்த்தபடியே இருப்பேன், ஒவியத்திலிருந்து கிடைத்த குளிர்ச்சியும், சில்லிடலும் மனதை மலர்ச்சி கொள்ளச் செய்யும், பின்பு அன்றாடப் பணிகளை நோக்கித் திரும்பிவிடுவேன், அந்த ஒவியம் …