Day: May 17, 2012

அறியப்படாத தீவின் கதை

ஜோஸே ஸரமாகோ, (José Saramago) நோபல்பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளர், இவரது அறியப்படாத தீவின் கதை மிகச்சிறிய நாவல், 55 பக்கங்களே உள்ளது, கவிஞர் ஆனந்த் மொழியாக்கத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது ஸரமாகோவின் எழுத்துலகம் தனித்துவமானது, முற்றுப்புள்ளியில்லாத நீண்டவாக்கியங்கள், உரையாடல்களில் யார் யாரோடு பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியாத ஊடுபாவும் முறை, வியப்பூட்டும் சம்பவங்கள், மாய நிகழ்வுகள், கவித்துவமான விவரணைகள் என்று வாசகனை எழுத்தாளனுக்கு நிகராக வேலை செய்ய வைப்பவர் ஸரமாகோ, …

அறியப்படாத தீவின் கதை Read More »

திரைப்படக் கலந்துரையாடல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் திரைப்படக் கலந்தாய்வு குழு மாற்றுச்சினிமாவுக்கான கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின் முதல் திரைப்படமாக பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 திரைப்படம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வருகிற 19ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில்,சென்னை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்கத்தில் நடக்கவிருக்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “வழக்கு எண் 18/9” திரைப்படத்தில் திரைக்கதை யுக்திகள், படிமங்கள் என்ற தலைப்பில் நான் …

திரைப்படக் கலந்துரையாடல் Read More »