Month: May 2015

கலாப்ரியா கட்டுரை

பதினெட்டாம் நூற்றாண்டின் மழையை முன் வைத்து சில தூறல்கள்-கலாப்ரியா அவனே ** அந்தச் சிறுகதைக்குள்ளிருந்து அவன் உடலை மீட்டு வர மிகச் சிரமப்பட்டதாக அவன் நண்பர்கள் சொன்னார்கள் அங்கோர்வாட் கோயில் மண்டபச் சிதிலங்களூடே பாம்பெனப் பிதுங்கி நிற்கும் மர வேர்கள் போல அவன் அந்தக் கதையில் அடிக் கோடிட்டிருந்த வரிகள் பற்களைத் துளைத்துக் கொண்டும் கண்குழி மூக்குப் பொந்து என்று கபாலம் முழுக்க இறுக்கிக் கொண்டிருந்ததாயும் அதை எடுக்கவே அதிகச் சிரமமென்றும் அவன் உறவினர்களிடம் சொன்னார்கள் பிய்த்தெடுத்த …

கலாப்ரியா கட்டுரை Read More »

மதுரை கருத்தரங்கம்

வதனம் இலக்கிய அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற சிறுகதை கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் அக்னி நட்சத்திர வெயில் கொதிக்கிறது. இதில் யார் கூட்டத்திற்கு வருவார்கள், தேதியை மாற்றிவிடுங்கள் எனச் சில நண்பர்கள் ஆலோசனைகள் சொன்னார்கள்.ஆனால் நான் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். மதுரையில் இலக்கியத்திற்கென எப்போதும் தனிவாசகர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என உறுதியாக நம்பினேன் ஒரு மாத காலமாகவே  நண்பர் ஆத்மார்த்தி மிகுந்த ஈடுபாட்டுடன் இதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். திருவண்ணாமலை சிறார் இலக்கிய …

மதுரை கருத்தரங்கம் Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 14

லாட்டரி-ஷெர்லி ஜாக்ஸன் தமிழில்: நந்தின் அரங்கன் கோடையின் வெம்மை புதுசாய்ப் பரவத்தொடங்கிருந்த ஜூன் 27ம் தேதியின் காலை வானம் மேகங்களில்லாமல் பளிச்சென்றிருந்தது; பூக்கள் எங்கும் மலர்ந்திருந்தன, புல் அடர் பசுமை பூண்டிருந்தது. பத்து மணி அளவில் தபால் நிலையத்துக்கும் வங்கிக்கும் இடையில் இருந்த ஊர்ப் பொதுவில் அந்த கிராமத்து மக்கள் கூடத் துவங்கினர். சில ஊர்களில் நிறைய பேர் இருந்ததால் அங்கு லாட்டரி இரண்டு நாட்கள் நடக்கும். அதனால் ஜூன் 26ம் தேதியே அதைத் துவங்க வேண்டியதிருக்கும். …

எனக்குப் பிடித்த கதைகள் 14 Read More »

சிறுகதை தொகுப்புகள்

சனிக்கிழமை நடைபெற உள்ள மதுரை கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ள எனது சிறுகதைதொகுப்புகள் 2013 வரையிலான எனது சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக வெளியாகி உள்ளன. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது

கருத்தரங்கு

”எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளுடன் ஒரு நாள்” என்ற தலைப்பில் மதுரையில் 23-ம் சனிகிழமை அன்று   ஒருநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளக் கட்டணமா என  சிலர் கேட்டுள்ளார்கள், நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளலாம், கட்டணம் எதுவுமில்லை எனது பத்து சிறுகதை தொகுதிகள் குறித்து விரிவான உரைகள் நடைபெற உள்ளது, தோழர் எஸ் ஏ பெருமாள், கவிஞர் மனுஷ்யபுத்திரன் கவிஞர்கலாப்ரியா  எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் டாக்டர் பிச்சை எழுத்தாளர் முருகேச பாண்டியன், கவிஞர்யவனிகா ஸ்ரீராம், …

கருத்தரங்கு Read More »

முகாம் நினைவுகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறார் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்மழையின் காரணமாக நிகழ்ச்சியை நடத்த முடியாதோ எனத் தோணியது, ஆனால் சனி காலை முதல் ஞாயிறு மாலை வரை மழையில்லை. முந்திய நாள் பெய்த மழையின் குளிர்ச்சியில் திருவண்ணாமலை குளிர்ந்து ஊட்டி போலாகியிருந்தது. காணுமிடமெல்லாம் தண்ணீர், குளிர்ச்சி, கோடையில் இவ்வளவு மழை என்பது அதிர்ஷடமே. வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து கிளம்பும் போதே நல்ல மழை. சாலை தெரியவில்லை. காரில் திருவண்ணாமலைக்குப் போய்ச் சேர ஐந்து மணி …

முகாம் நினைவுகள் Read More »

பயணம்

சிறார் இலக்கிய முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு துவங்க உள்ளது.  அதில் கலந்து கொள்வதற்காக நாளை திருவண்ணாமலை செல்கிறேன். மே 16 மற்றும் 17 தேதிகளில் திருவண்ணாமலையில் இருப்பேன். மே 18 முதல் 29 வரை மதுரை, ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி, மூணாறு என கோடை விடுமுறைப்பயணம். மே 23 அன்று மதுரையில் எஸ் ராமகிருஷ்ணன் சிறுகதைகளோடு ஒரு நாள் என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. வதனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு   பிரேம்நிவாஸ் …

பயணம் Read More »