2016 December


Archive for December, 2016

2016ல் நான் படித்த புத்தகங்கள்

இந்த ஆண்டில் நிறைய வாசிப்பதற்கு நேரம் கிடைத்தது. இலக்கியம், வரலாறு, சினிமா, தத்துவம், பண்பாட்டு ஆய்வுகள் எனப் பல்வேறு தளங்களில் வாசிக்ககூடியவன் என்பதால் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல் பெரியது. அதில் மிக முக்கியமாகக் கருதும் சில புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். A DISTANT MIRROR: THE CALAMITOUS 14TH CENTURY  – BARBARA W. TUCHMAN AN NA AKHMATOVA – THE WORD THAT CAUSES DEATH’S DEFEAT ATTORNEY AT LAW -M. [...]

குறும்பட வெளியீடு

என் மகன் ஹரிபிரசாத் அண்ணா பல்கலைகழகத்தில் மீடியா சயின்ஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறான். எடிட்டிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவன், என்.எப்.டி.சி நடத்திய படத்தொகுப்பிற்கான சான்றிதழ் படிப்பை முடித்திருக்கிறான். தற்போது ஹரி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளான். அவனும் நண்பர்களும் இணைந்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள். இக்குறும்படத்தின் வெளியீட்டு விழா  ஜனவரி 3 செவ்வாய்கிழமை மா லை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ளது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் முருகதாஸ், இயக்குனர் வசந்தபாலன், திரு சமஸ் ஆகியோர் கலந்து [...]

அழைப்பிதழ்

புதிய புத்தகங்கள்

ஜனவரி 1  ஞாயிறு 2017 மாலை கவிக்கோ அரங்கில் வெளியிடப்படவுள்ள எனது புதிய புத்தகங்கள் உயிர்மை பதிப்பகம் இந்நூல்களை வெளியிடுகிறது. நாவல் சிறுகதைத் தொகுப்பு நவீன இந்திய இலக்கியக்கட்டுரைகள் உலக சினிமா கட்டுரைகள்

புத்தக வெளியீட்டு விழா

ஞானபீடம்

இந்த ஆண்டு ஞானபீடம் விருது  தமிழுக்குக் கிடைக்ககூடும் என்ற தகவல் ஆறுமாதமாகவே உலவியது. அசோகமித்ரன், கி.ராஜநாராயணன் என பரிந்துரைப் பட்டியலில் மூத்த எழுத்தாளர்கள் பலரிருந்தார்கள். ஆனால் நேற்று வங்கமொழிக்கு ஞானபீடம் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. வங்கக் கவிஞர் Shankha Ghosh இந்த ஆண்டிற்கான ஞானபீடம் பெற்றிருக்கிறார். பத்மபூஷண், சாகித்யஅகாதமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளை பெற்றுள்ளவர் சங்கா கோஷ். கன்னடம் எட்டுமுறையும் வங்காளம் ஆறுமுறையும் மலையாளம் ஐந்துமுறையும் ஞானபீடம் பெற்றுள்ளது. ஆனால் ஜெயகாந்தனுக்குப் பிறகு கடந்த [...]

தங்கல்

அமீர்கான் நடித்துள்ள தங்கல் படத்தை நேற்று பார்த்தேன். இந்திய சினிமாவில் அமீர்கான் அளவிற்கு அர்ப்பணிப்புடன் புதிய கதைகளன்களைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகர்கள் குறைவு. இப்படத்தில் அவரது இன்னொரு பரிமாணத்தைக் காணமுடிகிறது. விளையாட்டுச் சார்ந்த படங்களில் கதாநாயகன் அல்லது நாயகி தான் பிரதானமாக இருப்பாள். ஆனால் இதில் அமீர்கான் மையக்கதாபாத்திரம் மட்டுமே. அவர் மல்யுத்தப்போட்டியில் தனது இரண்டு மகள்களை ஈடுபடச்செய்வதும் அவர்கள் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி உச்சத்தை அடைவதுமே கதை. இளம் மல்யுத்த வீரராகவும், ஒரு அப்பாவாகவும், [...]

இருளும் யானையும்

மனுஷ்யபுத்திரனின் இருளில் நகரும் யானை கவிதைத்தொகுப்பை வாசித்து முடித்தேன் எட்வர்டு மஞ்ச் வரைந்த “The Scream” என்ற ஒவியம் நினைவில் வந்து போகிறது. ஒலமிடும் அந்த மனிதனின் முகம் மறக்கமுடியாதது. அது சுயவருத்தத்தில் உருவான ஒலமில்லை. தன் கண்முன்னே உலகம் அழிவுறுவதன் அலறல். தன் இயலாமையை, தவிப்பை, இழப்பை அடையாளப்படுத்தும் குரல். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளும் இதையே செய்கின்றன எளிய நம்பிக்கைகளே மனிதர்களின் பிடிமானம். அவை பொய்யென உணர்ந்த போதும் கூட அவற்றைப் பற்றிக் கொண்டே மனிதர்கள் வாழ்ந்து [...]

இன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்

தமிழ் சிறுகதையின் முகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. இளந்தலைமுறை படைப்பாளிகள் புதிய களன்களில் புதிய கதைமொழியில் சிறப்பான கதைகளை எழுதிவருகிறார்கள். சிறுகதை எழுவதுதை பெரும் சவாலாகக் கருதுகிறவன் என்ற முறையில் பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் வெளியாகிற சிறுகதைகளைத் தேடிப்படித்துவிடுவேன். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளையும் நேரம் ஒதுக்கி வாசித்துவிடுவேன். சிறுகதைகள் தேங்கிவிட்டது, முடிந்துவிட்டது என்பது பொய்யான அபிப்ராயம். சிறுகதையில் புதிய கதைக்கருவை, மொழியை, கதைசொல்லும் முறையைக் கையாளும் பலர் உருவாகி இருக்கிறார்கள்.  என் வாசிப்பிற்குள் வராத பல சிறுகதைகள், எழுத்தாளர்கள் [...]

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள வண்ணதாசன் என்ற கல்யாணி அண்ணனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள் சிறுகதைகளுக்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி. எத்தனையோ அபூர்வமான கதைகளை எழுதிய வண்ணதாசனுக்கு இவ்விருது தாமதமாகவே கிடைத்துள்ளது. மார்கழி சந்தோஷத்தை தரும் மாதம். இந்த மார்கழியை அண்ணனின் விருது மேலும் அழகாக்கியுள்ளது.

Archives
Calendar
December 2016
M T W T F S S
« Nov   Jan »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: