2017 January 2


Archive for January 2nd, 2017

புத்தாண்டு இரவு

புத்தாண்டு இரவை டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர்களுடன்  கொண்டாடினேன்.  நிறைய வாசகர்கள், நண்பர்கள் வந்திருந்தார்கள். சரியாக 12 :05க்கு எனது சிறார் நாவலான ஏழு தலை நகரத்தின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது. நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட  நண்பரும் இயக்குனருமான பாரதி  கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டார். சிறப்பு பிரதியை நண்பர் பால நந்தகுமார் பெற்றுக் கொண்டார். புத்தாண்டு துவங்கியதும் வெளியிடப்பட்ட முதல் புத்தகம் இதுவே என பாரதி கிருஷ்ணகுமார் மகிழ்ச்சியோடு பாராட்டினார். வாசகர் எழுத்தாளர் [...]

நன்றி

நேற்று எனது நான்கு புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். புத்தாண்டின் முதல்நாளில் இவ்வளவு பேர் திரண்டு வந்து நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது. மிகச்சிறப்பாக நூல்களை அச்சிட்டு கொண்டுவந்துள்ள உயிர்மை பதிப்பகத்திற்கும், நண்பர் மனுஷ்யபுத்திரன், அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், வேலூர் லிங்கன், ஒவியர் அமுதோன்  ஆகியோருக்கு அன்பும் நன்றியும் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும், வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தீராத நன்றிகள் ••

Archives
Calendar
January 2017
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: