2017 March


Archive for March, 2017

தேவதச்சனோடு ஒரு நாள்.

கவிஞர் தேவதச்சனின் கவிதைகளைக் கொண்டாடும் விதத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றினை உயிர்மை ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 23 ஞாயிறு அன்று ஆழ்வார்பேட்டையிலுள்ள கவிக்கோ மன்றத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது கருத்தரங்கினை நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன். நான்கு அமர்வுகளாகக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஞாயிறு மாலை தேவதச்சன் கவிதைகளின் முழுத்தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது நிகழ்வு குறித்த விரிவான தகவல்கள் சில தினங்களில் அறிவிக்கபடும். நிகழ்வில் கலந்து கொண்டு தேவதச்சன் கவிதைகள் குறித்த உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ள [...]

மலைமேல் நெருப்பு

அனிதா தேசாயின் Fire on the mountain நாவலை அசோகமித்ரன் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மலைமேல் நெருப்பு சாகித்ய அகாதமி பரிசுபெற்ற நாவல். அசோகமித்ரனின் மொழியாக்கம் வெகுசிறப்பானது. சாகித்ய அகாதமி இந்நாவலை வெளியிட்டுள்ளது. மலைப்பிரதேசமான கசவுலியிலிருந்த கரிக்னானோவில் குடியிருக்கிறாள் நந்தா கவுல். வயதானவள். மேல்தட்டுவர்க்கத்தைச் சேர்ந்தவள். கர்னலின் மனைவி. தேவதாரு மரங்கள் அடர்ந்த பகுதியில் உள்ளது அவளது வீடு. முதுமையைத் தனியே கழிக்கும் அவளுக்கு ஒரு நாள் ஒரு தபால் வந்து சேருகிறது. அதில் அவளது கொள்ளுப் [...]

கவிஞர் திருலோக சீதாராம் விழா

ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை கவிஞர் திருலோக சீதாராம் நூற்றாண்டுவிழாவை  ஏப்ரல் 1 சனிக்கிழமை மாலையில்  கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். நிகழ்வு நடைபெறுமிடம் : பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி ராமகிருஷ்ணா மடம் சாலை மயிலாப்பூர் நேரம்:  மாலை 6 மணி அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• •••

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான எழுத்தாளர் அசோகமித்ரன் இன்று (23.03.2017 ) காலமானார். சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை. சினிமாவின் மறுபக்கம் பற்றி அவர் எழுதிய கரைந்த நிழல்கள் நாவல் தமிழின் மகத்தான படைப்பு. ஒற்றன், தண்ணீர், மானசரோவர் எனத் தனது முக்கிய நாவல்களின் வழியே தமிழ் புனைவெழுத்தின் உச்சங்களை அவர் படைத்துக் காட்டியுள்ளார். கணையாழியில் அவர் ஆசிரியராக இருந்த நாட்களில் நான் எழுதத் துவங்கினேன். எனது முதல்கதையைத் தேர்வு [...]

தனுஷ்கோடி

மோவி என்ற மதுரையைச் சேர்ந்த பத்திரிகையாளர்  https://thetimestamil.com இணையத்தில் எழுதியுள்ள குறிப்பிது. ••• மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் திரு ஆத்மனாதன். . சில ஆண்டுகளாக தனுஷ்கோடி பற்றிய தீவிர ஆய்வில் இருந்தார். இன்று தனது ஆய்வுக்கட்டுரையை மதுரை காமராஜர் பல்கலையில் சமர்பித்துள்ளார். அவருடன் உரையாடிய போது •• அன்று அதிகாலை மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. பாம்பன் – தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயில் பாம்பன் ரயில் நிறுத்ததில் நின்றுகொண்டிருந்தது. [...]

பிரபஞ்சனைக் கொண்டாடுவோம்

ஐன்ஸ்டீன் கடிதங்கள்

உலககெங்கும் பள்ளி மாணவர்களின் லட்சியமனிதர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் . ஜீனியஸ் என்பதற்கு அடையாளமாக ஐன்ஸ்டீனைத் தான் காட்டுகிறார்கள்.  தீவிர வாசிப்பில் ஈடுபாடு கொண்ட ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை விரும்பிப் படித்தார். அவரது புகழ்பெற்ற மேற்கோள் “Dostoevsky gives me more than any scientist“ ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியைப் புரிந்து கொண்ட விதம் பற்றி ஆராய்கிறது B. G Kuznetsov எழுதிய Einstein and Dostoyevsky புத்தகம் பள்ளி மாணவர்கள் ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதங்களும் அவற்றிற்கு அவர் எழுதிய [...]

செங்கல்பட்டில்

மார்ச் 11 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு செங்கை பாரதியார் மன்றம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இடம்  : ஹோட்டல் கணேஷ் பவன் செங்கல்பட்டு நாள் : 11.03.2017 மாலை 5 மணி தலைப்பு  :  கற்றுத்தரும் கதைகள்

புத்தகக் கொடை

Archives
Calendar
March 2017
M T W T F S S
« Feb   Apr »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: