2017 May


Archive for May, 2017

தடம் இதழில்

இம்மாத தடம் இதழில் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் விரும்பிய செவ்வியல் இலக்கியங்கள். எழுதிய கவிதைகள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன் ••

இலக்கியப் பெட்டி

குறும்பட இயக்குனரும் சிறந்த இலக்கியவாசகருமான பவித்ரன் இலக்கியப்பெட்டி என்ற இணைய காணொளித் தொடர் ஒன்றை பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் சிறந்த புத்தங்களைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்துகிறார்.  எனது சமீபத்திய நாவல் மற்றும் கட்டுரைத் தொகுப்பை சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். பவித்ரனுக்கு என் அன்பும் பாராட்டுகளும் இலக்கியப் பெட்டி (Literature Box ) பதின் – எஸ். ராமகிருஷ்ணன் (paththin – S Ramakrishnan) https://youtu.be/IBYY16N3RxE நிலவழி – எஸ். ராமகிருஷ்ணன்; இந்திய இலக்கிய ஆளுமைகள் https://youtu.be/VIMjy1-qThI

ஹரி பிரசாத் – குறும்படம்

எனது மகன் ஹரிபிரசாத் இயக்கியுள்ள குறும்படம் இணைப்பு https://youtu.be/gsG5ct3ITNg

எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்கள்

எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்களாக  பார்த்துக் கொண்டுவருகிறேன். பெரும்பான்மையான படங்கள் மேலோட்டமாக உருவாக்கபட்டிருக்கின்றன. எழுத்தாளன் என்ற பிம்பம் எப்போதுமே எவரையும் புரிந்து கொள்ளாதவராக, குடும்பத்தை வெறுப்பவராக, உறவுகளில் சிக்கல் கொண்டவராகவே சித்தரிக்கபடுகிறது. எழுத்தாளர்களைப் பற்றிய படம் என்றபோதும் இவை முதன்மையாக எழுத்தாளனின் காதலைப் பேசுபவை. இந்தத் திரைப்படங்களைப் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். 1.     பாப்லோ நெருதாவைப்பற்றிய திரைப்படம் Neruda / 2016 / directed by Pablo Larraín. 2.     ஆஸ்கார் ஒயில்ட் பற்றிய [...]

எழுத்தில் வாழ்பவர்கள்

ஒவியர்கள், எழுத்தாளர்கள், இசை மற்றும் நடனக்கலைஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஆங்கிலப் படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் ஒரு பதிப்பாசிரியரின் வாழ்க்கையை, அவரது இலக்கிய ஆர்வத்தை பற்றிப் படம் எதுவும் வெளியானதில்லை.  அவ்வகையில் GENIUS தனித்துவமான படமே. Michael Grandage இயக்கியுள்ள இப்படம் Max Perkins என்ற Scribners பதிப்பக எடிட்டருக்கும் தாமஸ் வுல்ப் என்ற அமெரிக்க எழுத்தாளருக்குமான உறவைப் பற்றியது.  அமெரிக்க இலக்கியத்தின் நிகரற்ற நாவலாசிரியர் தாமஸ் வுல்ப் என்று புகழ்ந்து போற்றுகிறார் வில்லியம் பாக்னர். தாமஸ் [...]

காலம் எழுப்பும் கேள்வி

ஈஸ்கிலஸ் மற்றும் சோபாக்ளிஸ் எழுதிய கிரேக்கநாடகங்களை முழுமையாக மொழியாக்கம் செய்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். இவர் கோவை வானொலி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். சில காலம் சென்னை பண்பலையிலும் பணியாற்றியிருக்கிறார். கிரேக்க இலக்கியங்களை, சிந்தனைகளை வாசிப்பதற்காகத் தன் வாழ்நாளை செலவு செய்துவருபவர் ஸ்டாலின். கிரேக்க அழகியல். சிந்தனைகள், நாடகங்கள் எனப் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். வரலாற்று மாணவரான ஸ்டாலின் தனது விருப்பத்தின் பெயரில் கிரேக்க இலக்கியங்களைத் தானே முனைந்து கற்றுக் கொள்ளத்துவங்கி இன்று [...]

பாராட்டுகள்

பள்ளி பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் முறை கைவிடப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்வித்துறை வரலாற்றில் இது ஒரு மைல்கல். மிக அவசியமான மாற்றம். முதல் மதிப்பெண் பெறவைப்பதற்காகக் கோழிப்பண்ணை போலத் தனியார் பள்ளிகள் பெருகிவந்த சூழலில் இந்த மாற்றம் வரவேற்கவேண்டியது மதிப்பெண்ணைக் காட்டி மாணவர்களைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்த முறை ஒழிக்கப்பட்டது சிறப்பானது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்த பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ் மிகுந்த பாராட்டிற்குரியவர் இவர் கல்வித்துறை செயலராகப் பதவியேற்ற [...]

புதிய சாளரம்

சென்னை டிஎல்எப்பில் இயங்கி வரும் Nationstar Mortgage என்ற அமெரிக்க நிறுவனத்தில் புத்தக வாசிப்பை உருவாக்கும் விதமாக ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்த இப்படியொரு கூட்டம் நடப்பது இதுவே முதன்முறை என்றார்கள். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் Nationstar Mortgage ல் பணியாற்றும் நண்பர் நரேந்திரன் . தீவிர இலக்கிய வாசகரான அவரது முயற்சியின் காரணமாகவே நான் அழைக்கப்பட்டேன். Nationstar Mortgage அலுவலகம் இதற்கான அனுமதி அளித்ததோடு [...]

PRIDE OF TAMILNADU

ரவுண்ட் டேபிள் இந்தியா தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலிருந்தும் அதன் சாதனையாளர்களைத் தேர்வு செய்து  PRIDE OF TAMILNADU என்ற விருதை வழங்குகிறார்கள். அதில் இலக்கியப் பிரிவில் எனக்கு விருது வழங்கப்பட்டது. PRIDE OF TAMILNADU 2017 விருது வழங்கும் விழா சென்னை பெதர்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

காதலின் நெருப்பு

ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தினை மையமாகக் கொண்ட Tanna என்ற திரைப்படத்தை இரவு பார்த்தேன். படம் Nauvhal மொழியில் உருவாக்கபட்டிருக்கிறது. படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அனைவரும் பழங்குடி மக்களே. Ten Canoes என்ற ஆஸ்திரேலியத் திரைப்படத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அற்புதமான படம். Tanna அதை நினைவுபடுத்தியது படப்பிடிப்புக் குழு ஏழு மாதங்கள் காட்டிற்குள்ளாகவே தங்கி படமாக்கியிருக்கிறார்கள். நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத வனவாசிகளுக்குப் பயிற்சி முகாம் நடத்தி அங்கேயே ஒரு கதையை உருவாக்கி திரைக்கதை [...]

Archives
Calendar
May 2017
M T W T F S S
« Apr   Jun »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: