2017 July


Archive for July, 2017

தேவதச்சனுக்கு விருது

உயிர்மை வெளியிட்டதேவதச்சனின் ‘ மர்ம நபர்’ கவிதைத் தொகுப்பிற்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது. அவருக்கு என் அன்பும் வாழ்த்துகளும் சென்னை ராயப்பேட்டைஒய் எம் சி. ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வரும் 31 ஆந்தேதி இந்த விருது வழங்கப்படும். மர்ம நபர் கவிதைத்தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் ( 206- 207) கிடைக்கிறது ••

வாசிப்பில் இன்று -1

இன்று காலை Anthony Burgess எழுதிய Abba Abba நாவலை வாசித்தேன். 120 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல் ** கீட்ஸின் மறுமொழி. ஆன்டனி பர்கஸ் எழுத்தாளர்களைப் பற்றி நாவல்கள் எழுதக்கூடியவர். இவர் ஷேக்ஸ்பியர் , மார்லோ பற்றி எழுதிய நாவல்கள் சுவாரஸ்யமானவை. புகழ்பெற்ற கவிஞரான கீட்ஸ் மற்றும் பெல்லி குறித்து இவர் எழுதிய சிறுநாவல் Abba Abba 1821 பிப்ரவரி 23ல் தனது இறந்து போனார் கீட்ஸ், அப்போது அவரது வயது 25. காசநோயால் பாதிக்கபட்ட [...]

புதிய பதிப்புகள்

இடக்கை, பதின் ஆகிய நாவல்களின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. ராயப்பேட்டையில் நடைபெறுகிற புத்தக கண்காட்சியில் வாங்கிக் கொள்ளலாம் சென்னை புத்தகக் கண்காட்சி . ராயப்பேட்டை ஒஎம் சி ஏ உயிர்மை அரங்கு எண் 206-207 •• ஔரங்கசீப்பின் இறுதிநாட்களை மையப்படுத்தி மத்திய இந்தியாவின் அரசியலைப் பேசும் நாவல். நீதிமறுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்கிறது. பதின் வயதின் மறக்கமுடியாத நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் புதுவகை நாவல்.

அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும்

தனிமையின் துயரத்தையும் , பிரிவின் ஏக்கத்தையும், காதலின்வலியையும் , பொருந்திக் கொள்ளமுடியாத தினசரி வாழ்வின் மீதான சலிப்பையும் பேசுபவை உமா வரதராஜனின் சிறுகதைகள். பேருந்து நிலையத்தின் பரபரப்பிற்கு ஊடாகத் திடீரெனக் கேட்கும் புல்லாங்குழல் நம்மை ஈர்ப்பது போல இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளுக்கு இடையே அன்பின் பாடலை ஒலிக்கின்றன.. உமா வரதராஜனின் அரசனின் வருகை சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஈழச்சிறுகதை வரலாற்றில் அதற்குத் தனியிடம் உண்டு. அவரது சிறுகதைகள் சிலவற்றைத் தனியே வாசித்திருந்த போதும் மொத்தமாக அவரது 16 [...]

மதுரையில்

மதுரையில் நடைபெற்ற கவிஞர் கலாப்ரியா நிகழ்வு குறித்த பதிவுகள்

வேண்டுகோள்

என்னைப்பற்றிய விக்கிபீடியா ஆங்கிலப்பக்கம் போதுமான தகவல் எதுவுமின்றி உள்ளது. அதை மேம்படுத்த விக்கிபீடியா ஆங்கிலப் பங்களிப்பாளர்களில் எவராவது முன்வந்தால் உதவியாக இருக்கும். விருப்பமானவர்கள்  எவரும் அந்த பக்கத்தை மேம்படுத்தலாம் என மென்பொருள்துறையைச் சார்ந்த நண்பர் கூறுகிறார். விருப்பமுள்ளவர்கள் இதில் உதவி செய்தால் நலமாக இருக்கும். எனது புத்தகங்கள் மற்றும் நேர்காணல்கள் குறித்த தகவல்கள் தேவை எனில் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் ** https://en.wikipedia.org/wiki/S._Ramakrishnan ** For Your Ref. http://www.goodreads.com/author/show/360925.S_Ramakrishnan http://www.imdb.com/list/ls074784633/ http://www.livemint.com/Politics/MCbs7k2yiwKPDs77DnEBKN/Eminent-Tamil-writer-Ashokamitran-dies-at-86.html The Tenth Rasa: [...]

எழுத்தாளனின் உலகம்

இவை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்கள் (சில வீடியோவில் சப்டைட்டில் வசதி உள்ளது. ) Profile of a Writer: Jorge Luis Borges https://youtu.be/fAM2NJnv3Dk?list=PLE1jl6VUbLP4o9K0fxXEcodc_zVxeMPi3 Lermontov. Biographical Documentary Film https://youtu.be/eis530WT7v0 The Childhood of Maxim Gorky https://youtu.be/ADcqytnvZls Virginia Woolf Documentary https://youtu.be/2Hnlsh8WyPE?list=PLE1jl6VUbLP4o9K0fxXEcodc_zVxeMPi3 Documentary on Ernest Hemingway https://youtu.be/mv5ewz4YE1g Ray Bradbury – Story of a Writer https://youtu.be/XESDRP82png Biography: John Steinbeck https://youtu.be/7i2CDqBo9VU George Orwell: A Life [...]

தோற்கடிக்கப்பட்டவனின் புன்னகை

“When I know your soul, I will paint your eyes.”- Amedeo Modigliani மோடிக்லியானி (Modigliani )புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் . 35 வயதில் இறந்து போனவர். மரணத்திற்குப் பிறகே மோடிக்லியானி பெரும்புகழை அடைந்தார். பாப்லோ பிகாசோவிற்கு இணையான திறமை கொண்டிருந்த போதும் அங்கீகாரம் கிடைக்காமலே இறந்து போனார். பெருங்குடிகாரர். போதை பழக்கம் கொண்டவர். இவரது காதல் வாழ்க்கையையும், பாரீஸில் நடைபெற்ற ஒவியப்போட்டியில் கலந்து கொள்வதற்காக முயன்ற நிகழ்வினையும் மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ளது மைக் டேவிஸ் [...]

கவிதை காணுங்கள்

உலகப்புகழ்பெற்ற கவிஞர்களின் வாழ்க்கை மற்றும் கவிதைகள் குறித்த ஆவணப்படங்கள் கவிஞர் ரூமியின் வாழ்வு மற்றும் கவிதைகள் பற்றி அறிந்து கொள்ள Rumi documentary – English https://youtu.be/4H5UxOANuR8 நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதா குறித்து Pablo Neruda: “The Greatest Poet of the 20th Century In Any Language https://youtu.be/mtkG2gyFblg உலகப்புகழ்பெற்ற கவிஞர் யஹுதா அமிக்காய் குறித்து A Celebration of Yehuda Amichai https://youtu.be/OIf9EPXNfSU போலந்துக் கவிஞர் செஸ்லாவ் மிலோஸ் [...]

ஆசிய இலக்கியம்

சமகால ஆசிய இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான இதழ். சிறுகதைகள். கவிதைகள் சிறப்பாக உள்ளன. http://www.asiancha.com/content/blogcategory/365/618/

Archives
Calendar
July 2017
M T W T F S S
« Jun   Aug »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: