2017 July 9


Archive for July 9th, 2017

சுட்டிவிகடன்

இன்று (9.07.2017) காலை அண்ணா பல்கலைகழக அரங்கில் சுட்டிவிகடன் சார்பில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்காக கதைகள் எழுதுவது எப்படி என்பது குறித்து  உரையாற்றினேன் தமிழகம் முழுவதுமிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டார்கள். விஷ்ணுபுரம் சரவணன், விழியன், வேலு சரவணன், கணேசன் கோதண்டராமன் போன்ற நண்பர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது புகைப்படம் நன்றி விழியன்

அன்பும் நன்றியும்

நேற்று டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெற்ற எனது இரண்டு நூல்களின் விமர்சனக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பவித்ரன் மற்றும் சுந்தரபுத்தன் இருவரும் நிலவழி பற்றி விரிவாகப் பேசியது சந்தோஷம் அளித்தது. அரங்கு நிறைய இளைஞர்கள். பலரையும் முதன்முறையாகப் பார்க்கிறேன். இத்தனை பேர் இலக்கியத்தைத் தீவிரமாக வாசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது சைக்கிள் கமலத்தின் தங்கை சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எனது கதைகளின் உலகம் பற்றி மிக நுட்பமாக எடுத்துப் பேசினார் அகரமுதல்வன். அது போலவே கார்த்திக் புகழேந்தியும் தொகுப்பில் தனக்கு எந்தக் [...]

நட்சத்திரங்களுக்கு இடையே

அந்த்வான் து செந்த் எக்சுபெரி மிகச் சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர். இவர் எழுதிய குட்டி இளவரசன் எனக்கு மிகவும் பிடித்த நாவல், பலமுறை வாசித்திருக்கிறேன். அந்த நாவலின் ஊற்றுக்கண்ணைப் போன்றுள்ளது காற்று, மணல், நட்சத்திரங்கள் என்ற எக்சுபெரியின் விமானப்பயணம் பற்றிய நூல். சமீபத்தில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் குட்டிஇளவரசனை விடவும் சிறப்பானது. வெ. ஸ்ரீராம் வெகுஅற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார். பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழிற்கு மொழியாக்கம் செய்துவருபவர் வெ. ஸ்ரீராம். இவரது சேவையைப் பாராட்டி ஃப்ரான்ஸ் அரசு [...]

Archives
Calendar
July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: