2017 July 10


Archive for July 10th, 2017

கவிதை காணுங்கள்

உலகப்புகழ்பெற்ற கவிஞர்களின் வாழ்க்கை மற்றும் கவிதைகள் குறித்த ஆவணப்படங்கள் கவிஞர் ரூமியின் வாழ்வு மற்றும் கவிதைகள் பற்றி அறிந்து கொள்ள Rumi documentary – English https://youtu.be/4H5UxOANuR8 நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதா குறித்து Pablo Neruda: “The Greatest Poet of the 20th Century In Any Language https://youtu.be/mtkG2gyFblg உலகப்புகழ்பெற்ற கவிஞர் யஹுதா அமிக்காய் குறித்து A Celebration of Yehuda Amichai https://youtu.be/OIf9EPXNfSU போலந்துக் கவிஞர் செஸ்லாவ் மிலோஸ் [...]

ஆசிய இலக்கியம்

சமகால ஆசிய இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான இதழ். சிறுகதைகள். கவிதைகள் சிறப்பாக உள்ளன. http://www.asiancha.com/content/blogcategory/365/618/

பயண நல்கை

சாகித்ய அகாதமி எழுத்தாளர்களுக்கான பயண நல்கை குறித்து அறிவித்துள்ளது. நாற்பது வயதிற்குட்பட்ட எழுத்தாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எந்த மாநிலத்திற்கு பயணம் போக விரும்புகிறார் என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்பிக்க வேண்டும் ரூ15000 பயண  நிதியாக அளிக்கபடும். இது குறித்த விபரங்கள்  அறியவும் , விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும் வேண்டிய முகவரி Regional Secretary Sahitya Akademi Guna Buildings II Floor, No. 443(304) Anna Salai, Teynampet Chennai-600018 Phone : 044-24311741 [...]

கலாப்ரியாவின் படைப்புலகம்

அந்திமழை இதழ்  சார்பில் கவிஞர்  கலாப்ரியாவின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கு  நடைபெறயிருக்கிறது மதுரையில் வருகின்ற சனிக்கிழமை ( 15.07.2017 ) மாலை 5 30 மணிக்கு பிரேம் நிவாஸ் ஹோட்டல் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில்  கலந்து கொண்டு நான் சிறப்புரை ஆற்ற இருக்கிறேன். வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன் ••

பகற்திருடர்கள் சங்கம்

அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமானதாகயில்லை. வைத்தியர் பலராமன் தெரு என்ற ஒன்றே அங்கேயில்லை. பிறகு எப்படி 424 என்ற கதவிலக்கத்தைக் கண்டுபிடிக்கமுடியும். எட்டரை மணியிலிருந்து நான் தேனாம்பேட்டைக்குள் சுற்றிக் கொண்டேயிருந்தேன். தேனாம்பேட்டைக்குள் இன்னும் ஒரு கிராமத்தின் மிச்சம் போல இருக்கிற தெருக்கள் இருக்கின்றன. வீதியில் எருமை மாடுகள் நடமாடுகின்றன. வேப்பமரங்களும், அம்மன் கோவில்களும் மோர்விற்பவர்களும் சுண்ணாம்புகல் விற்பவர்களும், தேள்கடிக்கு பச்சிலை மருந்துகட்டுபவர்களும் இன்றுமிருக்கிறார்கள் பழைய டிரிடில் பிரஸ், நாடி ஜோதிடம் பார்க்கிறவர்கள். தட்டுபிரியாணிகடை, ரப்பர் ஸ்டாம்பு செய்பவர்கள், [...]

நேர்காணல்

வட அமெரிக்கத் தமிழர்களின் குரலை ஒலிக்கும் இதழாக வெளிவரும் 8கே எக்ஸ்பிரஸ் ஜுலை இதழில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது.

கடவுளின் நாக்கு

தி இந்து நாளிதழில் செவ்வாய்கிழமை தோறும் நான் எழுதிவரும் கடவுளின் நாக்கு என்ற பத்தி ஒராண்டினைக் கடந்து செல்கிறது. இதைச் சாத்தியமாக்கிய தி இந்து ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், மானா பாஸ்கர் ஆகியோருக்கு அன்பும் நன்றியும். கல்வி நிலையங்களில் இந்தப் பத்தியை மாணவர்கள் கூடி வாசிக்கிறார்கள். ஆசிரியர்கள் பலரும் வகுப்பறையில் பகிர்ந்து கொள்கிறார்கள். நீதியரசர் துவங்கி சலூன்காரர் வரை பல்தரப்பட்டவர்கள் இதை வாசித்துப் பாராட்டுகளைத் தெரிவித்து வருவது சந்தோஷம் அளிக்கிறது. பத்தி குறித்து ஒவ்வொரு [...]

Archives
Calendar
July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: