Archive for October, 2017
ஷார்ஜாவில்
ஷார்ஜா புத்தக கண்காட்சியில் நவம்பர் 3 வெள்ளிகிழமை இரவு 8 : 30 மணிக்கு உரையாற்றுகிறேன்
அஞ்சலி
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி இன்று காலை காலமானார். விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாடு என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்த மேலாண்மை பொன்னுசாமி தினமும் அவரது கடைக்குரிய பலசரக்குப் பொருட்கள் வாங்குவதற்காக விருதுநகருக்கு வருவார். அந்த வேலை அரைமணி நேரத்தில் முடிந்துவிடும். நானும் நண்பர்களும் அவருடன் இணைந்து டீ குடித்தபடியே பலமணி நேரம் இலக்கியவிவாதம் செய்வோம். சினிமா பார்ப்போம். கிராம வாழ்வினை அசலாகப் பதிவு செய்த எழுத்தாளர் மேலாண்மை. கதைகள் எழுதி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறார். சில [...]
கவிதையின் நாயகி
The heart asks pleasure first and then excuse from pain. – Emily Dickinson அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்சன் பற்றி A Quiet Passion திரைப்படத்தினைப் பார்த்தேன். படத்தின் ஒரு காட்சியில் பாதிரியார் எமிலியின் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை நடத்துகிறார். எமிலியின் தந்தையும் சகோதரியும் தாயும் மண்டியிட்டு பிரார்த்தனைக்குத் தயார் ஆகும் போது எமிலி மட்டும் மண்டியிட்டு பிரார்த்திக்க விரும்பவில்லை என மறுக்கிறார். கடவுளிடம் உன் பாவங்களுக்காக மண்டியிட வேண்டியதில்லையா எனப் பாதிரியார் [...]
முதல் காப்பி
புதிய சிறுகதை •• பேருந்து நிலையத்தின் மேற்கிலிருந்தது ரமண விலாஸ். சின்னஞ்சிறிய உணவகமாகத் துவங்கி பின்பு அருகிலுள்ள சைக்கிள் நிறுத்துமிடத்தையும் சேர்த்து வாங்கிப் பெரிது பண்ணியிருந்தார்கள். ரமண விலாஸின் சிறப்பு “காபி“. அதுவும் பசும்பால் காபி. அதிகாலையில் அந்தக் காபி குடிப்பதற்கென்றே நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். நுரை ததும்ப பித்தளை டவரா செட்டில் தரப்படும் ஃபில்டர் காபியின் சுவைக்கு நிகரே கிடையாது. பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட [...]
தமிழ் ஸ்டுடியோ நிகழ்ச்சி
தமிழ் ஸ்டுடியோ அருண் மிகுந்த அர்ப்பணிப்புடன் மாற்றுசினிமா குறித்த கலந்துரையாடல், பயிலரங்கு. சிறப்பு நிகழ்ச்சிகள், திரையிடல், விருது வழங்குவது எனச்செயல்பட்டு வருகிறார். சினிமா புத்தகங்களுக்காகவே ப்யூர் சினிமா என்ற அங்காடி ஒன்றினையும் நடத்தி வருகிறார். அவரது தீவிரமான செயல்பாடும் ஆர்வமும் மிகுந்த பாராட்டிற்குரியது. தமிழ் ஸ்டுடியோ சார்பில் படிமை இயக்கம் துவங்கப்பட்ட போது அதற்கு சிறப்பு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். பாலுமகேந்திராவிற்கு விழா எடுத்த போது அதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருக்கிறேன். தமிழ் சினிமா நூற்றாண்டினைச் சிறப்பிக்கும் [...]
வெறும் பணம்
அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது. `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன் `கோகிலம்` என்றாள் `கோகிலாவா` என மறுபடியும் [...]
கற்பனைச் சேவல்
சிறுகதை அந்த மூன்று பேரும் தன்னிடமிருக்கும் சண்டைச்சேவலை விலை பேசி வாங்கிப் போவதற்காக வந்திருப்பதாகவே காயம்பு நம்பினார் மூவரும் வெள்ளை வேஷ்டி கட்டியிருந்தார்கள்.அதில் ஒருவருக்குத் தலை நரைத்துப் போயிருந்தது.வயது எப்படியும் ஐம்பதுக்கும் மேலிருக்கும்.இன்னொரு ஆள் கோடு போட்ட சட்டையை மடித்துவிட்டிருந்தான்.திருக்கை மீசை வைத்திருந்தான்.மூன்றாவது ஆள் குள்ளம்.அவன் கையில் ஊதா நிற கைப்பை ஒன்றிருந்தது.அவர்களைப் போன்ற வெளியாட்கள் இந்தக் கிராமத்திற்கு எப்போதாவது தான் வருகிறார்கள். காயாம்பு வேம்படி நிழலில் கிடந்த கல்லில் உட்கார்ந்தபடியே அவர்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.காயாம்புவிற்கு [...]
பதின் நாவல் குறித்து
பதின் – எஸ். ராமகிருஷ்ணன் கணேஷ்பாபு, சிங்கப்பூர் உலகளவில் குழந்தைகளுக்கான நாவல்கள் எப்போதுமே அதிகளவில் வாசிக்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும், உடனடியான ஒரு வெளிச்சத்துக்கு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெரியவர்களுக்கான புனைவுகளை விடவும் சிறார்களுக்கான புனைவுகள் பரவலாக கவனிக்கப்படுவதும் நம் சூழலில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சிறார் நாவல் பற்றிய விமர்சனமும், அதைக் குறித்த விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழில் எழுதப்பட்ட சிறார் நாவல்களுக்கு இது நிகழ்கிறதா என்று பார்க்கையில் [...]
போர்ஹெஸ்
போர்ஹெஸ் சிறுகதைகள், கட்டுரைகள் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பினை யாவரும் பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்துள்ளது. போர்ஹெஸை தமிழுக்கு அறிமுகம் செய்து அவரது கதைகள் கவிதைகளை தொடர்ந்து மொழியாக்கம் செய்தவர் கவிஞர் பிரம்மராஜன். அவரது மீட்சி சிறுபத்திரிக்கை உலகில் மிகவும் தனித்துவமான இதழாகும். உலக இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்தததில் மீட்சி பெரும்பங்கு வகித்திருக்கிறது. ஆங்கிலப் பேராசிரியரான பிரம்மராஜன் சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், குற்றாலம் கவிதை பட்டறையை கலாப்ரியாவோடு இணைந்து நடத்தியவர். பிரம்மராஜன் தொகுத்த போர்ஹெஸ் சிறுகதைகள் முன்னதாக ஸ்நேகா [...]
தீபாவளி மலரில்
ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் எனது சிறுகதை பாங்கிணறு வெளியாகியுள்ளது.