2017 November


Archive for November, 2017

அமேசானில்

இரண்டு நாட்களுக்கு முன்பாக எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் போனில் அழைத்து அமேசானில் எனது புத்தகங்கள் கிடைக்கிறதா என விசாரித்தார். இல்லை என்றதும் நானே நேரில் வந்து மின் புத்தகமாக பதிப்பிக்க  உதவி செய்கிறேன் என்று கூறினார். சென்னைக்கு வந்த நாட்களில் இருந்து மாமல்லனுடன் பழகியிருக்கிறேன். அவரது கோபத்தைப்  போலவே அன்பும் தீவிரமானது.  மாமல்லன் சிறுகதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.  தனது விமர்சனங்களை, கருத்துகளை எவ்விதமான தயக்கமும் இன்றி நேரடியாக முன்வைப்பவர். அது பாராட்டிற்குரிய விஷயம். முன்பு டிரைவ் [...]

எலியின் பாஸ்வேர்டு

தேசாந்திரி பதிப்பக வெளியீடு – 6 சிறார்களுக்காக எழுதியுள்ள கதை. பாம்புகளிடமிருந்து தங்களை பாதுகாக்க கொள்ள எலிகள் ஒன்று கூடி தங்கள் வளையை டிஜிட்டல் கதவு ஒன்றைக் கொண்டு மூடிவிட திட்டமிட்ட கதை. அட்டை வடிவமைப்பு ஹரி பிரசாத் ••

காட்சிகளுக்கு அப்பால்

தேசாந்திரி பதிப்பக வெளியீடு- 5 கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் கண்ட உலக சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு அட்டை வடிவமைப்பு ஹரிபிரசாத் •••

எழுத்தே வாழ்க்கை

தேசாந்திரி பதிப்பக வெளியீடு- 4 தி இந்து நாளிதழில் வெளியான எனது குடும்பம், நண்பர்கள், இலக்கிய வாழ்க்கை குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. அத்துடன் பல்வேறு இதழ்களில் எழுதிய எனது வாழ்க்கை குறித்த கட்டுரைகளின் தொகுப்பு அட்டை வடிவமைப்பு ஹரி பிரசாத் ••

உலகை வாசிப்போம்

தேசாந்திரி பதிப்பக வெளியீடு -3 உலக இலக்கியம் குறித்து தீராநதியில் எழுதிவந்த தொடரில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. அட்டை வடிவமைப்பு ஹரிபிரசாத்

நாவலெனும் சிம்பொனி

தேசாந்திரி பதிப்பக புதிய வெளியீடு -2 தமிழ் மற்றும் பிறமொழி நாவல்கள் குறித்த கட்டுரைகளும் இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளுக்கும் கொண்ட தொகுப்பு. அட்டை வடிவமைப்பு  : ஹரிபிரசாத்

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு. 16 சிறுகதைகள் உள்ளன. சைக்கிள் கமலத்தின் தங்கை  சிறுகதைத்தொகுப்பிற்கு பின்னால் வெளியான எனது சிறுகதைகளைக் கொண்டது எனது மகன் ஹரிபிரசாத் அட்டையை வடிவமைப்பு செய்துள்ளான். தேசாந்திரி பதிப்பகத்தின் முதல்நூலாக வெளிவருகிறது

துவக்கவிழா

நான் புதிதாக துவங்கியுள்ள தேசாந்திரி பதிப்பகத்தின் துவக்கவிழா டிசம்பர் 25 திங்கள்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது. இதில் எனது புதிய நூல்கள் யாவும் வெளியிடப்படவுள்ளன. இதுவரை பல்வேறு பதிப்பகங்களில் வெளியாகிவந்த எனது நூல்கள் யாவும் இனி தேசாந்திரி பதிப்பகம் மூலம் மட்டுமே வெளியாகும்.  வேறு பதிப்பகங்கள் எனது நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனது புத்தகங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்கள். நண்பர்கள், புத்தக கடை உரிமையாளர்கள். ஊடகம் மற்றும் இணையதள [...]

வான்கோவின் கடைசி கடிதம்

ஓவியர் வான்கோவின் (Vincent vanGogh)வாழ்க்கை குறித்துச் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் LOVING VINCENT. திரையில் இப்படத்தைக் காண்பது பரவசமூட்டுகிறது. வான்கோவின் ஒவியங்கள் உயிர்பெற்று கண்முன்னே கடந்து போகின்றன. அவர் வரைந்த உருவங்கள் நம்முன்னே நடமாடுகிறார்கள். வான்கோவின் சீற்றமிக்கக் கோடுகள் திரையில் அலைபோல எழுந்து மறைகின்றன. வான்கோவின் நீலம் வான்கோவின் மஞ்சள், சிவப்பு என அவரது வண்ணக்கலவைகளே படத்தின் ஆதாரவண்ணங்கள். ஒவியத்திலிருந்தே ஒரு திரைப்படத்தை உருவாக்கமுடியும் என்ற நவீன தொழில்நுட்பத்தின் சாதனைப்படைப்பு இதுவென்பேன். அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் [...]

அறம் வென்றது

கோபி நயனார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அறம் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். அற்புதம். தமிழ்சினிமா பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படத்தை இயக்கியிருக்கிறார் கோபி நயினார். பொழுதுபோக்குத் திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற மாயையை உடைத்து அரங்கு நிரம்பி வழிகிறது. கடைசிக்காட்சியின் போது அருகிலுள்ள இருக்கையில் இருந்தவர்கள் பீறிடும் கண்ணீரை துடைக்கமுடியாமல் விசும்பினார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திரையில் வெளிப்படும் உண்மை. திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை. மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து [...]

Archives
Calendar
November 2017
M T W T F S S
« Oct   Dec »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Subscribe

Enter your email address: