2017 November


Archive for November, 2017

கடைசி வைஸ்ராய்

Gurinder Chadha இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்Viceroy’s House. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். லண்டனில் வசிக்கும் குரிந்தர் Bend It Like Beckham, Bride and Prejudice போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர். இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் தேசப்பிரிவினையை எதற்காக உருவாக்கினார். அவர் முன்னிருந்த சவால்கள் எவை என்பதையே இப்படம் சித்தரிக்கிறது. சிறந்த கலைவடிவமைப்புடன் நேர்த்தியான ஒளிப்பதிவுடன் உருவாக்கபட்டுள்ள இப்படம் வைஸ்ராய் இல்லத்தின் பிரம்மாண்டத்தைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. இன்றைய ஜனாதிபதி மாளிகையே அன்றைய வைஸ்ராய் மாளிகை.  ஆகவே அதன் [...]

ஷார்ஜா – 3

அபுதாபி நண்பர்களுடன் ஷேக் சையத் மசூதிக்குள் நுழைந்த போது கனவுலகிற்குள் நுழைந்தது போலவே இருந்தது. சலவைக்கல்லால் உருவாக்கபட்ட பெருங்கனவாகக் கலைநுட்பத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தது மசூதி. நவீனகாலத்திலும் மரபின் தொடர்ச்சியாகக் கட்டிடக்கலையை வளர்த்தெடுக்கமுடியும் என்பதற்கான சாட்சியாக நின்று கொண்டிருந்தது இம் மசூதி. கவிழ்த்திவைக்கபட்ட வெண்ணிற கும்பா போன்ற பிரம்மாண்டமான குவிமாடங்கள். இருபுறமும் மிதமான நீலவெளிச்சம், நான்கு பக்கமும் வான்நோக்கி உயர்ந்திருக்கும் மினார்கள். செம்பினால் செய்யப்பட்டுப் பொன்பூச்சுப் பூசப்பட்ட வேலைப்பாடுகளுடன் தூண்கள், சுவர்களில் பூவேலைப்பாடுகள். நடைபாதையெங்கும் மஞ்சளும் சிவப்பும் கலந்த [...]

சிங்கப்பூரில்

Singapore Writers Festival 2017 லில் கலந்து கொள்வதற்காக வெள்ளிகிழமை சிங்கப்பூர்  செல்கிறேன். மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன் 11/11/2017 1:30 – 3:00pm The Arts House (Screening Room) இளம் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும் எழுத்துலகில் அவர்களுக்குக் காத்திருக்கும் வாய்ப்புகளையும் பற்றிய குழு விவாதம் , அதை ஒருங்கிணைத்து நடத்துகிறேன் •• 12/11/2017 2:30-3:30pm The Arts House (Screening Room) அறத்திற்கு அப்பால் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் அற இலக்கியங்களின் பங்களிப்பு [...]

ஷார்ஜா பயணம் – 2

எந்த வெளிநாட்டிற்குப் போனாலும் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களை நான் காண்பதில்லை. ஒருவேளை அந்த இடம் மிகவும் முக்கியமானது எனக்கருதினால் ஊருக்குக் கிளம்பும் கடைசி நாளில் அதைக் காண்பேன். ம்யூசியம், ஆர்ட் கேலரி, பழமையான கோட்டைகள். நினைவகங்கள், இசைக்கூடங்கள், நூலகங்கள், புத்தக கடைகள், அறிவியல் கண்காட்சிகள், இயற்கை எழில் நிரம்பிய இடங்கள்  இவற்றைத் தான் விருப்பமாகத் தேடிச் சென்று காண்பேன். இசைநிகழ்ச்சிகள். நாடகங்கள். கலைநிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்ப்பேன். ஆகவே துபாய், ஷார்ஜா பயணத்திலும் ம்யூசியம் ஆர்ட் [...]

அலையின் உயரம்

மதுரை மாவட்டத்தில் நடக்கும் கந்துவட்டி பிரச்சனைகளைப் பற்றி நன்கு அறிவேன் அப்படி பாதிக்கபட்ட குடும்பம் ஒன்றினைப் பற்றி அலையின் உயரம் என்ற சிறுகதையை ஆறுமாத காலத்தின் முன்பாக எழுதினேன். ஆனால் பிரசுரத்திற்கு அனுப்பவில்லை. புதிய சிறுகதை தொகுப்பில் இடம்பெறட்டும் என வைத்திருந்தேன் தினமணி இதழுக்காகக் கதை வேண்டும் என நண்பர் பாவை சந்திரன் கேட்டு வாங்கினார். தற்போது கந்துவட்டி காரணமாக இசக்கிமுத்துக் குடும்பம் தற்கொலை செய்து கொண்ட சூழல் இக்கதையை முக்கியமாகிவிட்டது. இந்த வார தினமணி கதிரில் [...]

ஷார்ஜா பயணம்

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி உலகின் மூன்றாவது மிகப்பெரிய கண்காட்சியாகும். இதில் 64 நாடுகள் பங்கேற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் இந்தப் புத்தகத் திருவிழா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்றது. பதினைந்து லட்சம் புத்தகங்களுக்கும் மேலாக இடம்பெற்றிருந்தன. . இந்தப் புத்தகக் கண்காட்சி ஷார்ஜாஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி அவர்களின் கனவு. அவரே நேரடியாகப் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளைத் திட்டமிடுகிறார். வழிநடத்துகிறார் என்கிறார்கள். இவ்வளவு பெரிய புத்தகக் கண்காட்சியை நான் [...]

அந்தி மழை இதழில்

இம்மாத அந்திமழை இதழில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது 06.11.2017

விகடன் தடம் இதழில்

இம்மாத விகடன் தடம் இதழில் தேவதச்சனின் கவிதைகள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்

Archives
Calendar
November 2017
M T W T F S S
« Oct   Dec »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Subscribe

Enter your email address: