2018 January


Archive for January, 2018

திருச்சூரில்

திருச்சூரில் நடைபெறவுள்ள கேரள சாகித்ய அகாதமி நிகழ்வில் கலந்து  கொள்வதற்காக நாளை திருச்சூர் செல்கிறேன். இரண்டு நாட்கள் அங்கேயிருப்பேன்.

ஆட்கள் தேவை

தேசாந்திரி பதிப்பகத்தில் பணியாற்ற ஆபீஸ் பாய், மற்றும் இன்டிசைன் தெரிந்த வடிவமைப்பாளர், புரூப் ரீடர் தேவை. அனுபவம் உள்ளவர்கள் 9600034659 என்ற எண்ணுக்குத் தொடர்பு  கொள்ளவும்

தமிழின் வரலாறு

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாட்டின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து மிகச்சிறப்பான நூலாக எழுதியிருக்கிறார் டேவிட் சுல்மான். தமிழாய்வில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அறிஞர். ஜெருசலம் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் மற்றும் சமய ஒப்பீட்டுத் துறையில்  பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதன் உயராய்வு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். 2000 வருட தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவது எளிதானதில்லை. தனது ஆழ்ந்த வாசிப்பு மற்றும் ஆய்வின் வழியே தமிழ் இலக்கிய வரலாற்றின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுகிறார் சுல்மான். தமிழ் மொழி [...]

‘பத்மாவத்’: வரலாற்றின் மீது படரும் வெளிச்சம்

மிகுந்த சர்ச்சைகளுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளான ‘பத்மாவத்’ திரைப்படத்தைப் பார்த்தேன். வரலாற்றைப் படமாக்குவது எளிதில்லை. பெரும்பொருட்செலவில் பலநூறு மனிதர்களை ஒருங்கிணைத்துப் பிரம்மாண்டமாக படம் இயக்குவது பெரும் சவால். சஞ்சய் லீலா பன்சாலி இதில் பெரும் வெற்றிப் பெற்றிருக்கிறார் . கொண்டாட்டம்தான் படத்தின் ஆதாரத் தொனி. ஒளிரும் ஓவியங்களாக காட்சிகள் நகர்கின்றன. பிரம்மாண்ட அரங்குகள். வியப்பூட்டும் போர்களக் காட்சிகள், இனிமையான ஆடல்பாடல், சிறந்த நடிப்பு என இப்படம் பொழுதுபோக்கு சினிமாவின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. வீண்சந்தேகத்தின் பெயரால் உருவான எதிர்ப்புகள், போராட்டங்கள் [...]

பத்மவிபூஷண் விருது

இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது  இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்குமுள்ள தமிழ் மக்களை தனது இசையால் ஆற்றுப்படுத்தும் இசைமேதைக்கு இந்த விருது அளிக்கபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசைஞானிக்கு என் மனம் நிரம்பிய அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்

லூவரின் பெருமை.

அலெக்சாண்டர் சுக்ரோவ் ரஷ்யாவின் மிகச்சிறந்த இயக்குனர். அவரது இயக்கத்தில் வெளியான Mother and Son, Father and Son, Moloch போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். ரஷ்யாவின் புகழ்பெற்ற Hermitage Museumத்தை ஆவணப்படுத்துவது போலச் சிங்கிள் ஷாட் மூவியாக Russian Ark என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார் சுக்ரோவ். இது சினிமா வரலாற்றில் முக்கியமான படம். இப்படத்தின் பிறகே பல்வேறு நாடுகளிலும் அருங்காட்சியகம் குறித்த திரைப்படங்கள் உருவாகத் துவங்கின. சுக்ரோவின் சினிமா கவித்துவமானது. குறிப்பாக Mother and Son, Father [...]

இந்தப் பிரபஞ்சத்தின் பெயர்-கதை

செங்கதிர் தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர்.  கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் சிறுகதையை செங்கதிர் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அத்துடன் ரேமண்ட் கார்வர் சிறுகதைகளை மொழியாக்கம் செய்து தனியொரு தொகுப்பாகவும் வெளியிட்டிருக்கிறார். வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற அத்தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. செங்கதிர் மொழிபெயர்ப்பில் சென்ற ஆண்டு வெளியான தொகுப்பு இந்தப் பிரபஞ்சத்தின் பெயர்-கதை. இந்தத் தொகுப்பின் சிறப்பு எழுத்தாளர்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட உலகப்புகழ்பெற்ற சிறுகதைகளை கொண்டது என்பதே. செங்கதிரின் மொழியாக்கம் அபாரமானது. வெளியாகி [...]

தேசாந்திரியின் நிழலாக வாசகர்கள்

கடந்த ஆறு நாட்களாக புத்தகக் கண்காட்சியில் வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. வாசகர்களின் மகத்தான ஆதரவும் அன்புமே தேசாந்திரி பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணை. எத்தனை விதமான வாசகர்கள். எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள். புத்தகக் கண்காட்சியில் என்னைச் சந்திக்கும் போது அவர்கள் காட்டும் அன்பு நெகிழச்செய்கிறது. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், அம்பை, சாருநிவேதிதா,சமஸ், மாமல்லன், மருதன், ,  லட்சுமி சரவணக்குமார், சரவணன் சந்திரன், பா.ராகவன், சுந்தர புத்தன்,  கே.என். செந்தில், விஷால் ராஜா, மானா பாஸ்கர், அதிஷா, பரிசல், [...]

வெய்யில்

சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பு வெய்யில் எழுதியுள்ள மகிழ்ச்சியான பன்றிக்குட்டி. புதிய பாடு பொருள். கவிமொழி என அற்புதமாக எழுதியிருக்கிறார். வெயிலின் கவிதைகளை தொடர்ந்து வாசித்துவருபவன். அவரது கவிதை உலகின் அடுத்த கட்டம் இத்தொகுப்பு. கவிதைகளின் தொனியும், வியப்பூட்டும் படிமங்களும் இத்தொகுப்பை மிக முக்கியமானதாக்குகிறது. நூலைச் சிறப்பாக அச்சிட்டுள்ளது கொம்பு பதிப்பகம் ••• மகிழ்ச்சியான பன்றிக்குட்டி தலைமுறை ஒன்று: என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது அதை பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன் என் தேவையைப் பொறுத்து [...]

அஞ்சலி

பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி இன்று காலமானார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஞாநியோடு பழகியிருக்கிறேன். சிறந்த நண்பர். இலக்கியவாதிகளை மிகவும் நேசிக்ககூடியவர். அவர் நடத்திய கேணி நிகழ்வின் முதல் கூட்டத்தை நான் தான் துவக்கிவைத்தேன். சிறந்த பண்பாளர். அவரது மறைவிற்கு என் இதயப் பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Archives
Calendar
January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: