2018 March


Archive for March, 2018

உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.

அனிமேஷன் திரைப்படங்கள் என்றாலே பொதுவாக விலங்குகளின் உலகைச் சித்தரிப்பதாகவோ, அல்லது மாய, விநோத, சாகச கதைகளாகவோ தானிருக்கும். ஹாலிவுட் அனிமேஷன் படங்களை விடவும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள் சிறந்தவை. அப்படங்களின் கதையும் சித்திரங்களும் காட்சிப்படுத்தும் முறையும் அபாரமாகயிருக்கும். அது போலவே ரஷ்ய அனிமேஷன் திரைப்படங்களும் தனித்துவமானவை. ரஷ்ய இலக்கியத்தின் முக்கிய நாவல்கள், நாட்டார்கதைகள் அனிமேஷன் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. பிரிட்டன் அனிமேஷன் திரைப்படங்கள் பெரிதும் ஹாலிவுட் மரபில் உருவாக்கபடுபவை. ஆனால் இன்று பிரிட்டன் தனக்கான தனித்துவமான உருவாக்கதிலும் வெளிப்பாட்டிலும் [...]

காளியின் மைந்தர்கள்

மத்திய இந்தியாவில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தக் அல்லது தக்கீ என அழைக்கபட்டார்கள். ரகசிய குழுக்களாகச் செயல்பட்ட இவர்கள் காளியை வணங்கக் கூடியவர்கள். இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்களாக இயங்கி வந்த இவர்களால் கொலை செய்யப்பட்டவர்கள் ஏராளம். இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். எங்கே மறைந்து போய்விடுகிறார்கள் என்பதைக் கண்டறிவது சிரமம். ஆகவே இவர்களைக் கைது செய்வதோ, கட்டுபடுத்துவதோ எளிதாகயில்லை என்கிறது The Thugs or Phansigars of India என்ற நூல். [...]

செல்லுலாயிட் மேன்

இலக்கியமோ, சினிமாவோ, இசையோ ,ஒவியமோ எதையும் முறையாக ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதிகள் அத்தனையும் நம்மிடமில்லை. பாரதியின் குரல் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள ஒலிப்பதிவு எதுவுமில்லை. தி.ஜானகிராமனின் மோகமுள்ளின் கையெழுத்து பிரதியை ஒருவர் வாசிக்க விரும்பினால் வாய்ப்பே கிடையாது. இது தான் நமது சூழல். சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்கள் கூட முறையாகப் பாதுகாக்கபடவில்லை. அதிலும் குறிப்பாக மௌனப்படங்களில் பெருமளவு அழிந்து போய்விட்டன. இந்திய சினிமாவின் அரிய படங்களைக் காணுவதற்கு உள்ள ஒரே [...]

கவிதையே வாழ்க்கை.

சையத் மிர்ஸா, இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் இந்திய சினிமாவின் நவீன அலை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது வாழ்க்கை மற்றும் திரையுலகப் பங்களிப்பு பற்றிய ஆவணப்படமாக உருவாக்கபட்டுள்ளது Saeed Mirza: The Leftist Sufi. சூபியும் இடது சாரி எண்ணங்களும் கொண்டவர் என்ற தலைப்பே அவரது ஆளுமையின் தனித்துவத்தைக் காட்டுகிறது. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதும் எவ்விதமான மதக்கட்டுபாடுகளும் இல்லாமல் வளர்க்கபட்டதாக நினைவு கூறுகிறார். இவரது பத்து [...]

விருது விழா

நேற்று நடைபெற்ற விருதுவழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  சென்னை நகரின் கலைவாணர் அரங்கம் மிகப்பிரம்மாண்டமானது. அதி நவீன வசதிகள் கொண்டது. அந்த அரங்கம் நிரம்பி ஆட்கள் இருக்கையின்றி நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டார்கள். விழாவில் அத்தனை அரசியல்தலைவர்களும் கலந்து கொண்டது சிறப்பு. நீதியரசர் மகாதேவன், கவிஞர் வைரமுத்து, தமிழருவி மணியன், உள்ளிட்ட பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  என் வாழ்வின் மறக்க முடியாத நாள். நிகழ்வில் கலந்து கொண்ட வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் [...]

நாடற்றவனின் நாட்கள்

Stefan Zweig: Farewell to Europe திரைப்படம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டெபான் ஸ்வேக்கின் அகதி வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஸ்டெபான் ஸ்வேக் (Stefan Zweig). ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர். ஹிட்லரின் நாஜி படைகளால் யூதர்கள் தேடித்தேடி கொலை செய்யப்பட்டார்கள். இந்த இன அழிப்பிலிருந்து உயிர்த்தப்ப முயன்ற எழுத்தாளர்கள். கலைஞர்கள். விஞ்ஞானிகள் பலரும் ஜெர்மனியை விட்டு வெளியேறினார்கள். அப்படி நாட்டை விட்டு வெளியேறி அகதியாக அலைந்து திரிந்தவர் ஸ்வேக். தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் [...]

விழா

பைந்தமிழ் மன்றம் சார்பில் இயற்றமிழ் வித்தகர் என்ற விருது எனக்கு அளிக்கபடவுள்ளது. வைகோ அவர்கள் அதில் சிறப்புரை வழங்குகிறார். நாளை  மார்ச் 16 வெள்ளிகிழமை மாலை ஆறுமணிக்கு  கலைவாணர் அரங்கில் இந் நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் நாளை நடைபெறவுள்ள விருது விழா பற்றிய காணொளிகள் https://www.facebook.com/chandrapraba.ramakrishnan/videos/2035155703418777/ https://www.facebook.com/chandrapraba.ramakrishnan/videos/2034766403457707/ இயற்றமிழ் வித்தகர் விருது – எஸ். ராமகிருஷ்ணன் | S.Ramakrishnan speech https://youtu.be/KPVmF-d2sgA

எழுத்திற்குத் திரும்புதல்

எழுத்தாளர்களின் வாழ்க்கை குறித்து எத்தனையோ ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை எழுத்தாளரின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் படைப்புகள் குறித்த விபரங்கள், நேர்காணல்கள் அடங்கியதாகவே இருக்கும். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு José and Pilar என்ற ஆவணப்படம் நோபல் பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளரான ஹோசே ஸரமாகோவை நிழல் போலப் பின்தொடர்ந்து அவர் ஒரு நாவல் எழுதுவதற்கு எப்படித் தயார் ஆகிறார், அவரது தினசரி வாழ்க்கை எப்படியிருக்கிறது. அவரது காதல்மனைவி பிலாருடன் உள்ள அன்பும் காதலும் எவ்வாறு வெளிப்படுகிறது என [...]

வெயிலைக் கொண்டுவாருங்கள்/ ஈபுக்

எனது வெயிலைக் கொண்டு வாருங்கள் சிறுகதைத் தொகுப்பு ஈபுக்காக வந்துள்ளது வெயிலைக் கொண்டு வாருங்கள்: By எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan Kindle eBook ASIN: B07B91YP3M 125 INR https://www.amazon.com/s/ref=nb_sb_noss?url=search-alias%3Daps&field-keywords=ASIN%3A+B07B91YP3M&rh=i%3Aaps%2Ck%3AASIN%3A+B07B91YP3M

இடக்கை நாவல்/ கிண்டிலில்

எனது இடக்கை நாவல் கிண்டில்  ஈபுக்காக கிடைக்கிறது இடக்கை: idakkkai  எஸ்.ராமகிருஷ்ணன் Kindle eBook 300 INR ASIN: B07B934PRF https://www.amazon.com/s/ref=nb_sb_noss?url=search-alias%3Daps&field-keywords=ASIN%3A+B07B934PRF

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: