Day: April 17, 2018

நிலாச்சோறு

கூடி உண்ணும் போது உணவிற்குத் தனிசுவை வந்துவிடுகிறது. அதுவும் நிலாவெளிச்சத்தில் அனைவரும் ஒன்று கூடி அருகமர்ந்து உண்ணுவது இன்பமானது. சிறுவயதில் பல இரவுகள் அனைவரும் ஒன்றுகூடி அமர ஆச்சி சோற்றை உருட்டி உருட்டி தருவார். அந்த உருண்டைக்கென்றே தனிருசியிருந்தது. அந்தக் காலத்தில் சித்ரா பௌணர்மி நாளில் ஆற்றின் கரைகளுக்குச் சென்று உணவருந்தும் வழக்கமிருந்தது. வண்டி போட்டுக் கொண்டு ஆற்றின் கரைதேடி போவோம். மணலில் அமர்ந்தபடியே நிலவின் வெண்ணொளியை ரசித்தபடியே சாப்பிட்ட நினைவு அடிமனதில் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது திடீரென …

நிலாச்சோறு Read More »

விடுதலை நாயகன்

ஸ்பானிய காலனியாக இருந்த நாடுகளின் விடுதலைக்குப் போராடி லத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர கனவு கண்டவர் சிமோன் பொலிவார். இவரது வாழ்க்கை வரலாறு The Liberator என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது. பொலிவார் வெனிசூலாவின் உயர்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. கிரியோல் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஸ்பானிய அரசில் உயர்பதவிகளை வகித்தார்கள். சிமோனின் குடும்பத்திற்குப் பெரிய பண்ணைகளும், சுரங்கங்களுமிருந்தன. அதில் வேலை செய்யப் பண்ணையடிமைகள் இருந்தார்கள். வெளிநாட்டில் ஆரம்பக் …

விடுதலை நாயகன் Read More »