2018 May 16


Archive for May 16th, 2018

பெங்களுரில்

திரைப்பட பணி ஒன்றின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெங்களுருவில் இருந்தேன். நண்பர்களை சந்திக்க நேரமில்லை. மகாலிங்கம் மட்டும் தினமும் வந்து  சந்தித்து பல்வேறு உதவிகள் செய்து கொடுத்தார். தேர்தல் நடக்கிற பரபரப்பே இல்லாமல் இருந்தது.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை. வெயிலே தெரியவில்லை.  நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்பினார்கள்.  பணிச்சூழல் காரணமாக சந்திக்க இயலவில்லை.  விரைவில் பெங்களுருவில் ஒரு வாசக சந்திப்பை நடத்தலாம் என திட்டமிட்டு வருகிறேன். ஏற்பாடுகள் முடிந்தவுடன் அறிவிக்கிறேன் [...]

அந்திமழையில்

இம்மாத அந்திமழை இதழில் காற்றைப் போல பயணி என்ற கட்டுரை வெளியாகியுள்ளது நன்றி அந்திமழை அசோகன் ••

அவரும் நானும்

அவள் விகடன் இதழில் வெளியாகியுள்ள வசந்தா அக்கா குறித்த கட்டுரை. அன்பு அக்கறை அக்கா! – எஸ்.ராமகிருஷ்ணன் அவரும் நானும் ஆர்.வைதேகி “ `அவளும் நானும்’ என்பதை `அவரும் நானும்’ என மாற்ற முடியுமா? `அவள்’ எனக் குறிப்பிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது’’ – பேட்டிக்கு முன்பான கோரிக்கையின் முதல் வரியிலேயே பெண்களின் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமானவராக நிற்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். “அவளை, `அவர்’ என்றே குறிப்பிடுவோம்!’’ என்று உறுதியளித்த பிறகே பேசவும் சம்மதிக்கிற அவரது மாண்பு மகிழ்ச்சியளிக்கிறது. [...]

புதிய தொடர்

தி இந்து குழுமம் துவங்கியுள்ள காமதேனு இதழில் புதிய பத்தி ஒன்றை துவங்கியிருக்கிறேன். முடிவற்ற சாலை என்ற இந்த பத்தி எனது பயண அனுபவங்களை முன்னிலைப்படுத்துகிறது

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: