2018 July


Archive for July, 2018

பப்புவின் காலணி

புதிய சிறுகதை.  (அச்சில் வெளிவராதது.) “பப்பு உனக்காக இன்று காலையில் புது ஷு ஒன்று வாங்கியிருக்கிறேன். உனக்குப் பிடித்திருக்கிறதா“ என வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் என் மகளுக்குத் தகவல் அனுப்பி வைத்தேன். அவள் லண்டனில் வசிக்கிறாள். மருத்துவராக இருக்கிறாள். மறுநிமிசம் அவளிடமிருந்து பதில் தகவல் வந்தது “அப்பா.. என் வயது 37. நீங்கள் என்னை இன்னமும் சிறுமியாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாங்கிய ஷு பத்து வயது சிறுமி அணியக் கூடியது. இது இந்த ஆண்டில் நீங்கள் வாங்கிய [...]

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி

அழிசி மின்புத்தக வெளியீட்டகம் நடத்தும் விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 தமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாங்கள் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நூல் விமர்சனப் போட்டி ஒன்றினை நடத்தி வெல்லும் வாசகருக்கு ஒரு கிண்டில் டிவைஸ் பரிசாக அளிக்க இருக்கிறோம். பரிசு விபரம்: Kindle Paperwhite Starter Pack – கிண்டில், அதற்கான உறை, [...]

இந்திரன் 70

சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் எழுத்தாளர் இந்திரன் அவர்களின் 70-வது பிறந்தநாள்  விழா ஜுலை 29. ஞாயிறு மாலை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

ஒலிநூல்

பார்வையற்றவர்களுக்கு உதவும் படியாக நான் தேர்வு செய்து தொகுத்த தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் நூல் ஒலிப்புத்தகமாக  வெளிவரவுள்ளது. இதனை வாசிப்போம் இணைய தளம் உருவாக்கியுள்ளது. இதன் வெளியீட்டு விழா 28 சனிக்கிழமை மாலை இக்சா மையத்தில் நடைபெறவுள்ளது.  அதில் கலந்து கொண்டு ஒலிப்புத்தகத்தை வெளியிடுகிறேன்

நன்றி

கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியினர் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றுக் கொண்டேன். திரளாக வந்து வாழ்த்திய வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி விருது அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எனது எளிய அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில்  தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 201ல் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு உள்ளன

நம்பி கிருஷ்ணன்

சொல்வனம் இணைய இதழில் நம்பி கிருஷ்ணன் எழுதி வரும் உலக இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரே வார்த்தையில் சொன்னால், அற்புதம். தீவிர வாசிப்பும், செறிவான புரிதலும்.  அந்தப் புரிதலை நூறு சதவீதம் தமிழில் வெளிப்படுத்தும் மொழித்திறனும், சிறந்த மொழியாக்கமும் கொண்ட ஒருவரை நான் கண்டதேயில்லை. அவரது எழுத்து வியக்க வைக்கிறது. நம்பி கிருஷ்ணன் யார். எங்கே வசிக்கிறார் என எதுவும் தெரியாது. ஆனால்  சொல்வனத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை நானே ஒரு PDF [...]

புதிய பதிப்புகள்

தேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 210 மலைகள் சப்தமிடுவதில்லை புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 250 காற்றில் யாரோ நடக்கிறார்கள் புதிய [...]

விருது வழங்கும் விழா

கோவை புத்தகத் திருவிழா  சார்பில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிறார்கள். இந்த நிகழ்வு ஜுலை 20  வெள்ளி மாலை ஆறு மணிக்கு கொடீசியா அரங்கில் நடைபெறவுள்ளது. வாசகர்கள். நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. கடை எண் 201. வெள்ளி மாலையில் அங்கே இருப்பேன். விருப்பமானவர்கள் சந்திக்கலாம். ஞாயிறு மாலையும் புத்தகக் கண்காட்சி அரங்கில் இருப்பேன். ஞாயிறு மாலை (22.07.2018)  கொடீசியா புத்தக கண்காட்சி [...]

கதைகள் செல்லும் பாதை- 9

– தலைகீழ் மாற்றம் எட்கர் கெரெட் (Etgar Keret ) இஸ்ரேல் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1967 இல் டெல் அவிவ் நகரில் பிறந்தவர். சர்வதேசப் புகழ் பெற்ற இவரது நூல்கள் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. நியூயார்க் டைம்ஸ், கார்டியன், பாரிஸ் ரிவ்யூ இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரது பசை (Crazy Glue) என்ற குறுங்கதையை வாசித்தேன். சொல்வனம் இணையஇதழில் இக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 420 சொற்கள் கொண்ட மிகச்சிறிய கதை.. [...]

வைதீஸ்வரனின் கவிதைகள்

எஸ். வைதீஸ்வரன் நவீன தமிழ் கவிதையின் முக்கிய ஆளுமை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருபவர்.. சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் கவிதை எழுதத் தொடங்கியவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மொத்த கவிதைகளின் தொகுப்பான மனக்குருவி வாசித்துக் கொண்டிருந்தேன். நகரவாழ்வின் நெருக்கடியை, தடித்தனத்தை, அவலத்தை, ஆறாத் துயரங்களை, அரிதான சந்தோஷங்களைக் கவிதையில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வைதீஸ்வரன் ஒரு ஒவியர். முறையாக ஒவியர் கற்றவர். ஒவியர் என்பதால் [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun   Aug »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: