2018 July 5


Archive for July 5th, 2018

46 வது தலைமுறை

வெற்றிகரமாக நடத்தப்படும் தொழில்கள் கூட இரண்டோ, மூன்றோ தலைமுறைக்கு அப்புறம் கைவிடப்பட்டுகின்றன. அரிதாக ஜவுளி மற்றும் தங்க நகை வணிகத்தில் ஐந்து தலைமுறை ஒரே தொழிலைத் தொடர்வதைக் காண்கிறோம். ஆனால் ஜப்பானிலுள்ள Hōshi Ryokan என்ற தங்கும்விடுதி ஹோன்சு தீவின் இஷிகவா பகுதியில் கி.பி.718ல் துவங்கப்பட்டு இன்று வரை நடைபெற்றுவருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் இந்தத் தங்கும்விடுதியை தற்போது நடத்திவருபவர் அதன் 46 வது தலைமுறையைச் சேர்ந்தவர். 1300 ஆண்டுகள் ஒரு தொழிலை ஒரு குடும்பம் [...]

கோ யுன் : பத்தாயிரம் வாழ்க்கைகள்

(தடம் இதழில் எழுதி வரும் உலகக் கவிதைகள் குறித்த தொடரின்  கட்டுரை ) ஒவ்வோர் ஆண்டும் தமிழில் நிறைய கவிதை நூல்கள் வெளியாகின்றன. புதுப்புது கவிஞர்கள் அறிமுகமாகிறார்கள். ஆயினும் நவீன கவிதைகள் குறித்த விவாதங்கள், கவிதைக் கோட்பாடுகள், அழகியல் பற்றிய உரையாடல்கள் எதுவும் இலக்கியச் சூழலில் நடைபெறுவதில்லை. பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் சிற்றிதழ்களில் வெளியாவதோடு சரி. அவை உரிய கவனத்தையும் உரையாடலையும் உருவாக்கவில்லை. முக்கியக் கவிஞர்கள்கூட இவற்றைப் பொருட்படுத்தி விவாதிப்பது இல்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. [...]

இசையே வாழ்க்கை

நகலிசைக் கலைஞன் என்ற நூலை நண்பர் ஒருவர் நேற்று பரிசாக அனுப்பியிருந்தார். அதை நேற்றிரவு வாசித்தேன் எங்கள் பகுதியில் ஊருக்கு ஊர் பொருட்காட்சி நடைபெறும். அதன் சிறப்பே மிகச்சிறந்த மெல்லிசை நிகழ்ச்சிகள். எம்.எஸ்.வி. சங்கர் கணேஷ், கங்கை அமரன் துவங்கி உள்ளுர் கலைஞர்கள் வரை பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபலமான பாடகர்களும் வருதுவண்டு. ஏழு மணிக்கு துவங்கி இரவு பனிரெண்டரை வரை கச்சேரி நடைபெறும். சில நாட்கள் கச்சேரி நீண்டு மூன்று மணியாகியிருக்கிறது. மக்கள் [...]

புதிய இசை

சிறந்த கவிஞரும் பாடகருமான நண்பர் ரவி சுப்ரமணியன் சங்கக் கவிதைகளில் தேர்வு செய்த சில பாடல்களுக்கு இசை அமைத்து வருகிறார். அதில் ஒரு பாடலை அனுப்பியிருந்தார். அற்புதம். மிகச்சிறந்த இசையமைப்பு. குரல். பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். தனியான ஒரு இசைத்தொகுப்பாக இந்த பாடல்கள் வெளியானால் மிகுந்த வரவேற்பைப் பெறும். நண்பர் ரவி சுப்ரமணியனுக்கு என்  மனம் நிரம்பிய வாழ்த்துகள் மூன்று குறுந்தொகைப் பாடல்களின் ஐ கிளவுட் லிங்க்ஸ் https://soundcloud.com/ravisubramaniyan/41-kurunthokai-41 https://soundcloud.com/ravisubramaniyan/28-kurunthaokai-28 https://soundcloud.com/ravisubramaniyan/20-kurunthokai-20

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun   Aug »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: